கடந்த 109 ஆண்டுகளாக இயங்கி வந்த பாம்பன் ரயில் பாலம் ஓய்வு?- வீடியோ

கடந்த 109 ஆண்டுகளாக இயங்கி வந்த பாம்பன் ரயில் பாலம்  ஓய்வு?- வீடியோ

தென் இந்தியாவின் கடைகோடியான ராமேஸ்வரம் என்றால் உடன் நினைவுக்கு வருவது பாம்பன் பாலம் தான். இதன் வரலாற்றை புரட்டிப் பார்த்தோமானால் பாம்பன் ரயில் பாலம் ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுச் சென்ற அரிய பொக்கிஷம் ஆகும். இந்த பாலத்திற்காக 146 இரும்பு தூண்கள் கடலுக்குள் அமைக்கப்பட்டு, இரண்டாயிரத்து 340 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தையும் பாம்பன் தீவையும் இணைக்கிறது. ஆனால் நுறாண்டைக் கடந்தும் கனமழை, புயல் என பல்வேறு இயற்கை சீற்றங்களை சந்தித்த பாம்பன் பாலம் வலுவிழந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியதால் மூட முடிவெடுத்த நிலையில் கடைசியாக அணிவகுத்து கடந்து சென்ற 40 க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள்.பாம்பன் சாலை பாலத்தில் நின்று கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், உள்ளூர் பொதுமக்களின் மனதில் பல சிந்தனைகள் வந்து போனதை அறிய முடிந்தது.

1913 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் அந்த பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. பாலத்தின் கட்டுமானம் 1902 இல் தொடங்கியது. இதற்கு தேவையான அனைத்து விதமான கட்டுமான பொருட்களும் இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

அதன் பிறகு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் வட்டத்திற்கு சிறிய படகில் அனுப்பப்ட “டபுள் லீப் கான்டிலீவர்” வகை பாலம் ஒரு தொங்கு பாலத்துடன் கட்டப்பட்டது, இது நடுக்கடலில் கப்பல்கள் செல்லும்போது வழி திறக்கும்.

பாலத்தை வடிவமைத்த ஜெர்மன் பொறியாளர் ஷெர்கர் பெயரிடப்பட்டது. பாம்பன் பாலம் பிப்ரவரி 24, 1914 இல் திறக்கப்பட்டது. அதே நாளில், இலங்கையில் தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே சரக்கு போக்குவரத்து தொடங்கியது.

பாம்பன் பாலத்தை கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர்கள் அப்போது 100 ஆண்டு உத்தரவாதம் அளித்தனர். கூடுதலாக, அப்பால் 109 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

பாலம் அமைந்துள்ள பகுதியில் உள்ள சென்சார் கருவிகளின் சமீபத்திய அதிர்வுகள் மற்றும் எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு, பாம்பன் பாலத்தில் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்துவதால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

விபத்துகள், புயல்கள் மற்றும் பிற காரணங்களால் பாம்பன் பாலம் போக்குவரத்துக்கு பல முறை மூடப்பட்டது. கொரோனா நெருக்கடி காலத்தில் மட்டுமே நீண்ட காலமாக பாலங்களில் ரயில்கள் ஓடவில்லை. இந்நிலையில்இனி ரயில் கடந்து செல்லாது என்ற அறிவிப்பு ராமநாதபுரம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

அதே சமயம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் 2.07 கிமீ தூரத்திற்கு புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பாலம் 101 தூண்களின் மேல், 99 இரும்பு கர்டர்கள் மீது இரு வழித்தடத்திற்கான தண்டவாளங்களுடன் அமைய உள்ளது.

பாலத்தின் மையப்பகுதியில் 72 மீட்டர் நீளத்தில் கப்பல் செல்வதற்காக செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கப்படுகிறது. மின்சாரம் மற்றும் ஹைட்ராலிக் சிஸ்டம் முறையில் அமைக்கப்படும் செங்குத்து தூக்குப்பாலத்தில், நடுவில் அமையும் தண்டவாளம் பகுதியை தூக்குவதற்காக இரண்டு பக்கமும் 35 மீட்டர் உயரத்தில் செங்குத்து தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தூக்குப்பாலத்தின் மையப்பகுதியை உருவாக்கும் பணி முடிந்த நிலையில், இதனை ரயில் பாலத்துடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. புதிய பாலத்தில் ரயில்களை இயக்கி வெள்ளோட்டம் பார்த்து 2024 ஜனவரி மாதத்தில் புதிய ரயில் பாலம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!