எவரெஸ்டில் எட்டுமுறை ஏறி கின்னஸ் சாதனைப் படைத்த நேபாள பெண்மணி!

எவரெஸ்டில் எட்டுமுறை ஏறி கின்னஸ் சாதனைப் படைத்த நேபாள பெண்மணி!

நம் இந்தியாவை சுற்றி இயற்கை அமைத்த அரண் தான் இமயமலை. இன்னும் முழுமையாக ஆராயப்படாத இந்த அரண் பனிமூடியது. மேகங்கள் உரசும் எழில் கொண்டது. ஹிம் என்றால் பனி, ஆலயா என்றால் கோவில். பனி தெய்வத்தின் உறைவிடம் எனப்படும் இமயத்தை இந்தியர்கள் கடவுளின் வீடு என்று நம்பி வருகிறார்கள் . பௌத்தர்களும் அது புத்தரின் உறைவிடம் என்று வழிபடுகிறார்கள். இன்று வரை பௌத்த துறவிகள் இமயமலையை வழிபடுவதை ஒரு சடங்காகவே வைத்திருக்கிறார்கள். இதன் உச்சி என்று சொல்லப்படும் எவரெஸ்ட்-தான் உலகின் மிக உயரமான சிகரம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் எவரெஸ்ட் என்பது தாமஸ் எவரெஸ்ட் என்ற ஆங்கிலேய நில அளவையாளரின் பெயர் என்பதோ, இந்தியாவின் நிலப்பரப்பை துல்லியமாக அளவிடுவதற்காக முதன் முதலாக நடைபெற்ற நில அளவைபணியை தலைமை ஏற்று நடத்தியவர் இவர் என்பதோ பெரும்பான்மையினர் அறிந்திருப்பதில்லை.

guinnes may 16

இதற்கிடையில் அந்த எவரெஸ்ட் சிகரத்தில் 8 முறை ஏறி நேபாளத்தை சேர்ந்த பெண் புதிய சாதனை படைத்துள்ளார். ஆம்..
நேபாளத்தை சேர்ந்த மலை ஏறும் வீராங்கனை லக்பா ஷெர்பா -வுக்கு 44 வயது என்பதும். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பதும்தான் ஹலைட் . சிறு வயதில் இருந்தே இவருக்கு மலை ஏறுவதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஒரு கால கட்டத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என விரும்பினார். அவரது ஆசை 2000-ம் ஆண்டில் நிறைவேறியது. முதல் குழந்தை பிறந்த 8 மாதங்களுக்கு பின் இச்சாதனையை நிகழ்த்தினார். அதன் பின் அவரது மலையேறும் ஆர்வம் அதிகரித்தது. தொடர்ந்து எவரெஸ்ட் சிகரம் ஏறினார்.

2-வது முறை எவரெஸ்ட் சிகரம் ஏறும் போது அவர் 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். அதன் பிறகு 2-வது குழந்தை பிறந்தது. தொடர்ந்து எவரெஸ்ட் மலை மீது ஏறுவதை பொழுது போக்காவே லக்பா ஷெர்பா செய்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு மே 26ம் தேதி ஏழாவது முறையாக எவரெஸ்ட் மலையேறி சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் புதிய கின்னஸ் சாதனை படைத்தார். சமீபத்தில் 8-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts