நிறங்கள் மூன்று – விமர்சனம்!

நிறங்கள் மூன்று – விமர்சனம்!

சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் ஏக்ப்பட்ட பட நிறுவனங்களின படிகள் ஏறி இறங்குகிறார் நாயகன் அதர்வா. ஒரு ஸ்கூல் டீச்சரான ரகுமான் தன் மகள் அம்மு அபிராமியை காணவில்லை என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமாரிடம் புகார் தருகிறார். இச்சூழலில் அம்மு அபிராமியை லவ் செய்யும் துஷ்யந்த் காணாமல் போன அபிராமியை தேடி அலைகிறார்.. இந்த மூன்று சம்பவங்களும் வெவ்வேறு பாதைகளில் போனாலும் இறுதியில் ஒரு நேர்கோட்டில் வந்து இணைகிறது. அதுதான் நிறங்கள் மூன்று படக் கதை.

திரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் எல்லா பாத்திரங்களும் வாழ்க்கையின் எதார்த்தத்தின் அடிப்படையில் புனையப்பட்டுள்ளது கதைக்கு ஒரு உயிரோட்டத்தை தந்திருக்கிறது.பல காலம் கழித்து அதர்வாவுக்கு நடிப்புத் திறனை காட்டக் கூடிய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.அதை சரியாகப் பயன்படுத்தி ஸ்கோர் செய்து இருக்கிறார். தன்னுடைய கதையை திருடி விட்டார்கள் என்ற தகவல் வரும்போது அதிர்ச்சி, கோபம், அழுகை, விரக்தி என அடுத்தடுத்து அவர் காட்டும் உணர்வுக்குவியல் கிளாஸ். அதற்காக கடவுள் கெட் அப்பெல்லாம் டூ மச். கிளைமாக்ஸ் காட்சியில் தான் நடிப்பில் ஜீனியஸ் என்பதை நிரூபித்து இருக்கிறார் ரஹ்மான். அம்மு அபிராமியும் கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்கிறார்

அடுத்தடுத்த சீன்கள் எப்படி இருக்கும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத வகையில் வைத்திருப்பது படத்தை விறுவிறுவென பறக்க வைக்கிறது. குறிப்பாக போலீஸ் அதிகாரியாக வரும் சரத்குமார் பள்ளி ஆசிரியராக வரும் ரகுமான் அதிர்ச்சி தரும் நடிப்பை வெளியிட்டிருக்கிறார்.!

ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் கருணா மூர்த்தி இப்படத்தை தயாரித்திருக்கிறார்

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அப்படத்தில் எப்படி ஒரு மாறுபட்ட கிளைமாக்ஸ் தந்தாரோ அதே போல் மற்றொரு மாறுபட்ட கதை சொல்ல  முயன்றிருக்கிறார்.ஆனால் அதர்வாவின் கேரக்டருக்கான வடிவமைப்பு. டைரக்டராகும் லட்சியம் கொண்ட இளைஞர் என்ற விஷயத்தை முன்னிறுத்தாமல் எப்போதும் போதை வஸ்துகளை உபயோகிக்கும் காட்சிகளைப் பார்க்கும் நமக்கே ஒரு கட்டத்தில் கிர்- என்று தலை சுற்றுகிறது.குறிப்பாக தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை அதர்வா கதாபாத்திரம் உட்கொள்வது, அதில் திளைப்பது, க்ரியேட்டிவிட்டிக்கும் போதைக்கும் தொடர்பிருப்பதாகப் பேசுவது, அந்தப் போதைப் பொருள்களை ரொமான்டிசைஸ் செய்வது எனத் தேவையில்லாத சீன்களால் முழு படமும் தொய்வடைந்து விடுகிறது. அத்துடன் அவர் குடும்பத்தை விட்டு பிரிவதற்கான காரணமும் சரியாக காட்டப்படவில்லை. அதேபோல, சரத்குமார் ரோல் இன்னும் வலுவாக அமைந்திருக்கலாம். அவருக்கான காட்சிகள் குறைவாக இருப்பதும் கொஞ்சம் ஏமாற்றமளித்தது.

மொத்தத்தில் இந்த நிறங்கள் மூன்று- மங்கல்

மார்க் 2.5/5

error: Content is protected !!