மணியார்டர் செய்ய ஆங்கிலமோ, இந்தியோ தெரியணுமாக்கும்!
உலகிலேயே அதிகமான அஞ் சல் நிலையங்களைக் கொண்டது இந்தியா. இங்கு 1,54,866 கிளை களுடன் அஞ்சலகங்கள் இயங்கு கிறது. இதில் 21 சதுர கி.மீ. அளவுக்கு, சுமார் 6 ஆயிரம் நபர்களுக்கு ஒரு அஞ்சல் அலுவல கம் தற்போது செயல்படுகிறது. நகர்புறத்தில் 1,39,040 கிளைகளும், கிராமப்புறத்தில்15,826 கிளைகளு டன் செயல்படுகிறது. இந்த அஞ்சல கங்களில் 4,66,903 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

1951-ம் ஆண்டு ஏர் மெயில் மணியார்டர் வசதி அறிமுகப்படுத் தப்பட்டது. இந்த மணியார்டர் மூலம் பணம் அனுப்பும்போது நாம் சொல்லும் தகவல்களை நம் வட்டார மொழியில் அனுப்புபவர், பெறுபவர் புரிந்துகொள்ளும் வகையில் தகவல் பரிமாற்றமும், பணம் பெற்றுகொண்டதற்கு அடையாளமாக மணியார்டர் அனுப்பியவருக்கு பணம் பெற்றவரின் கையெழுத்துடன் கூடிய ரசீதும் நம் வீடு தேடி வரும் வசதி நடைமுறையில் இருந்து வந்தது.
அஞ்சல் நிலையங்களில் பணி கள் அனைத்தும் 1990-ம் ஆண்டு வரை கையால் எழுதப் பட்டன. 1991-ம் ஆண்டில் இருந்து கம்ப்யூட்டர் கவுண்டர் அறிமுகமானது. ஆனா லும் மனியார்டரில் தெரிவிக்க வேண்டிய தகவல்களையும், பணம் பெற்றதற்கான ரசீதும் வீடு தேடி வரும் வகையில் அஞ்சலகங்கள் செயல்பட்டு வந்தன.
தற்போது அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டதால் மணியார்டர் அனுப்பும்போது அனுப்புபவர், பெறுபவர் முகவரி, தகவல் தெரி விக்கவேண்டியது அனைத்தும் ஆங்கிலத்தில்தான் எழுத முடியும். மேலும் பணம் பெற்றுக்கொண்டார் களா இல்லையா என்பதை பணம் அனுப்பிய அஞ்சல் அலுவலகத் துக்குச் சென்று தெரிந்து கொள்ள வேண்டும். ரசீது வீட்டுக்கு வரும் நடைமுறை ரத்து செய்யப்பட் டுள்ளது.
தமிழில் எழுதினால் அஞ்சலகங்களில் உள்ள கணினிகள் ஏற்றுக் கொள்ளாது. அப்படி ஏற்றுகொள் ளக் கூடிய மென்பொருள் வசதி இங்குள்ள கணினியில் இதுவரை (இன்ஸ்டால் செய்யவில்லை) புகுத்தவில்லை என்று அஞ்சல் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக தமிழர் தேசிய முன்னணியின் மாநில இளைஞரணி அமைப்பாளர்கள் “நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொது தகவல் அலுவலருக்கு ஒரு தகவலுக்காக மணியார்டர் அனுப்பிய போது தகவல் எழுதும் இடத்தில் 21 கோடில் உள்ள ஒன்றை எழுத வேண்டும் என்றார்கள். எனக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரியாததால் எதுவும் எழுதாமல் அனுப்பினேன். பணம் எனக்கு மீண்டும் திரும்பி வந்துவிட்டது. தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் இனி மணியார்டர் அனுப்ப முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு வட்டார அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோவிடம் கேட்ட போது, ‘முன்பெல்லாம் கையில் எழுதி விண்ணப்பம் மூலம் அனுப்பிய காரணத்தால், அவரவர் மொழிகளில் மணியார்டர் அனுப்பும் வசதி இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மைய வங்கி சேவை எனப்படும் (சிபிஎஸ்) முறையைப் பின்பற்றி வருகிறோம்.
இது அஞ்சலக தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தால் அறிமுகமான திட்டமாகும். இத்திட்டத்தின்படி, மணி யார்டருக்காக ஒருவர் தருகிற விண்ணப்பத்தை கணினி மூலம் தான் அனுப்ப முடியும். அப்படி, ஒருவர் தகவல்களைத் தமிழில் எழுதி தருகிறபட்சத்தில் அதனை மொழிபெயர்ப்பதில் சிக்கல் ஏற்படக் கூடும். எனவே, ஆங்கிலத்திலும், மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் இந்தியிலும் விண்ணப்பங்களைப் பெறுகிற முறை உள்ளது.
வங்கிகளைப் போல், அஞ்சலக கணினியில் அந்த இரு மொழிகள் மட்டும்தான் பயன்பாட்டில் உள்ளன. இது தொடர்பாக புகார்கள் வருவதைக் கணக்கில்கொண்டு, தமிழ் உட்பட பிற வட்டார மொழிகளின் உள்ளீட்டு வடிவத்தை எங்கள் கணினியில் இடம்பெறச் செய்யும் முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பரிசீலித்து வருகிறோம்’ என்றார்.


