சாட்டிலைட்டுக்கும் ரீஃபில் போட முடியும் – நாசா ரிசர்ச் சக்சஸ்!

சாட்டிலைட்டுக்கும் ரீஃபில் போட முடியும் – நாசா ரிசர்ச் சக்சஸ்!

சாட்டிலைட் என்னும் விண்ணில் செலுத்தும் செயற்கை கோள் பயன் பலது என்றாலும் இதன் ஆயுள் அதன் உள் இருக்கும் எரி பொருள் தீரும் வரை தான். செயற்கை கோளுக்கு தேவையான மின்சாரத்தை அதன் இறக்கைகள் சூரிய ஒளி மூலம் பெறபட்டு இயங்கினாலும் பூமி சுற்றி கொண்டே இருப்பதால் ஒவ்வொரு நாளும் இந்த செயற்கை கோளை ரிமோட் சென்ஸிங் (பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறை) மூலம் தினமும் அதன் சுற்றுபாதையில் நிலை நிறுத்த வேண்டியது ரெகுலர் வேலை. இல்லையெனில் ஒவ்வொரு செயற்கை கோளுக்கு கொடுக்கபட்ட இடத்தை விட்டு நகர்ந்து அதன் பயன் இல்லாமல் போகும். அப்படியே விட்டால் கொஞ்ச நாளில் பூமியை நோக்கி கண்டிப்பாய் வந்து விழும் என்பதில் மாற்று கருத்தில்லை.

ravi jy 18b

இன்னும் புரியாதவர்களுக்கு இதோ ஒரு சிறிய உதாரணம் – டாடா ஸ்கை என்னும் டி டி ஹெச் சர்வீஸ்க்கு இன்ஸாட் 4 ஏ (83.0 E) என்னும் செயற்கை கோளைத்தான் பீமிங் பாயின்ட்டாக கொண்டுள்ளது. டாடா ஸ்கை அப்லின்கிங் சென்டர் மூலம் இந்த செயற்கை கோளுக்கு அனைத்து சேனல்களையும் அப்லோட் செய்யும். அதன் பின்பு அந்த செயற்கை கோள் மறுபுறம் இந்தியன் ஃபுட்பிரின்ட்டை நோக்கி தன் சிக்னல்களை திரும்ப பாய்ச்சும் அப்போது உங்கள் வீட்டு மொட்டைமாடியில் உள்ள டிஷ் ஆன்டனா சரியாக 83.0 ஈஸ்ட் நோக்கி இன்ஸ்டால் செய்யபட்டிருக்கும்

இதனால் உங்களுக்கு சிக்னல் கிடைக்கபெற்று அனைத்து சேனல்களும் கிடைக்கும். இந்த இன்ஸாட் 4ஏ வை தினமும் 83.0 கிழக்கில் சரியாக நிலை நிறுத்த வேண்டியது இஸ்ரோவின் ஹசன் டெலிமெட்ரி மற்றும் ரிமோட் சென்ஸிங்கின் வேலை. அப்படி நிலை நிறுத்த மறந்தால் உங்களுக்கு சேனல்கள் கிடைக்காது என்பது தான் உண்மை.

இந்த மாதிரி வேலையை செய்யும் செயற்கை கோள் ஆயுள் 15 – 20 வருடம் வரை தான் ஏன் என்றால் தினமும் நிலை நிறுத்த இதனுள் உள்ள எரிபொருளை த்ரஸ்ட் மூலம் தினமும் இயக்குவதால் இந்த 15-20 வருஷத்தில் காலியாகிவிடும் அப்புறம் காயலான் கடை சாமான் தான் இந்த செயற்கை கோள்.

ஆனால் நாசா இதை கணக்கில் கொண்டு இனிமேல் வான் வெளியில் எப்படி விமானத்துக்கு எரிபொருளை ரீஃபில் செய்ய முடியுமோ அதே மாதிரி இந்த செயற்கை கோளுக்கு செய்ய முடியும் என ஆய்வில் கொண்டு முதன் முதலாக அமெரிக்க அரசாங்கத்துக்கு சொந்தமான Landsat 7 ரீஃபில் செய்து சக்ஸச் செய்துள்ளது. இதனால் செயற்கை கோள் ஆயுசு 50 – 60 ஆண்டுகள் வாழும்……….. இந்த எரிபொருள் நிரப்பும் ரோபோ ஆட்டோமேஷனை உள்படத்தில் பார்க்கலாம்.

error: Content is protected !!