பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷாரஃப் -புக்கு தூக்கு தண்டனை!

பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷாரஃப் -புக்கு தூக்கு தண்டனை!

ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்துவிட்டு அதிகாரத்திற்கு வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷாரஃப் (76) மீதான தேசத் துரோக வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானில் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்து, கடந்த 1999ம் ஆண்டில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி 2008ம் ஆண்டு வரை அதிபராக ஆட்சி புரிந்தவர் பர்வேஸ் முஷரப் (வயது 76). இவர் தனது ஆட்சியின்போது 2007ம் ஆண்டு, நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அப்போது, அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன், மூத்த நீதிபதிகளை சிறையில் அடைத்தார். 100க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்கினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, பர்வேஸ் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2014ம் ஆண்டு பெஷாவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பர்வேஸ் முஷாரப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில், 2 நீதிபதிகள் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பை உறுதிபடுத்தினர்.

இதனிடையே கடந்த 2008-ஆம் ஆண்டு பொதுத் தோதலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றியடைந்து, முஷாரஃபுக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கையைத் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து தனது பதவியை ராஜிநாமா செய்த முஷாரஃப், நாட்டை விட்டு வெளியேறி தற்போது துபையில் வசித்து மருத்துவ சிகிச்சை எடுத்து  வருகிறாா்.

Related Posts