லவ்வர் – விமர்சனம்!

லவ்வர் – விமர்சனம்!

Toxic Relationship? – தெரியும்தானே? தன் இணை அல்லது துணையை மனரீதியாக, உடல்ரீதியாக ஒருவர் துன்புறுத்துவதும் அது தொடர்வதுமாக இருந்தால், அந்த உறவின் மூலம் மகிழ்ச்சியும் நிம்மதி போய் வலியும் கவலையும் அதிகம் இருந்தால் அது toxic relationship. கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதனால் முதலில் உனக்காகத்தான் என் வாழ்க்கையே என்று ஆரம்பிக்கும் தெய்வீக காதல்கள் பல, இனி நான் சொல்வதைத்தான் கேக்க வேண்டும். என்னை தவிர வேறு யாரிடமும் பேச கூடாது. இதை செய்யாதே, அதை செய்யாதே என அந்த காதலரின் டாக்சிக் முகம் பிறகுதான் தெரிய வரும். அப்படியான காதல்கள் ஒரு போதும் உண்மையான சந்தோசத்தை தர போவதில்லை. அதற்கு மாறாக வலியையும், மனஅழுத்த பிரச்சனைகளையும் தருகிறது என்பதை ஒவ்வொரு ஃபிரேமிலும் அப்பட்டமாக வெளிப்படுத்தி இருப்பதுதான் லவ்வர் படம்.

அதாவது காலேஜ் லைப்பை முடித்து விட்டு சுய தொழில் செய்ய வைத்திருந்த பணத்தையும் இழந்து வாழ்ந்து வரும் அருணுக்கு (மணிகண்டன்), தொழில் தொடங்க முடியாத விரக்தியால் முன்கோபக்காரனாகவே வாழ்கிறான். அவருக்கு திவ்யா (ஶ்ரீ கௌரி பிரியா) மீது காதல். ஆனால் அந்த காதலியிடம் கூட கடு கடுவென முகத்தை வைத்துக் கொண்டு நிறைய பொய் சொல்வதால் நாயகிக்கு அந்தக் காதல் பயமாக மாரி விடுகிறது. இதனால் நிகழும் சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறுகிறது. அதிலும் அடிக்கடி குடி, கோபத்தை ‘இதுதான் கடைசி முறை..இதன் பிறகு மாறிவிடுவேன்’ என்று சத்தியம் செய்யும் நாயகன், அதே தப்பை தொடர்ந்து செய்கிறான். இதனால் இவன் லவ்வே வேண்டாம் என முடிவு செய்கிறாள் நாயகி. உடனே நம்ம காதல் என்னாவது என்று அவளை விடாப்பிடியாக சமாதானப்படுத்தி வெற்றி பெற்றாரா என்பதே லவ்வர் படத்தின்  கதையாகும்.

படத்தின் ஹீரோ மணிகண்டனை குட் நைட் கேரக்டருக்கு நேர்மறையான ரோலில் இப் படத்தில் நடித்திருக்கிறார், ஒவ்வொரு கணமும் ‘அருண்’ என்ற கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து, தான் செய்வது தவறு என்பதே புரியாமல், அதை திருத்தி கொள்ளாவும் தோணாத ஒரு இக்கால இளைஞனின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து அசத்துகிறார். நாயகியாக வரும் ஸ்ரீ கெளரி பிரியா ‘மாடர்ன் லவ்’ பேமஸ் என்றாலும், இப் படத்தில் தன் கேரக்டரின் கனத்தை மிக்ச் சரியாக உணர்ந்து தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். அடுத்தடுத்து காதலனால் துயரப்பட்டு இவர் அழுவதெல்லாம் ரசிகர்களிடையே கூட விசும்பலை ஏற்படுத்தி விடுகிறது.

நாயகனின் பெற்றோர் சரவணன் மற்றும் கீதா கைலாசம் கேரக்டர்கள் மூலம் கூட பெரியவர்களும் உறவு நிலைகளைக் கையாள்வதில் உள்ள சிக்கலைக் கேஷூவலாகக் காட்டி இருப்பது ரசிக்க வைக்கிறது. மேலும் கண்ணா ரவி, நிகிலா ஷங்கர், ஹரிஷ் குமார், ஹரிணி உள்ளிட்ட குறிப்பிட்ட கேரக்டர்களை சுற்றியே லவ்வர் கதை நகர்வதை சகலரும் உணர்ந்து, சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள்.

கேமராமேன் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா வழியே காட்டும் ஒவ்வொருக் காட்சியும் அடடே சொல்ல வைக்கிறது. . ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பெரிய பலம்.

தமிழ் சினிமாவில் இதுவரை பேசப்பட்ட காதல் பெரும்பாலும் கற்பனை சம்பவங்களின் பின்னணியிலே வந்துள்ள நிலையில் 2கே எனப்படும் இன்றைய இளசுகளிடம் காணப்படும் காதலின் கோரமுகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி தனது முதல் படத்தின் மூலமே கவனிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் பிரபு ராம் வியாஸ். மேலும் மிகச் சரியான கிளைமேக்ஸ் காட்சியுடன் படத்தை முடித்திருப்பதில் தனித்து நிற்கிறார் .ஆனால் எடுத்துக் கொண்ட கதையை நியாயப்படுத்த எப்போதும் சரக்கடித்துக் கொண்டிருப்பதையும்ம்,ஸ்மோக் செய்வதையும் அடிக்கடி காட்டி முகம் சுளிக்க வைத்து விடுவதை தவிர்த்திருக்கலாம்

மொத்தத்தில் இந்த லவ்வர் -தமிழ் சினிமா எட்டிப் பார்க்காத காதல் கதை

மார்க் 3.5 / 5

error: Content is protected !!