June 2, 2023

ப. சிதம்பரம் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக முடிவு! – முழு பின்னணி!

எக்ஸ் ஃபைனான்ஸ் மினிஸ்டர் சிதம்பரத்தை அரெஸ்ட் செஞ்சே ஆகோணும் என்று புது ஹோம் மினிஸ்டர் அமித் ஷா அதீத ஆர்வம் காட்டுவதன் பின்னணி குறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்த போது, “ரொம்ப நாள் பகையை தீர்க்க பாஜக ட்ரை பண்ணுது ..அதாவது 2010-ம் ஆண்டு ப.சிதம்பரம் சென் டரல் கவர்மெண்ட்டின் ஹோம் மினிஸ்ட்ரா இருந்த போது, குஜராத் உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தார். அந்தச் சமயத்தில், குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷாவைக் குற்றவாளி என்று கூறியது சி.பி.ஐ. இதனால அமித் ஷாவைக் கைதுசெய்யும் நிலை வந்தபோது அவர் தலைமறைவாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த வழக்கில் சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர், 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இதற்குப் பின்னால் ப.சிதம்பரத்தின் அழுத்தமிருந்ததாக அப்போது அமித் ஷா தரப்பினர் கருதினர்.

அப்படி செய்யாத தப்புக்கு ஜெயிலுக்கு போய் திரும்பி வந்த அமிஷ்தா தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கிறார். அவருடைய கட்டுப்பாட்டில்தான் சி.பி.ஐ. நிர்வாகம் உள்ளது. அவர்தான் `ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுக்கப்பட்டால், உடனடியாக அவரைக் கைதுசெய்ய வேண்டும். மேல்முறையீடு செல்லும்வரை காத்திருக்க வேண்டாம்’ என்று நேற்று காலையே சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாகத் தகவல் வெளியானது.

ஆனால், நேற்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதும் அங்கிருந்து வெளியேறிய சிதம்பரம், நேராக அவருடைய டெல்லி இல்லத்துக்குச் சென்றார். அதற்குள் அவரை விசாரணைக்கு அழைக்கும் சம்மனைத் தயார்செய்யும் வேலையில் சி.பி.ஐ அதிகாரிகள் இறங்கினர். முறைப்படி சம்மனை அவருக்குக் கொடுத்து சி.பி.ஐ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்துக் கைது செய்யும் முடிவில் அதிகாரிகள் இருந்துள்ளனர். ஆனால், வீட்டுக்கு வந்த ப.சிதம்பரம் உடனடியாக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபில் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின்படியே, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து விட்டு வீட்டிலிருந்து வெளியேறி தன் போனையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டார்.

இதனிடையே சிதம்பரம் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் மேலிடத்தில் நீண்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது. `சிதம்பரம் கைதுசெய்யப்பட்டால் அது கட்சிக்கு மிகப்பெரிய கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடும்’ என்று சோனியா கருதியுள்ளார். ஜன்பத் சாலையில் உள்ள சோனியாவின் வீட்டிலிருந்தே, `சிதம்பரம் விஷயத்தில் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெறவேண்டும்’ என்று வழக்கறிஞர்களிடம் தெரிவித்துள்ளனர். மறுபுறம், அமித் ஷா தரப்பு எப்படியும் இரவுக்குள் அவரைக் கைது செய்யவேண்டும் என்று சி.பி.ஐ-க்கு அழுத்தம் கொடுக்க, நள்ளிரவு நேரத்தில் சிதம்பரம் வீட்டில் அழைப்பாணை நோட்டீஸை ஒட்டியுள்ளனர் அதிகாரிகள்.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதுவரை விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு வேண்டும் என்று சிதம்பரம் தரப்பிலிருந்து சி.பி.ஐ-க்குப் பதில் மனு அளிக்கப்பட்டு விசாரண நிலைக்கே வரவில்லை. இனி இரண்டு நாட்களுக்கு விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்து   சி.பி.ஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகிவிட்டு, சிறைக்குச் செல்லும் மனநிலைக்கு சிதம்பரம் வந்துவிட்டார் என்றும் நாளை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சான்ஸ் அதிகம் என்றும் சொல்கிறார்கள். நாளை ஆஜராகி கைதானால் கூட நாளை மறுநாள் ஜாமினில் வெளி வந்து விட வாய்ப்பிருப்பதால் இப்படி முடிவெடுத்திருக்கிறார் என்கிறார்கள்