கொரானா வைரஸைக் கட்டுப்படுத்தும் மாத்திரைத் தயார்!

கொரானா வைரஸைக் கட்டுப்படுத்தும் மாத்திரைத் தயார்!

கொரானா காய்ச்சலுக்கு வாய் மூலமாக ஐந்து நாட்களுக்கு சாப்பிடும் மோல்னுபிராவிர் என்ற கேப்ஸ்யூல் மருந்தை அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள மெர்க் நிறுவனமும் ரிட்ஜ்பேக் பயோ தெரபுடிக்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ளன. இந்த கேப்ஸ்யூல் மருந்தை 5 நாளைக்கு சாப்பிட்டால் நோயாளிகள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியமோ அவர்கள் உயிருக்கு இழப்பு ஏற்படும் நிலையோ 50% தடுக்கப்படுகிறது என்று இரண்டு கட்ட முறையான ஆய்வுகளிலும் மூன்றாம் கட்ட பூர்வாங்க ஆய்விலும் தெரியவந்துள்ளது. உருமாறிய டெல்டா, கம்மா மியு கொரானா வகைகளின் தொற்றையும் இந்த மருந்து கட்டுப்படுத்துகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஏஜென்சியின் கமிட்டி ஒன்று ஏற்கனவே கிடைத்துள்ள ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மெர்க் நிறுவனம் அவசர கால பயன்பாட்டு அனுமதி வழங்கக் கோரி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து பொருள் ஏஜென்சியிடம் விண்ணப்பிக்கலாம். மூன்றாவது கட்ட உலகு தழுவிய ஆய்வை தற்பொழுது நிறுத்தி விட்டு பின்னர் தொடரலாம் என்று பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் மெர்க் நிறுவனமும் ரிட்ஜ்பேக் பயோ தெரபுடிக்ஸ் நிறுவனமும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துப் பொருள் ஏஜென்சியிடம் விண்ணப்பம் செய்துள்ளன.

இந்த இந்த இரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மருந்து கேப்ஸ்யூல் உற்பத்தி செய்து வருகின்றன. அமெரிக்க உணவு மற்றும் மருந்துப் பொருள் ஏஜென்சியின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அதன் அடிப்படையில் அமெரிக்க அரசுக்கு 17 லட்சம் கோர்ஸ் மருந்து காப்ஸ்யூல்களை வழங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அமெரிக்கா தவிர வேறு பல நாடுகளும் வாய் மூலமாக சாப்பிடும் இந்த கேப்ஸ்யூல் மருந்துகளை வாங்குவதற்கு மெர்க் நிறுவனம் ரிட்ஜ்பேக் பயோ தெரபுடிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து பொருட்கள் ஏஜென்சியின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் உலக மக்களின் தேவைகளுக்கு வேண்டிய அளவு கேப்ஸ்யூல்களை உற்பத்தி செய்வதற்காக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் ஜெனரிக் மருந்துகளை உற்பத்தி செய்யும் கம்பெனிகளிடம் இந்த இரண்டு நிறுவனங்களும் உற்பத்தி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

மோல்னுபிராவிர் என்ற கேப்ஸ்யூல் மருந்து கொரானா வைரஸ் தொற்றை எப்படி கட்டுப்படுத்துகிறது?.

இந்த கேப்ஸ்யூலில் ரிப்போ நீயுக்ளிக் அமிலத்துக்கு இணையான மருந்து பொருள் உள்ளது. இந்த மருந்துப் பொருள் உடலில்கொரானா வைரஸ் பெருக்கம் அடைவதை தடுக்கிறது. இதுவரை கிடைத்த சோதனை முடிவுகளின் அடிப்படையில் இந்த மருந்தை தடுப்பு மருந்தாகவும் சிகிச்சை மருந்தாகவும் குணமடைந்த நோயாளிகளின் உடல் நலத்தை மேம்படுத்துவதற்கான மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்று மெர்க் நிறுவனத்தின் செய்திக்குறிப்பு கூறுகிறது.

கொரானா வைரசுக்கு எதிரான வாய் மூலமாக சாப்பிடுகிற முதல் வைரஸ் எதிர்ப்பு மருந்தாக மோல்னுபிராவிர் உள்ளது குறிப்பிடத்தகுந்தது. இதுவரை கொரானா வைரஸ் சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்து பொருள்கள் எல்லாம் ஊசி வழியாக உடலில் செலுத்தப்படும் மருந்துகள் ஆகவே உள்ளன. முதன்முறையாக வாய்வழியாக சாப்பிடுகிற மருந்து பொருளை மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபுடிக்ஸ் நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன

 உண்மையில் இந்த மருந்துப் பொருளை இமோரிப்பல்கலைக்கழகம் கண்டுபிடித்ததாகவும் அந்த மருந்து பொருளிலிருந்து கேப்சூல் மருந்தை உற்பத்தி செய்யும் பணியை மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபுடிக்ஸ் நிறுவனங்கள் உருவாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.5 நாள் நோயாளி சாப்பிடுவதற்கான மோல்னுபிராவிர் கேப்ஸ்யூல் மருந்துக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய்க்கு வருகிறது. அமெரிக்க டாலரின் கணக்கிடும் பொழுது 700 டாலராக அமையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

Related Posts

error: Content is protected !!