?ஆந்திர எம்ஜிஆர் ? என்றழைக்கப் பட்ட? என்டிஆர்? மறைந்த தினமின்று:?
‼ஆந்திரப் பட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கி, ஆந்திர முதல்-மந்திரியாகவும் பதவி வகித்த என்.டி. ராமராவ், சில தமிழ்ப்படங்களிலும் நடித்துள்ளார். ஆந்திராவில், விவசாய குடும்பத்தில் 1923-ல் என்.டி. ராமராவ் பிறந்தார். விஜயவாடாவில் கல்லூரியில் படித்து, ‘பி.ஏ’ பட்டம் பெற்றார்.
‼கல்லூரி மாணவராக இருந்தபோதே நாடகங்களில் நடித்தார். பின்னர், பிரபல தெலுங்கு நடிகர் ஜக்கையா நடத்திய நாடகங்களில் நடித்தார். பின்னர் திரை உலகில் புகுந்தார். ‘மானதேசம்’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார்.
‼அந்தப்படம் வெற்றிகரமாக ஓடியதால், நிறைய பட வாய்ப்புகள் வந்தன. விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த ‘பாதாள பைரவி’ என்ற படம், ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் தயார் ஆகியது. என்.டி.ராமராவ் கதாநாயகனாகவும், கே.மாலதி கதாநாயகியாகவும் நடித்தனர்.
‼இது மாயாஜாலங்கள், வீரதீரச் செயல்கள் நிறைந்த படம். பயங்கர மந்திரவாதியாக எஸ்.வி.ரங்காராவ் நடித்தார். 17-5-1951-ல் வெளியான இந்தப்படம், மெகாஹிட் படமாக அமைந்தது. இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் பின்னணி பாடகர் கண்டசாலா. ‘அமைதி இல்லாத என் மனமே’, ‘பிரேமபாசத்தால் வலையில் வீழ்ந்தான்’ முதலான பாடல்கள் ரசிகர்களின் செவி களில் ரீங்காரமிட்டன.
‼இந்தப் படத்தின் டைரக்டர் கே.வி.ரெட்டி. ஒரே சமயத்தில் தமிழ் நாட்டிலும், ஆந்திராவிலும் புகழ் பெற்ற என்.டி.ராமராவ், ‘கல்யாணம் பண்ணிப் பார்’ (1952) என்ற படத்தில் நடித்தார். தமிழிலும், தெலுங்கிலும் வெளிவந்த முழு நீள நகைச்சுவைப் படம் இது. இதில் ராமராவுக்கு ஜோடி ஜி.வரலட்சுமி. இரண்டாவது கதாநாயகியாக சாவித்திரி நடித்தார். இந்தப் படத்திற்கும் இசை அமைத்தவர் கண்டசாலாதான். பல பாடல்கள் `ஹிட்’ ஆயின. விஜயா புரொடக்ஷன்ஸ் தயா ரிப்பான இப்படத்தை எல்.வி.பிரசாத் டைரக்ட் செய்திருந்தார். இதன்பின் தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார், ராமராவ். தெலுங்குப் படங்களில் அதிகம் நடித்தார்.
‼இவர் பானுமதியுடன் தெலுங்கில் நடித்த ‘மல்லேஸ்வரி’ என்ற படம் மிகச்சிறந்த படம் என்று போற்றப்பட்டது. ‘சந்திரஹாரம்’, ‘மாயா பஜார்’ ஆகிய படங்கள் தமிழிலும், தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டன. இரு மொழிப் படங்களிலும் ராமராவ் நடித்தார். ‘மாயாபஜார்’ படத்தில் கிருஷ்ணனாக நடித்தார். அதன் பிறகு, கிருஷ்ணன் வேடம் என்றால் என்.டி.ராமராவ்தான் என்ற நிலை ஏற்பட்டது.
‼கிருஷ்ணா பிக்சர்சார் தமிழில் தயாரித்த ‘மருமகள்’ என்ற சமூகப் படத்தில், பத்மினியின் ஜோடியாக ராமராவ் நடித்தார். எம்.ஏ.வி.பிக்சர்ஸ் தமிழில் தயாரித்த ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் ராமராக நடித்தார். இதில் சீதையாக பத்மினியும், பரதனாக சிவாஜிகணேசனும் நடித்தனர். பி.ஆர்.பந்துலு டைரக்ஷனில் சிவாஜி நடித்த ‘கர்ணன்’ படத்தில், கிருஷ்ணனாக ராமராவ் நடித்தார். ஆந்திர ரசிகர்கள், என்.டி.ராமராவை கிருஷ்ணனாகவும், ராமராகவும் எண்ணி வழிபட்டனர்.
‼தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ‘அ.தி.மு.க.’வைத் தொடங்கி 1977 தேர்தலில் ஆட்சியைக் கைப் பற்றி முதல்-அமைச்சர் ஆனார். அதுபோல், ஆந்திராவின் மெகா சூப்பர் ஸ்டார் என்.டி. ராமராவும் ‘தெலுங்கு தேசம்’ கட்சியைத் தொடங்கி, 1983-ல் ஆட்சியைப் பிடித்தார்.
‼பின்னர் 1989 தேர்தலில் என்.டி.ராமராவின் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந் தது. 1994-ல் நடந்த தேர்தலில் என்.டி.ராமராவ் மீண்டும் வென்று, முதல்-அமைச்சர் ஆனார். பேராசிரியை சிவபார்வதியை என்.டி.ராமராவ் மணந்ததால், அவருக்கும் அவர் மருமகன் சந்திரபாபு நாயுடுவுக்கும் மோதல் ஏற்பட்டது.
‼அதனால் என்.டி.ராமராவ் ஆட்சியை இழந்தார். என்.டிராமராவுக்கு இருந்த செல்வாக்கு, சந்திரபாபு நாயுடுவிடம் சென்றுவிட்டது. 1996 ஜனவரி 18-ந்தேதி தனது 76-வது வயதில் ராமராவ் காலமானார்.?