கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை செய்தி உண்மைதான் :போப் ஆண்டவர் ஒப்புதல்!

கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை செய்தி உண்மைதான் :போப் ஆண்டவர் ஒப்புதல்!

மதகுருமார்கள் மற்றும் பிஷப்புகள் சிலர், கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதான் என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டு உள்ளார்.

2018-ல், கேரள கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது சர்வதேச அளவிளான பிரச்சினையாக வெடித்தது . மேலும் வாடிகனின் பெண்கள் பத்திரிகையான ‘விமன் சர்ச் வோர்ல்ட்’ பத்திரிகையின் பிப்ரவரி இதழில் வெளியான கட்டுரை, ”பழிவாங்கப்படுவோம் என்ற பயத்தில் கன்னியாஸ்திரிகள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து வாய் திறப்பதில்லை” என்று குற்றம் சாட்டியது. 1990 களிலேயே ஆப்பிரிக்காவில் பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் வன்முறைகள் இழைத்தது குறித்த செய்திகள் வாடிகனுக்குக் கிடைத்ததாகவும் இதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதன் ஆசிரியர் லூசெட்டா ஸ்காராஃபியா, ”இனியும் இந்த விவகாரத்தில் வாடிகன், தன்னுடைய கண்களை மூடிக்கொண்டிருந்தால், பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் கன்னியாஸ்திரிகள் கருக்கலைப்பு செய்யவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவர். தந்தை பெயர் தெரியாமலேயே குழந்தைகள் வளரும் நிலை நீடிக்கும். பெண்களுக்கு எதிரான வாடிகனின் ஒடுக்குமுறை எப்போதும் மாறாது” என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிஅலியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றுவிட்டு கத்தார் செல்லும் வழியில் போப் பிரான்சிஸ், விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்துப் பேசிய போப், ”இந்தப் பிரச்சினை எல்லா இடத்திலும் இடக்கிறது. ஆனால் சில பகுதிகளில் உள்ள சில திருச்சபைகளில் அதிகமாக இருக்கிறது.பாலியல் புகார்களால் வாடிகன் ஏராளமான பாதிரியார்களை இடைநீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பான பிரச்சினைகளைச் சரிசெய்ய வாடிகன் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வருகிறது.

வாடிகன் இந்தப் பிரச்சினையைக் கண்டுகொள்ளவில்லை என்று மற்றவர்கள் கூறுவதை நான் விரும்பவில்லை. அதில் உண்மையில்லை. இதில் நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பது மட்டும் உண்மை. அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம்” என்றார் போப் பிரான்சிஸ்.

error: Content is protected !!