June 2, 2023

தெலுங்கு மீடியாவில் ட்ரெண்டான கொலைகாரன் டீம் டான்ஸ்! – வீடியோ!

பாப்டா நிறுவனம் மூலம் தனஞ்ஜெயன் வெளியிடும் திரைப்படம் ” கொலைகாரன் “.கொலை, திகில்,  சஸ்பென்ஸ், பரபரப்பு ஆகிய அம்சங்கள் நிறைந்த இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நெகட்டிவ் ஹீரோவாக விஜய் ஆண்டனியும் போலீஸ் கேரக்டரில் அர்ஜூனும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் பற்றி டைரக்டர் அளித்திருந்த ஒரு பேட்டியில் ‘நகரத்தில் அடுத்து அடுத்து கொடூரமான கொலைகள் நடக்கின்றன.கொலை வழக்கை காவல்துறை அதிகாரி அர்ன் விசாரிக்கிறார். விஜய் ஆண்டனி தான் சைக்கோ கொலைகாரன் என்பது தெரிய வருகிறது. காரணம் என்ன? என்பதே கதை. கிரைம் திரில்லரான இது ஹாலிவுட் படத்துக்கு சவால் விடும் வகையில் திரைக்கதை இருக்கும். படம் பார்ப்பவர்கள் இதை உணர்வார் கள்.விஜய் ஆண்டனி படத்துக்கு முதன் முறையாக வெளி இசையமைப்பாளர் சைமன் இசை யமைக்கிறார். பிஎஸ். வினோத்தின் உதவியாளர் முகேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஆஷிமா, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆஸ்திரேலியாவில் 2012ஆம் ஆண்டு இந்திய ஆஸ்திரேலிய அழகியாக தேர்வானவர். அங்கு பல அழகி போட்டிகளில் பட்டம் வென்றவர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த கொலைகாரன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி ஆஷிமா நர்வல் மேடையேறி பேசும் போது நாயகன் விஜய் ஆண்டனியை மேடையேறி தன்னோடு நடனமாடுமாறு அழைத்தார். முதலில் தன்னுடைய கூச்ச சுபாவத்தால் மறுத்தாலும் பின்னர் மேடையேறி எல்லோரும் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக நடனமாடினார். நாயகி ஆஷிமா சில நடன அசைவுகளை அவரிடம் செய்து காண்பித்த பின்னர் இருவரும் “ கொலைகாரன் “ படத்தில் இடம்பெறும் மெலடி பாடலுக்கு ஏற்றார் போல் நடனமாடினர்.

கொலைகாரன் திரைப்படம் தெலுங்கில் “ கில்லர் “ எனும் பெயரில் வெளியாகவுள்ளது. கில்லர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஷிமாவுடன் நடிகர் விஜய் ஆண்டனி ஆடிய  வீடியோ தெலுங்கு மீடியாவில் மிகவும் பிரபலமாகி ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‬