தமிழ் குரல் / AI Voice
எதுக்கெடுத்தாலும் இப்போ காம்போ ஆஃபர், பேக்கேஜ்ன்னு ஆயிடுச்சு. மேட்ரிமோனியல், கேட்டரிங், டூரிசம், உணவகங்கள், தங்கும் விடுதிகள், துணிக்கடைகள், நகைக்கடைகள் இப்படி இந்த பேக்கேஜ் ஐயும், காம்போ விஷயத்தையும் சொல்லிகிட்டே போகலாம். உங்களுக்கு எந்த சிரமமும் இல்லாம நாங்களே எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிக்கொடுக்கிறோம் நீங்க உங்க சொந்த பந்தங்களோட சந்தோஷமா இருங்கன்னு திருமண வீட்டார்கிட்ட சொல்லி ஏ டு இசட் சர்வீஸ் பண்றதுக்கு நிறைய நிறுவனங்கள் தயாரா இருக்கு. தங்களுக்கு எந்த சிரமமும் இல்லாம, பணம் கொஞ்சம் கூடுதலா ஆனாலும் ஒரு சந்தோஷமான விஷயத்தை நடத்தறத சில பேர் விரும்பறாங்க. அவங்களுக்காக இந்த நிறுவனங்கள் பணத்தை வாங்கிகிட்டு இப்படி ஒரு சர்வீஸ் பண்றதுல ஒரு லாஜிக் இருக்குன்னு நம்பலாம். தெரியாத ஊர்களுக்கெல்லாம் நாங்களே உங்களை பத்திரமா கூட்டிகிட்டுப்போய் காண்பிச்சு பத்திரமா கொண்டு வந்து விடறோம்னு சொல்றதுலேயும் ஏதோ ஒரு வகையிலான லாஜிக் இருக்கு.

மேலே சொன்ன வகைகளில் நிறைய நிறுவனங்கள் இருந்தாலும், சிறப்பாவும் நல்லாவும் பண்றவங்களும், யாரு நம்பிக்கை யானவங்க, நியாயமா பணத்தை வாங்கிட்டு சர்வீஸ் பண்ணுவாங்கங்கிறதை தேர்ந்தெடுக்கறதுங்கிறது நம்மளோட சாய்ஸ். ஆனா இறந்து போனவங்களை சுடுகாட்டுக்கு கொண்டுபோய் அடக்கம் பண்றதுக்கோ, எரிக்கறதுக்கோ ஒட்டுமொத்தமா நாங்க பாத்துக்கறோம்னு இந்த பேக்கேஜ்ன்னு பேசறாங்க பாருங்க. எம்மாடி.. அடுத்தவங்க துக்கத்திலேதான் இந்த மாதிரி ஆளுங்களுக்கு எவ்வளவு சந்தோஷம்? இன்னும் இது கிராமப்புறங்கள் வரை விரிவடையலேங்கிறது சற்று ஆறுதலான விஷயம்.
சென்னையில் சில ஏரியாக்கள் இந்த விஷயத்தில் ரொம்ப மோசமா இருக்கு. அவங்க கேக்கறதுதான் ரேட். ஒரு ஏரியான்னா அங்க அந்த ஆளுதான் எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணுவாராம். அவர் வழியாத்தான் எல்லாம் செய்ய னுமாம். சங்கு ஊதறவன் லேந்து, பாடை கட்றவங்க, சவத்தை வண்டியில் வச்சு அலங்காரம் பண்ணி எடுத்துட்டுப்போ றவங்க, மேளம் அடிக்கறவங்க, இப்படி எல்லாவற்றிற்கும் ஒருவரே மொத்தமா இழவு விழுந்தவர் வீட்டில் ரேட் பேசி வாங்கிடறாரு. இங்கேயும் அவங்கவங்க வசதியை பார்த்துதான் அந்தாளுங்க ரேட்டே பேசறாங்க.
ஏம்ப்பா இவ்வளவு ரேட் கேக்கறீங்களே, ரொம்ப அதிகமா இருக்கே, பாத்து வாங்கிக்கக்கூடாதான்னு யாராச்சும் அங்க இருக்கறவங்க கேட்டுட்டா, ஏங்க எங்களுக்கு தினம் தினமா இந்த பொழப்பு ஓடுது. மாசத்துக்கு இரண்டோ மூனோ கிடைக்கறதே பெரிய விஷயம். இதுல எல்லாமா பேரம் பேசுவாங்க. துக்க காரியம் நடந்துபோச்சு. அதை எந்த பிரச்சனையும் இல்லாம எடுத்துச் செய்யற வங்களுக்கு திருப்தியா கொடுங்கன்னு டயலாக் வேற.. என்னத்த சொல்றது? சரி அப்படி அடாவடியா கேட்டு வாங்கற இந்த பணத்தை அவங்க வீட்டுக்கா கொண்டு போய் கொடுக்கறாங்க. ரேட் பேசி அட்வான்ஸ் பணம் வாங்கினதும் நேரா போறது டாஸ்மாக். அதுக்கப்பறம்தான் வேலையே ஆரம்பிக்கறாங்க. எல்லாம் முடிஞ்சதும் திரும்ப போறதும் டாஸ்மாக்..
ஒரு பக்கம் இலட்சங்கள்ல செலவு பண்ணியும் காப்பாத்த முடியாம இறந்துபோன துக்கம். இன்னொரு பக்கம் ஆஸ்பிடல்ல செத்ததிலேந்து, விபத்தா இருந்தா போஸ்ட் மார்ட்டம் பண்ணி பாடியை \பேக் பண்ணி கொடுக்கறதுல ஆரம்பிச்சு, மனசாட்சியே இல்லாம ஆஸ்பிடல்ல இருந்து 10கி.மீ. தூரத்தில இருக்கிற வீட்டுக்கு பாடியை கொண்டு வந்து சேர்க்க 6000 ரூபாய் வரை கேட்கின்ற ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வரை எல்லாமே பணமே பிரதானம்.
‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா’ என்ற பாடல் கூட தற்போது பொருந்தாத பாடலாய் போய்விட்டது. நகர்ப்புறங்களில் உள்ள இடுகாட்டில் புதைக்க இடமில்லாமல் சில வருடங்களுக்கு முன்னர் உடலைப் புதைத்த இடத்திலேயே மீண்டும் பள்ளம் தோண்டி புதைக்கும் நிலை.அதனால் தான் எங்கும் மின்மயமாக்கப்பட்ட சுடுகாடு. உள்ளே போகும் உடல் சற்று நேரத்தில் பிடி சாம்பலாக வெளியில் வந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது..
மனிதன் சாகும் வரை தனது வாழ்வாதாரத்திற் காகவும், தனது சந்ததியினருக்காகவும் பணம் தேடிப் போராடுகின்றான் என்றால், இன்றைய சூழ்நிலை யில் இறந்த பிறகும் தன் இறுதிச் சடங்கிற்கான பெரும் பணத்தையோ அல்லது ஆஸ்தியையோ சேமித்து வைத்துவிட்டுத்தான் போகவேண்டும் போலிருக்கின்றது..
உதயா
