நாயாடி – விமர்சனம்!

நாயாடி – விமர்சனம்!

கேரளாவின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவரான நாயாடிகள் குறித்த வரலாறோடு படம் தொடங்குகிறது. அடிமைகளாக இருந்த அம்மக்கள் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள பில்லி சூனியம் உள்ளிட்ட மாந்தீரிகங்களை கற்றுக்கொள்கின்றனர். இதற்காக அவர்கள் கூடு விட்டு கூடு பாய்வதெல்லாம் சகஜம்.

இதனிடையே யூ ட்யூப் சேனல் நடத்தும் ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி, ஃபேபி உள்ளிட்ட 6 பேர் கொண்ட நண்பர்கள் குழு அசைன்மெண்ட் வருகிறது. அதாவது கேரளாவில் இடம் ஒன்றை வாங்கியுள்ள ஆசாமி அங்கு நாயாடி மக்களின் அமானுஷ்யம் இருப்பதாக கூறுகிறார். இதுதொடர்பாக மக்களை நம்ப வைக்கும் வகையில் சில வீடியோக்கள் எடுத்து தருமாறு கேட்கிறார். பணத்துக்கு ஆசைப்பட்டு அங்கு செல்லும் குழுவினருக்கு பலவித அமானுஷ்யங்கள் நடக்கிறது. இதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கையில் 3 பேர் கொல்லப்படுகின்றனர். இறுதியாக ஆதர்ஷ் மதிகாந்தமும் சிக்கிக்கொள்ள, அவரை கொல்ல காதம்பரி முயற்சிக்கிறார். அவர் ஏன் ஆதர்ஷை கொல்ல வேண்டும்? உண்மையில் நாயாடி இன மக்களின் நிலை என்னவாக இருக்கிறது? என்பதை விவரிக்க முயற்சிக்கிறது இப்படம்.

மெயின் ரோலில் வரும் பலரும் புதுமுகங்கள் என்பதால் எடுபடவே இல்லை..இசை மூலமாவது பயத்தைக் காட்டி இருக்கலாம்.. அதையும் கோட்டை விட்டு விட்டார்கள்.. ஆனால் நல்லவேளை பாடல்களெல்லாம் இல்லை என்று நினைக்க வைத்தும் விட்டார்கள்..

நாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ் மதிகாந்தன், படத்தை இயக்கி தயாரிக்கவும் செய்திருக்கிறார். நாயாடி சமூகத்தை பற்றிய வரலாற்று கதைக்கு
பலவீனமான திரைக்கதை பின்னி சொதப்பி விட்டார்கள். குறிப்பாக இது பேய் படமா? இல்லை அமானுஷ்யங்கள் பற்றி பேசுகிறதா? என பலவிதமான கிளைக்கதைகள் இருப்பதால் என்ன சொல்ல வருகிறார்கள் என்ற கேள்வி தான் எழுகிறது

நம் தமிழகத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் மதிகாந்தம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அதன்மூலம் தான் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்துள்ளார்.. அதற்காக இதுவரை திரையில் சொல்லப்படாத நாயாடி மக்கள் பற்றிய கதையை கையில் எடுத்ததற்கு தனி பாராட்டு விழாவே நடத்தலாம்..

மற்றபடி நாயாடி – தேறாது

மார்க் 2/5

error: Content is protected !!