குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாததால் 2.1 லட்சம் வழக்குகள் ரத்து! – ஐகோர்ட் அதிர்ச்சி!

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாததால் 2.1 லட்சம் வழக்குகள் ரத்து! – ஐகோர்ட் அதிர்ச்சி!

வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாட்டில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் 500 % அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியான தகவலே இன்னும் மறையாத நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தினால் 2009 ம் ஆண்டுக்கும் 2014 ஆம் ஆண்டுக்கும் இடைப் பட்ட காலத்தில் மொத்தம் 2,14,901 வழக்குகள் விசாரணையின்றி முடித்து வைக்கப்பட்டன என்ற தகவல் அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. மேலும் தமிழ்நாடு முழுக்க உள்ள நீதிமன்றங் களில்1,72,602 வழக்குகள் விசாரணையின்றி நிலுவையில் தேங்கிக் கிடப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த 2,14,901 வழக்குகளிலும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாத காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில காவல்துறை தலைவர் சென்னை உயர்நீதிமன்றத் தில் உறுதியளித்துள்ளார். குற்றப் பத்திரிகை உரிய நேரத்தில் தாக்கல் செய்யப்படாத காரணத்தி னால் அவை விசாரணையின்றி முடித்து வைக்கப்பட்டன பற்றிய தகவல் உறுதி செய்யப்பட்டு uள்ளது.

திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளி ஒருவர் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக நிவாரணம் கோரி அந்தத் தொழிலாளியின் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். தொழிலாளியின் சகோதரர் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன், விபத்து நடந்த போது பதிவு செய்யப்பட்ட வழக்கு என்ன ஆனது என்று அறிந்து கொள்ள விரும்பினார். அது தொடர்பான தகவல்களை தாக்கல் செய்யும்படி போலீசாரையும் சம்பந்தப்பட்ட கம்பெனியின் நிர்வாகத்தையும் நீதிபதி கேட்டுக்கொண்டார்.

ஆனால் அந்த வழக்கு விசாரணையின்றி முடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இவ்விவகாரத்தில் ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டருக்கும் ஜுடிசியல் நீதிபதி ஒருவருக்கும் இடையில் நடந்த கடிதப் போக்குவரத்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப் பட்டது போலீஸார் அந்த கடிதங்களை நீதிபதி முரளிதரன் முன் தாக்கல் செய்தனர். அவிநாசி ஜுடிஸியல் மேஜிஸ்டிரேட் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தினால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது என்று அவிநாசி ஜுடிஸியல் மேஜிஸ்டிரேட் குறிப்பிட்du இருந்தார். மேலும் 2006ம் ஆண்டு 2014 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 87 வழக்குகள் உரிய காலத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தினால் முடித்து வைக்கப் பட்டன என்றும் அவிநாசி ஜுடிஸியல் மேஜிஸ்டிரேட் தன்னுடைய கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்த தகவல் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது அதனால் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன், இதுபோன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தினால் தமிழகமெங்கும் எத்தனை வழக்குகள் முடித்து வைக்கப் பட்டுள்ளன என தகவல்களைத் திரட்டி நீதிமன்றத்துக்கு வழங்கும்படி நீதிமன்ற பதிவகத்தை கேட்டுக் கொண்டார். அதன்படி பதிவகம் தகவல்களைத் திரட்டியது. தமிழகம் முழுக்க 2009ம் ஆண்டு 2014 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உரிய காலத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தினால் மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 105 வழக்குகள் வழக்கு முடித்து வைக்கப்பட்டன என்று தெரியவந்தது.

குற்றப் பத்திரிகை உரிய நேரத்தில் தாக்கல் செய்யப்படாத காரணத்தினால் முடித்துவைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்தது.

முடிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அடிப்படியில் முதல் 5 இடங்களில் உள்ள மாவட்டங் களும் அவற்றின் வழக்கு எண்ணிக்கைகளும்: காஞ்சிபுரம்-28573, மதுரை-26351, சென்னை-13836, விழுப்புரம்-11190, திருச்சி-10897. அது தவிர மேலும் தற்பொழுது உரிய காலத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தினால் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 602 வழக்குகள் தேங்கிக் கிடப்பது. தெரியவந்தது.

இந்த புள்ளி விவரங்கள் குறித்து காவல்துறை தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப் பத்திரிகை உரிய காலத்தில் தாக்கல் செய்யப்படாத 1324 விசாரணை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உரிய நடவடிக்கை துவங்கியுள்ளோம். உரிய காலத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது ஏன் என்று விளக்கம் அளிக்கும்படி கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை என்ன என்று பரிசீலித்து உரிய நடவடிக்கை களை எடுக்க மாவட்டத்துக்கு ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி உத்தரவிடப்பட்டிருப்பதாக உள்துறைச்செயலாளர் மற்றும் காவல் துறைத் தலைவர் சார்பில் நீதிமன்றத்தில தெரிவிக்கப்பட்டது.

இந்த மாதிரி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தினால் வழக்குகள் முடித்து வைப்பதைத் தவிர்க்க நீதிமன்ற பதிவேடுகளில் ஒரு சிறிய மாற்றம் செய்தால் போலீசார் உரிய விவரங்களை உடனுக்குடன் அறிய வாய்ப்பு ஏற்படும் என்று காவல்துறை தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் தற்பொழுது வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது குற்றப் பத்திரிகை எப்பொழுது தாக்கல் செய்யப்பட்டது என்ற தேதி பதிவு ஆவணத்தில் குறிப்பிடப் படுகிறது. குற்றப் பத்திரிகையில் போதுமான விவரம் இல்லாவிட்டால் அந்த அறிக்கை போலீசாருக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. அவ்வாறு திருப்பி அனுப்பப்படும் தேதி பதிவு ஏட்டில் இடம் பெறுவதே இல்லை. அதே போல போலீசார் உரிய தகவல்களுடன் குற்றப் பத்திரிகையை மீண்டும் தாக்கல் செய்யப்படும் தேதியையும் பதிவேட்டில் குறிப்பிடுவதில்லை.

அதனால் முதலில் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை ஏற்கப்பட்டதா இல்லையா என்ற விவரத்தை எல்லா வழக்குகளுக்கும் பெற முடிவதில்லை. இந்தக் குறைபாடு சீர்செய்யப்பட்டு நீதிமன்ற ஆவணங்கள் பராமரிக்கப்பட்டால் விசாரணை இல்லாமல் வழக்குகள் முடிக்கப்படுவதை தவிர்க்கும் வாய்ப்பு ஏற்படும் என காவல்துறை தலைவர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது. இந்த விவரங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி தமது தீர்ப்பை ஒத்திவைத்தார்.