ஆணுறை வாங்கக் கூட ஆதார்? – ப.சிதம்பரம் காட்டமான கேள்வி,
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்திக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் காரசாரமான விவாதம் நடந்தது.
நாராயண மூர்த்தி: நவீனம் அடைந்த மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் டிரைவிங் லைசென்ஸ் வடிவில் தனிநபர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவது அவசியம் ஆகும். அதே சமயத்தில் அந்த அடையாளத்துவத்தால் அந்தரங்க உரிமைகள் மீறப்படக்கூடாது.
சிதம்பரம் ; ஒவ்வொரு செயலுக்கும் ஆதார் அவசியம் என்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு வாலிபர் ஆணுறை வாங்குவதாக இருந்தால் எதற்காக அவர் ஆதார் அட்டையை காட்டவேண்டும் அல்லது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும். நான் என்ன மருந்து வாங்குகிறேன் என்று அரசிடம் ஏன் தெரிவிக்கவேண்டும்.. எந்த சினிமாவுக்கு நான் போகிறேன்.. எந்த ஓட்டலில் நான் தங்குகிறேன்.. யார் எனது நண்பர்கள்.. இதை எல்லாம் ஏன் அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்.
நாராயணமூர்த்தி: இதில்நான் மாறுபடுகிறேன். நீங்கள் சொல்வது எல்லாம் இப்போது கூகுள் மூலமாகவே கிடைக்கும்.
சிதம்பரம்: எனது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை நான் இணைக்கவில்லை. இது தொடர்பாக ஜனரி 17ம் தேதி தான் ஐந்து நீதிபதிகள் பெஞ்ச் விசாரணை நடத்த இருக்கிறது. எனவே அது வரைபொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டேன். அனைத்து ஆதார் இணைப்புகளையும் மக்கள் விருப்பப்படி செய்வதில்லை. எஸ்.எம்.எஸ், மெயில்கள் எல்லாம் தடைபடுமே என்பதற்காக அதை ஒருகருவியாக பயன்படுத்துகிறார்கள். அவ்வளவு தான். எனது கேள்வி எல்லாம்…பல்வேறு நிறுவனங்கள் இப்போது ஆதார் கார்டை கேட்கின்றன. ஏன் சுடுகாட்டில் கூட ஆதார் எண் கேட்கிறார்கள். ஆதாருக்கு நான் எதிரி அல்ல. ஆனால் தனிநபர் விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு இது வழிவகுக்கும் என்றே கூறுகிறேன்.
நாராயணமூர்த்தி: தனிநபர் தகவல்கள் பாதுகாக்கும் வகையில் எம்.பி.க்கள் சட்டம் கொண்டுவராதது ஏன்..
சிதம்பரம்: தவறு செய்கிறவர்கள் தான் ஆதார் பயன்பாட்டை எதிர்ப்பதாக கூறுவதை மறுக்கிறேன். மறைப்பதற்கு எதுவும்இல்லை. தேவைப்பட்டால் விசாரணை அமைப்புகள் எந்ததகவலையும் பெற்றுக்கொள்ளலாம்.ஆனால் தனிநபர்தகவல்கள் ஹேக் செய்யப்படக்கூடாது. எனது ஆதாரை அரசாங்கத்தில்உள்ள பெரிய அண்ணன்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. இது தான் எனது ஆட்சேபம். ஆதார் அட்டையை கொண்டு வந்ததே ஐ.மு. அரசுதான். அரசின் திட்ட பலன்கள் பயனாளிகளுக்கே நேரடியாக போய்ச் சேரவேண்டும். இடைத்தரகர்களிடம் அரசின்நிதி போய் விடாமல்தடுக்கவே இந்த ஏற்பாடு. அரசு மானியம் அல்லது நிதி மாற்றப்படாத பட்சத்தில் ஆதார் எண்ணை இணைக்கவேண்டிய அவசியமே இல்லை. அப்படிச் செய்வதால்கடுமையான விளைவுகள் ஏற்படும். ஆனால் இதை எல்லாம் இந்த அரசு காதில் வாங்கிக்கொள்ளாமல் முற்றிலும் செவிடாகவே மாறிவிட்டது. சூரியனுக்கு கீழ் உள்ள அனைத்தையும் ஆதார் எண்ணுடன் இணைப்பதிலேயே குறியாக இருக்கிறது.
நாராயணமூர்த்தி: அதிகாரிகள் அப்படி எல்லாம் செய்யமாட்டார்கள் என்று உறுதி அளிக்கிற பொறுப்பு பார்லிமென்டுக்க உள்ளது. உங்களிடம் தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளனவே. ஆதார் என்பது தனிநபர் ஒருவரின் விவரங்களை ஆய்வு செய்வது மட்டுமே. அது எளிதானது. இதில் அந்தரங்க விவகாரம் எதுவுமே கிடையாது. இது டிரைவிங் லைசென்ஸ் மாதிரி தான். இதில் அந்தரங்க உரிமை மீறல் எதுவும் கிடையாது.
சிதம்பரம்: மூர்த்தி மென்மையான அப்பாவியாக இருக்கிறார். தனியார் செய்வார்கள்.
நாராயணமூர்த்தி: அந்தரங்கத்தை காக்க சட்டங்கள் இருக்கிற வரை எந்த பிரச்னையும் இல்லை. சினிமா டிக்கெட் பதிவு செய்ய அல்லது வேறு விவகாரத்துக்கு ஆதார் எண் தேவை என்று நான் சொல்லவில்லை.
சிதம்பரம்: உங்களோடு நானும் ஒத்துப் போகிறேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.



