32°C
விளம்பரம்
Advertisement

இசை மேடை தயார்:Tamil Idol முதல் சீசனை அலங்கரிக்கும் மூன்று இசை ஜாம்பவான்கள்!

admin Published: August 22, 2026 2 நிமிட வாசிப்பு சின்னத்திரை
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


ந்திய அளவில் மெகா ஹிட் அடித்த ‘Indian Idol’ இசை நிகழ்ச்சி முதன்முறையாகத் தமிழில் கால்பதிக்கிறது. ‘Tamil Idol’ என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்த பிரம்மாண்ட இசைத் திருவிழாவை மதிப்பிட்டு, தமிழ்நாட்டின் அடுத்த சிறந்த குரலைக் கண்டறிய மூன்று முன்னணி இசை நட்சத்திரங்கள் நடுவர்களாகக் களம் இறங்குகின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் உருவாகும் இந்தப் பயணத்தில், பாடகர் கார்த்திக், பாடகர் பென்னி தயாள் மற்றும் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகிய மூவரும் நடுவர்களாக இருந்து புதிய திறமைகளுக்கு வழிகாட்டவுள்ளனர்.

நடுவர்களின் உற்சாகக் குரல்

பாடகர் கார்த்திக்:

“தமிழ்நாட்டில் எண்ணற்ற திறமையான பாடகர்கள் ஒளிந்திருக்கிறார்கள். Tamil Idol மேடை மூலம் இதுவரை வெளிவராத பல அரிய, சிறந்த குரல்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். புதிய பாடகர்களின் திறமையைக் கண்டறிந்து அவர்களுக்கு நல்வழிகாட்டுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். குறிப்பாக, ஏ.ஆர். ரஹ்மான் சார் தலைமையில் இந்தப் பயணத்தில் பயணிப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி.”

பாடகர் பென்னி தயாள்:

“நான் ஏற்கனவே இந்தி ஐடால் (Hindi Idol) நிகழ்ச்சியில் பலமுறை பணியாற்றிய அனுபவம் கொண்டவன். ஒவ்வொரு முறையும் புதிய திறமைகளைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கும். இப்போது நமது தமிழ்நாட்டின் குரல்களைத் தேடும் Tamil Idol நிகழ்ச்சியில் நடுவராக இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சென்னையில் படித்து, பல ஆண்டுகள் இங்கே வாழ்ந்தவன் என்பதால் இந்த மேடை எனக்கு மிகவும் நெருக்கமானது. அடுத்த தலைமுறையின் முன்னணிப் பாடகர்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா ஜெரெமையா:

“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் இசைக்கு எப்போதும் தனித்துவமான இடமுண்டு. தமிழ்நாடு முழுவதும் தேடிப் பார்த்தால் ஏராளமான திறமையாளர்கள் கிடைப்பார்கள். அவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் பின்னணிக் கதைகளையும் இசைத்திறனையும் அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன். புதிய குரல்களுக்கு நல்வாய்ப்பு அமைத்துத் தரும் இந்த அற்புதமான நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.”

சென்னையில் முதல் ஆடிஷன் விபரம்

ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் தலைமையில் தமிழ் ஐடால் நிகழ்ச்சிக்கான முதல் ஆடிஷன் சென்னையில் நடைபெறுகிறது.

நாள்: ஆகஸ்ட் 23

வயது வரம்பு: 14 முதல் 30 வயது வரை உள்ள பாடகர்கள் இதில் பங்கேற்கலாம்.

ஆடிஷன் நடைபெறும் இடம்: வேலம்மாள் வித்யாலயா அனெக்சர் (Velammal Vidyalaya Annexure), மேல் அயனம்பாக்கம், சென்னை.

தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் திறமையாளர்களை உலகறியச் செய்யவுள்ள இந்த ‘Tamil Idol’ நிகழ்ச்சி விரைவில் Sony VIZHA தொலைக்காட்சி மற்றும் Sony LIV ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

உடனடி செய்திகள்