தமிழ் குரல் / AI Voice
அநேகமாக ஒவ்வொரு சினிமாவும் ஒவ்வொரு உணர்வை அளிக்கும்.. ஆரம்பக் காலச் சினிமாக்கள் விடுதலை வேட்கையை அளித்ததாம். அதையடுத்து வந்த சினிமாக் கள் ஆன்மீக உணர்வைக் கொடுத்தன.. அப்புறம் கொஞ்சம் அரசியல், அம்மா பாசம், காதல், இசை, சண்டை,ஆக்ரோஷம்,, அது.. இது என்று ஒவ்வொரு சினிமாவும் ஒவ்வொரு உணர்வை அளித்தது என்னவோ உண்மை தான்.. ஆனால் இது வரை சினிமாக்களில் வந்த அத்தனை வகை உணர்வு களையும் ஒருங்கே அளிக்கும் படம்தான் ‘மேற்கு தொடர்ச்சி மலை’
அதிலும் பிசி நாயகன் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் நடிக்காமல் இதை தயாரித்ததன் மூலம் கலைஞன்-டா என்பதை உரத்தக் குரலில் சொல்லி உள்ளார். ஆரம்பத்தில் டாக்குமெண்டரி படமோ என்ற சந்தேகப் பார்வையைக் கிளப்பினாலும், போகப் போக படத்தில் பார்வையாளர்கள் மூழ்கி போகிறார்கள். அதிலும் சிறப்பான படங்களை ரசிகர்கள் எப்படி புரிந்து தங்கள் பாராட்டைத் தெரிவிப்பார்கள் என்பதற்குச் சான்று – படம் முடிந்ததும் எழும் கைத்தட்டல்களே!! அது இப்படம் போட்ட எல்லா தியேட்டர்களிலும் மிகச் சத்தமாகக் கேட்கிறது.
இந்தப் படத்தை விஜய் சேதுபதி தயாரித்ததே ஒரு சுவாரஸ்யமான விஷயம். ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’ படங்களில் இப்பட இயக்குநர் லெனின் பாரதி இணை இயக்குநராகப் பணி புரிந்தார். அந்தப் படங்களில் விஜய் சேதுபதி ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப் போதி ருந்தே இருவருக்குள் அறிமுகம் இருந்தது. அதன் பிறகு, அவர் ‘தென்மேற்கு பருவக் காற்று’ , ‘பீட்சா ‘ உள்ளிட்ட படங்களில் மெயின் ரோலில் நடித்தார். அந்த நேரத்தில் என்னிடம், ‘சார், நீங்கள் ஒரு கதை வைச்சுயிருக்கீங்களா அந்தப் படத்தில் நான்தானே ஹீரோ?” என்று கேட்டார். அதற்கு லெனின் பாரதி, ‘இல்லை சேதுபதி இந்த ஸ்க்ரிப்ட்டுக்கு உங்கள் உடல்வாகு செட்டாகாது. அந்த கேரக்டரில் நடிக்கறவருக்கு எந்த ஒரு பிம்பமும் இருக்கக்கூடாது . ‘நீங்கள் ஏற்கெனவே சில படங்களில் ஹீரோவா நடித்துவிட்டீர்கள். அதனால் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு, ஒரு நாள் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தோட படப்பிடிப்பில் விஜய்சேதுபதி இருக்கும் போது ‘இந்தப் படத்தின் ஒன் லைன் மட்டும் சொல்லி, குறைந்த பட்ஜெட்டில் படம் பண்ணக்கூடிய புரொடியூசர் இருந்தால் சொல்லுங்க’ன்னு கேட்டர் லெனின் பாரதி..உடனே விஜய் சேதுபதி, ‘நானே புரொடியூஸ் பண்ணுறேன்’ னு சொலிட்டு. ‘ஆனா, ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கையில் காசு இல்லை, சீக்கிரம் பண்ணலான்னு சொன்னார்’. அதுவரைக்கும் நான் படத்தோட ப்ரீ புரொடக்ஷன் வேலைக்களுக்காக தேனியிலேயே இரண்டு வருடங்கள் தங்கி, படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தாரம் இயக்குநர்..
இந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் பிறந்து வாழ்ந்த தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைதான், தமிழகம்- கேரளாவின் எல்லைப் பகுதி. அந்தத் தேனி மாவட்டத்தின் அடி வாரப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மீது வாழ்கின்ற நிலம் அற்ற உழைக்கும் மக்களின் கதைதான் இந்தப் படம். இந்த மக்கள், தினம் அவர்களின் கூலி வேலைகளுக்காக மலையின் அடி வாரத்திலிருந்து, ஒன்றரை மணி நேரம் கால் கடுக்க நடந்து, மலையின் உச்சியை அடைவார் கள். அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் போராட்டங்கள், அவர்கள் சந்திக்கும் அரசியல்தான் ‘மேற்குத் தொடர்ச்சி மலை.
வழக்கம் போல் இப்படத்தின் கதை என்ன? என்றெல்லாம் சொல்ல முடியாது.. நாட்டு நடப்பின் டைரிக்குறிப்பை கதை என்று சொல்ல முடியுமா? அதிலும் ரங்கசாமி என்ற வேடத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி, மூணாறு பகுதியில் கம்யூனிச தலைவராக நடித்திருக்கும் அபு வலையன்குலம், ஈஸ்வரி வேடத்தில் நடித்திருக்கும் காயத்ரி கிருஷ்ணா, கங்காணியாக நடித்தி ருக்கும் ஆண்டனி வாத்தியார் என்று படத்தில் நடித்திருக்கும் முக்கிய கதாபாத்திரங்களும், மலை யில் சுமை தூக்கும் வேலையை தனது உயிர் இருக்கும் வரை செய்வேன், என்று வீண் சவடால் பேசி, மலையிலேயே உயிர் விடும் பெரியவர், மனநிலை பாதிக்கப்பட்டு மலையில் சுற்றி திரியும் பாட்டி என படத்தில் ஒரு காட்சியில் வரும் நடிகர்கள் கூட மனதில் அழுத்தமாக பதிகின்றார்கள்.
வசனகர்த்தா ராசி தங்கதுரைக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்.
படத்தின் நிறைய கேரக்ட்ரகள் நடிப்பை அல்லது சினிமா கேமராவைக் கண்டிராத அதே மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பது படத்துக்கு தனி வலிமை. எல்லா கதாபாத்திரங்களும் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
அது போலவே தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு தன் மண்ணை தன் சகல வித்தையையும் காட்டி பிரமிப்பூட்டி இருக்கிறார். அதிலும் இம்மலையின் அழகுடன் அதன் ஆபத்தையும் காட்டி திடுக்கிட வைத்து இருக்கிறார்.கூடவே இதே பகுதியில் உள்ள பண்ணைப் புர இசைப் பரமாத்மா இளைய ராஜாவின் இசை அபாரம். இளையராஜாவின் அப்பா மற்றும் உறவினர்கள் பிழைப்புக்காக இதே மலையில் மூட்டை சுமந்த வலியை நம் மீதும் திணித்து விடுவதில் ஜெயித்து விடுகிறார்.
மொத்தத்தில் சினிமா என்பது பொழுது போக்கு மட்டுமில்லை. நம் சக மனிதர்களின் இன்னொரு பக்க வாழ்க்கையை வெளிச்சமிட்டு காட்டுவதும்தான் என்பதை நிரூபித்துள்ள படம்.
மார்க் 5 / 3.75


