ரிசர்வ் வங்கிப் பணத்தை திருடியதாக சொல்வதா|? ராகுலுக்கு நிதி அமைச்சர் பதில்!

ரிசர்வ் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி தந்துள்ளார்.
மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி நேற்று ஒப்புதல் அளித்தது. இதை விமரிசிக்கும் வகையில் இன்று டிவீட் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடியும், நிர்மலா சீதாராமனும் ரிசர்வ் வங்கியின் பணத்தைக் கொள்ளையடித்து விட்டனர் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தியின் விமரிசனம் குறித்து பேசிய அவர், “ஒவ்வொரு முறையும் ராகுல் காந்தி திருடன், திருடி என்று முழங்கும் போதெல்லாம், எனக்கு மனதில் ஒன்று மட்டுமே தோன்றுகிறது. தன்னால் முடிந்த அளவுக்கு அவர் திருடன், திருடி என்றெல்லாம் பயன்படுத்தினார். ஆனால், மக்கள் அதற்குத் தகுந்த பதிலடியைத் தந்துள்ளனர். அதனால், மீண்டும் அதே வார்த்தை களைப் பயன்படுத்துவதில் என்ன பயன் உள்ளது?
உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கியே ஒரு குழுவை நியமித்தது. அவர்கள்தான் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதில், மத்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை” என்றார்.