பறந்து செல்ல வா- திரைப்பட விமர்சனம்
கண்ணில் படும் பெண்களையெல்லாம் காதலிக்கும் நாயகன் லுத்புதின் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை விஷயமாக செல்கிறார், அங்கு நண்பன் சதீஷ், ஜோ மல்லூரி, ஆனந்தி ஆகியோருடன் ஒரே வீட்டில் தங்குகிறார். அங்கேயும் வழக்கப்படி ஒவ்வொரு பெண்ணையும் பார்த்த்து அவர்களிடம் காதலை சொல்லி அவமானப்படுகிறார் லுத்புதீன். இதனால், தன்னுடன் தங்கியிருக்கும் நண்பர்களின் கிண்டலுக்கு ஆளாகிறார்.

யாரையாவது காதலிப்பதுபோல் நண்பர்களிடம் காட்டி வாயை அடைக்க முடிவு செய்கிறார் லுத்புதீன். அதற்காக ஆபீஸ் நண்பன் ஆர்ஜே.பாலாஜி உதவியுடன் தனக்கு ஒரு காதலி பேஸ்புக் மூலம் கிடைத்திருப்பதாக செட்டப் செய்து பிலிம் காட்டுகிறார் லுத்புதீன்.. இதற்காக யாரென்றே தெரியாத சீனப்பெண்ணான நரேல் கேங்கின் போட்டோவை பேஸ்புக்கில் பயன்படுத்துகிறார்.
இந்நிலையில் ஊரில் அம்மா அப்பா அவரது திருமணத்துக்காக பார்த்துள்ள பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ் சிங்கப்பூரில் படிப்பதாக கூற, அவரைப்போய் நேரில் பார்த்ததுமே காதலாகிறார் லுத்புதீன்.. இப்போது பேஸ்புக்கில் இவர் தனது காதலியாக சித்தரித்திருந்த சீனப்பெண்ணுக்கு அந்த விபரம் தெரியவர, ஆரம்பத்தில் கோபப்பட்டாலும், லுத்புதீனின் நற்குணங்களால் ஈர்க்கப்பட்டு அவர் மீது காதலாகிறார்.
ஒரு கட்டத்தில் நண்பர்கள் மட்டும் அல்லாது ஐஸ்வர்யாவுக்கும் லுத்புதீனின் இந்த ஏமாற்று வேலை தெரிய வருகிறது.. இன்னொரு பக்கம் சீனப்பெண்ணும் தன்னை திருமணம் செய்யும்படி லுத்புதீனை வற்புறுத்துகிறார். முன்பு காதலி கிடைக்க மாட்டாளா என ஏங்கிய லுத்புதீன் இப்போது இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறார். அவர் யாரை கரம்பிடித்தார் என்பது க்ளைமாக்ஸ்..
அமலா பால் ஓல்ட் ஹஸ்பண்ட இயக்கிய சைவம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த லுத்புதீன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். வெகுளித்தனமான தோற்றத்தை பொருந்தினாலும், நடிப்பில் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும். இத்தனைக்கும் காதல், சோகம், சிரிப்பு என நடிக்க நிறைய வாய்ப்பு இருந்தும் பய்ன்படுத்த தவ்றி விட்டார்.. நாசர் தன் வித்தையை இனும் சொல்லிக் கொடுக்கவில்லை போலும் .ஆனாலும் பாடல் காட்சிகளில் சிறப்பாக நடனமாடியிருக்கிறார். ஒரு சில காட்சிகளில் ரசிக்கும் படியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அழுத்தமான கதாபாத்திரம் அமைய வில்லை என்றாலும் அதை சட்டை செய்யாமல் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார். மற்றொரு நாயகியாக சிங்கப்பூரை சேர்ந்த நார்லேவுக்கு அற்புதமான கதாபாத்திரம். டப்பிங் தான் ஓரளவிற்கு எடுபட வில்லை என்றாலும், காதல், சோகம், சண்டைக் காட்சி என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். காதலுக்காக ஏங்குவது லுத்பூதினை துரத்தி துரத்தி காதலிப்பது என நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார்.
சதீஷின் காமெடி படத்திற்கு பெரிய பலம். இவருடைய டைமிங் காமெடி படத்திற்கு பெரியதளவு உதவியிருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பும் ரசிக்கும் படியாக இருக்கிறது. கருணாகரன், மனோபாலா, ஜோ மல்லூரி, ஆனந்தி, பொன்னம்பலம் ஆகியோர் என காமெடி பட்டாளம் இருந்தும் சிரிப்புக்கு கொஞ்சம் பஞ்சம்தான்
சிம்பிளாக சொல்வதானல் தமிழ் சினிமாவில் வழக்கமான முக்கோண காதல் கதையை வித்தியாசமாக சிங்கப்பூரில் வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் தனபால் பத்மநாபன். ஒரு சில காட்சிகள் மட்டுமே வித்தியாசமாக அமைத்திருக்கிறார். ஆனால், படத்தில் இடம் பெறும் காட்சிகள் எல்லாம் தேடிக் கண்டுபிடித்து கண்களுக்கு குளிர்ச்சியாய் படமெடுத்திருக்கிறார். விளம்பரத்தில் குறிப்பிட்டது போல சிங்கப்பூரை ரசிகர்களுக்கு நன்றாகவே அதுவும் அழகாகவே சுற்றி காட்டுகிறார். சந்தோஷ் விஜயகுமாரின் கேமராவுக்கு ஒரு உம்மா,
மொத்தத்தில்‘பறந்து செல்ல வா’வை சிங்கப்பூருக்காகவே பார்க்கலாம்.


