லில்லி ராணி – விமர்சனம்

லில்லி ராணி – விமர்சனம்

ப்படி ஒரு சிந்தனையுடன் உருவான கதை எல்லாம்  சினிமாவாக பார்த்து ரொம்ப நாளாகி விட்டது.. ஆம்.. ஒரு பாலியல் பெண் தொழிலாளி (சாயா சிங்)க்கு பிறந்த மகளுக்கு ( பேபி பாத்திமா) எலும்பு மஜ்ஜை நோய். அதற்கு சிகிச்சை அளிக்க, அந்தக் குழந்தையின் தந்தையின் உடல் திசுக்கள் மருத்துவ ரீதியாகத் தேவைப்படுகிறது . அதனால் குழந்தையின் தந்தையை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அதாவது அவரிடம் யாரெல்லாம் உறவு கொண்டார்களோ அவர்களை எல்லாம் தேடி கண்டு பிடிக்க முயற்சி செய்கிறார், குழந்தையை காப்பாற்ற. ‌‌ அப்படி இரண்டு பேரை அவர் கண்டுபிடிக்கிறார்‌ அவர்களும் மனிதாபிமான அடிப்படையில் இதற்கு ஒத்துழைக்கிறார்கள். இதனால் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. அதற்கு தேவைப்பட்ட  பணம் எப்படி கிடைத்தது என்பது தான் இந்த லில்லி ராணியின் திரைக்கதை.

மொத்தமே ஐந்தாறு கேரக்டர்கள்தான் ஆனால் எடுத்த சப்ஜெக்டால சுவையான சிறுகதைபோல் சிரிப்பு, சோகம், கிளுகிளுப்பு என்று பல ரூட்டில் படம் செல்கிறது. நாயகி விபச்சாரியாக வரும் சாயாசிங் (தனுஷுடன் மன்மத ராஜா பாடலுக்கு ஆட்டம்போட்டவர்) இப்படத்தில் ராணி என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஓவர் ஆக்டிங் என்றில்லாமல் எதர்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக் கிறார்.

தம்பி ராமையாவை சந்தித்து, “நீங்க செஞ்ச தப்பால் பிறந்த குழந்தை உயிருக்கு போராடு கிறாள் காப்பாற்றுங்கள்” என்று மன்றாடுவதும் அதைக்கேட்டு ஷாக் ஆகும் தம்பி ராமையா 59 வயசுலே இப்படியொரு நிலைமைக்குள்ளானதை எண்ணி புலம்புவது கலகலப்பு. ஆனாலும் கொடுத்த கூலிக்கு அதிகமா நடிச்சுக் கடுப்பேத்திட்டார் மை லார்ட்.

அமைச்சர் மகன் துஷ்யந்த் தன்னைத் தேடி வந்து பணம் கேட்ட சாயசிங்கை மிரட்டிவார் என்று பார்த்தால் சாயாசிங்குடன் குடும்பம் நடத்த துடியாய் துடிப்பதெல்லாம் நம்பும் படி இல்லை.. ஜெர்வின் ஜோஷுஹா இசையால் படத்தின் பாதி வசனங்கள் கேட்கவே இல்லை, ஷிவா தர்ஷன் ஒளிப்பதிவு ஓ கே ரகம்..

இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன். ஒரு மோலிவுட் ஃபீலிங்கை கொடுக்க ஆசைப்பட்டு கோட்டை விட்டுள்ளார்

மார்க் 2.25/5

error: Content is protected !!