32°C
விளம்பரம்
Advertisement

மலேசியா பார்லிமென்டை கலைப்பு: பிரதமர் நஜிப் ரசாக் அதிரடி!

admin சேலம் Published: April 7, 2018 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




மலேசியாவில் பிரதமராக நஜிப் ரசாக் இருந்து வருகிறார். ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கட்சியை சேர்ந்த இவரது பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது. உதனிடையே மலேசியா அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் நிதி மோசடி செய்து தமது தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளதாக மலேசியா பிரதமர் நஜிப் ரசாக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவர் பதவி விலக வேண்டும் என, முன்னாள் பிரதமரும் எதிர்கட்சி தலைவருமாகிய மஹதிர் முகமது வலியுறுத்தி வருகின்றார்.

அதே சமயம் நஜிப் ரசாக் மீது தற்போது மலேசிய மக்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது.. அப்படி உள்ள நேரத்தில் தேர்தலை சந்திக்க பிரதமர் நஜிப் ரசாக் முடிவு செய்து விட்டார். இதனால் எந்த நேரமும் மலேசியா பார்லிமென்ட் கலைக்கப்படலாம் என தகவல் பரவி வந்தது.

இந்நிலையில் மலேசியா பார்லிமென்டை கலைத்து பிரதமர் நஜிப் ரசாக் உத்தரவிட்டுள்ளார். 60 நாட்களில் தேர்தல் நடத்தலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். பார்லிமென்ட் கலைக்கப்பட்டதை தொடர்ந்து, விரைவில் தேர்தல் கமிஷன் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

தேர்தலில் பிரதமர் நஜிப் ரசாக்கை எதிர்த்து, மலேசியா ஐக்கிய சுதேச கட்சி சார்பில் மகதிர் முகமது பிரதமர் வேட்பாளராக களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மலேசியா ஐக்கிய தேசிய சுசேத கட்சிக்கு அரசு தடை விதித்துள்து. இதனால் மலேசியா அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக மலேசிய துணை பிரதமராக இருந்து ஓரினச் சேர்க்கை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான அன்வர் இப்ராஹிமுடன் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது நீண்டகாலமாக பகை பாராட்டி வந்தார். தற்போதைய பிரதமர் நஜிப் ரஜாக்கை வீழ்த்துவதற்காக அன்வர் இப்ராஹிமுடன் மஹதிர் முஹம்மது கூட்டணி அமைத்துள்ளார். இந்நிலையில், மலேசிய நாட்டு பாராளுமன்றத்துக்கு இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது(92) எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிறையில் தண்டனை அனுபவித்துவரும் அன்வர் இப்ராஹிமின் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றால் சிறையில் இருக்கும் அன்வர் இப்ராஹிமுக்கு அரசின் சார்பில் பொது மன்னிப்பு அளிப்பதன் மூலம் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ள அவரை பிரதமர் பதவியில் அமரவைக்க எதிர்க்கட்சிகள் கூட்டணி முயற்சித்து வருவதாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு மற்றும் தொகுதிகளின் எல்லைப்பகுதி சீரமைப்பு ஆகியவற்றால் ஆளும்கட்சி கூட்டணியின் வாக்கு வங்கி சற்றே குறையலாம். எனினும், நஜிப் ரஜாக்கை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு இடங்களை ஆளும்கட்சி மீண்டும் கைப்பற்றும் என்று மலேசிய ஊடகங்கள் கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்