பர்தா-வுக்கு மரியாதை -அமெரிக்க அழகி போட்டியில் ‘பர்தா’வுடன் பங்கேற்ற பெண் போட்டிக்குத் தேர்வு

பர்தா-வுக்கு மரியாதை -அமெரிக்க அழகி போட்டியில் ‘பர்தா’வுடன் பங்கேற்ற பெண் போட்டிக்குத் தேர்வு

முஸ்லிம் பெண்கள் அணியும் ‘பர்தா’ முறையை அடிமைத்தனத்தின் அடையாளமாகவே முஸ்லிம் அல்லாதோர் பார்க்கிறார்கள். ‘பர்தா’ என்பது, ‘ஹிஜாப்’, ‘புர்கா’, ‘துப்பட்டி’, ‘துப்பட்டா’ என்ற சொற்களாலும் சூட்டப்படுகிறது. ‘ஹிஜாப்’ என்ற சொல்லுக்கு , திரையிடுதல் என்று அர்த்தம். அதாவது உடலில் கண்டிப்பாக மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்கும் ஆடையை ‘ஹிஜாப்’ என்கிறார்கள். விழுப்பம் தரும் ஒழுக்கத்தை ஆணும், பெண்ணும் பேண வேண்டும் என்பதில் இஸ்லாம் உறுதியாக உள்ளது.

usa miss nov 29

திருமணத்திற்கு அப்பாற்பட்ட முறைகேடான உறவுகளை இஸ்லாம் வெறுக்கிறது. ஒழுக்கத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் தவறான உறவுகளுக்கு இழுத்துச் செல்லும் அனைத்து வாசல்களையும் இஸ்லாம் இழுத்து மூடுகிறது. ரத்த சம்பந்தமான உறவினர் அல்லாத ஆண்களுடன் பெண்கள் தனிமையில் சந்தித்தல், பார்வையைப் பரிமாறிக் கொள்ளுதல், இச்சையைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசுதல் போன்ற செயல்களுக்கு இஸ்லாம் தடை போடுகிறது. உடை அலங்காரமும் உள்ளக் கிளர்ச்சியை உண்டாக்குவதால் அதிலும் கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதித்துள்ளது. பெண்களுக்கு மட்டுமல்ல; ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆண்கள் தொப்புளில் இருந்து முழங்கால் வரையிலும் மறைக்க வேண்டும். பெண்கள் முகத்தையும் மணிக்கட்டுகளையும் தவிர தலை உள்பட எல்லாப் பாகங்களையும் மறைக்க வேண்டும். ஆனால் முகத்தை மறைக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.

“நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும்; தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கட்டும்; தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதில் இருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும் தங்கள் மார்புகள் மீது முந்தானையைப் போட்டுக் கொள்ளட்டும்” (திருக்குர்ஆன்-24:31) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

ஆனால் ‘பர்தா’ என்பது பெண்களை அடிமைப்படுத்துகிறது; அவர்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது; அவர்களது உரிமைகளைப் பறிக்கிறது; அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுகிறது என்று சிலர் கூறுகிறார்கள்.‘பர்தா’ (ஹிஜாப்) போன்று உடலை மறைக்கும் உடைகளையே, உலக நாடுகளில் உள்ள கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் அணிகிறார்கள். அந்த உடை அவர்களின் கல்வி, மருத்துவம், சமூக சேவை போன்ற பணிகளுக்குத் தடையாக இருப்பதில்லை. மேலும் அந்த உடை அவர்களுக்கு கண்ணியத்தையும், கவுரவத்தையும் அளிக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் மின்னெ சோட்டா மாகாணத்தில் அழகிப் போட்டி நடந்தது. அதற்கு மிஸ் ‘மின்னெ சோட்டா யு.எஸ்.’ என பெய ரிடப்பட்டிருந்தது. அப் போட்டியில் 44 பெண்கள் கலந்து கொண்டனர்.அழகிப்போட்டியின் ஒரு பிரிவாக நீச்சல் உடை அணிந்து உடல் அழகை காட் டும் போட்டி உண்டு. அதில் கலந்து கொண்ட அழகிகள் இதுவரை நீச்சல் உடையில்தான் பங்கேற்றுள்ளனர்.ஆனால் ‘மிஸ் மின்னெ சோட்டா யு.எஸ்.’ அழகி போட்டியில் பங்கேற்ற ஹலிமா ஏடன் (வயது19) என்ற முஸ்லிம் பெண் உடல் முழுவதையும் மறைக்கும் பர்தா உடை அணிந்து வந்து வரலாற்று சாதனை படைத்தார்.

அதில் வெற்றி பெற்ற அவர் அரை இறுதி போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். இவரை தவிர பெரும்பாலானவர்கள் ‘பிகினி’ எனப்படும் நீச்சல் உடையில் பங்கேற்றனர். பர்தாவுடன் பங்கேற்ற ஹலிமா ஏடன் அமெரிக்க வாழ் சோமாலியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts