மோடி யின் இன்றைய ரேடியோ உரை சாராம்சம்!
மனதின் குரல் என்ற ‘மன் கி பாத்’ என்ற மாதாந்திர வானொலி உரையை பிரதமா் மோடி இன்று நிகழ்த்தினார். உரையின் போது பேசிய அவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இன்றைய நாளில் தான் நடந்தது. உயிரிழந்த நமது ராணுவ வீரர்களை நாடு பெருமையுடன் நினைவு கூறுவதாக தெரிவித்தார்.
அவர்களின் தியாகத்தை நாடு மறக்காது என்ற பிரதமா், தீவிரவாதம் சர்வதேச அளவில் சவால் விடும் வகையில் உள்ளது. பயங்கரவாதம் குறித்து முன்னர் இந்தியா கூறிய போது உலக நாடுகள் அதனை சாியாக கவனிக்கவில்லை. ஆனால் தற்போது பயங்கரவாதம் சர்வதேச பிரச்னையாக உள்ளது. ஒவவாரு ஜனநாயக நாடும், இந்த அச்சுறுத்லை எதிர்கொள்கிறது என்றார்
தொடர்ந்து பேசிய அவர், “நவம்பர் 26 மற்றொரு நிகழ்வுக்கும் முக்கியமான நாள், அதுதான் இந்திய அரசியல் சாசன நாளாகவும் உள்ளது. 1949-ல் இதே நாளில்தான் இந்திய அரசியல் சாசனம் வரையப்பட்டது.நம் அரசியல் சாசனச் சட்டம் ஏழை மற்றும் நலிவுற்றோரைப் பாதுகாக்கிறது. நாம் தலைநிமிர்ந்து நடக்கும் வகையிலான ஒரு அரசியல் சாசன சட்டத்தை அதனை உருவாக்கியவர்கள் நமக்குக் கொடுத்துள்ளனர். அத்துடன் வரும் டிசம்பர் 7-ஆம் தேதி ஆயுதப் படைகள் கொடி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனால், மக்கள் அனைவரும் #armedforcesday என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இதுகுறித்த செய்திகளை பதிவிட வேண்டும்.
அதேபோன்று, நாட்டின் கடற்படை தினம் டிசம்பர் 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் கடற்படை வலிமைக்கு முன்னுதாரணமாக திகழ்வது சோழர்கள்தான். உலகின் மிகச் சிறந்ததாக திகழ்ந்தது சோழர் கடற்படை. சோழர்களின் கடற்படை அதன் உச்சகட்ட வெற்றிகளை பெற்றது. சோழர் கடற்படைதான் உலகிலேயே பெண்களின் போர் திறமையை முதன் முதலில் வெளிப்படுத்தியது. பெரும்பாலான கடற்படைகள் பெண்களை பிற்காலத்தில்தான் சேர்த்து கொண்டனர். ஆனால் சோழர் கடற்படையில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் இடம்பெற்றிருந்தனர். இன்றைக்கு 900 ஆண்டுகளுக்கு முன்பே சோழர் கடற்படையில் பெண்கள் மிக முக்கியப் பொறுப்புகளை வகித்தனர்.

நாம் கடற்படை வலிமையைப் பற்றி பேசுகிறபோது சத்திரபதி சிவாஜியின் கடற்படையை புறக்கணித்துவிட முடியாது. கொங்கண் கடற்பரப்பில் சிவாஜியின் மராத்திய கடற்படை முக்கிய பங்காற்றியது. மராத்திய கடற்படையானது மிகப் பெரிய கப்பல்களையும் சிறிய படகுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.
ஆக ஆப்போதிருந்து நம் ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றின் சேவைகளைக் கண்டு பெருமைப்படுகிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் தீரம் மற்றும் தியாகத்துக்குத் தலைவணங்குகின்றனர். நாட்டுக்காக அவர்கள் தங்கள் இளமையைத் தியாகம் செய்கின்றனர். அதனால்தான் 125 கோடி மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது.
செப்டம்பரில் வங்கதேசத்தில் ரோஹிங்கியர்கள் பிரச்சினை எழுந்த போது நம் ஐஎன்எஸ். காதியால் அவர்களுக்கு மனிதார்த்த உதவிகள் புரிந்தன.மீன் படகு ஒன்றில் மீனவரை நம் கப்பற்படையினர் காப்பாற்றியதாக பபுவா நியுகினியா அரசு நமக்கு ஜூன் மாதம் செய்தி அனுப்பியது. 21 நவம்பரில் மேற்கு வளைகுடாவில் கடற்கொள்ளையர்கள் சரக்குக் கப்பலை முற்றுகையிட்ட போது ஐஎன்எஸ். திரிகண்ட் அங்கு சென்று உதவியது. இந்த ஆண்டு மே-ஜூனில் இலங்கையில் கடுமையான வெள்ள பாதிப்பின் போது நம் கடற்படையினர் அங்கு சென்று அரசுக்கும், மக்களுக்கும் சேவையாற்றின” ஆகிய விஷயங்களைப் பேசினார் பிரதமர் மோடி.


