1947ஆம் ஆண்டு போடப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை- சர்ச்சையான கங்கனா ரனாவத்!

1947ஆம் ஆண்டு போடப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை- சர்ச்சையான கங்கனா ரனாவத்!

ம் நாட்டுக்கு 1947ஆம் ஆண்டு போடப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை. .2014ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா வெற்றி பெற்ற பிறகுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று கூறிய நடிகை கங்கனா ரனாவத்துக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ பட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டு கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற ஒரு நடிகை 1947ஆம் ஆண்டு இந்தியாவுக்கு கிடைத்தது சுதந்திரம் அல்ல அது பிரிட்டிஷ்காரர்கள் போட்ட பிச்சை என்று கூறியுள்ளார். இது இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளை அவமதிக்கும் செயலாகும். தியாகிகளையும் சுதந்திரப் போராட்டத்தையும் அவமதிக்கும் ஒருவருக்கு பத்மஸ்ரீ பட்டம் பொருத்தம் அற்றது.

எனவே பத்மஸ்ரீ பட்டத்தை அரசு வாபஸ் பெற வேண்டும் என்று சிவசேனை தலைவர் சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.

கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தில் சேர்ந்தவர் அங்குள்ள மரண பள்ளத்தாக்கில் விலையில் போதைமருந்து அதிக அளவு எடுத்துக்கொண்டார் போலும் அதனால் உளறுகிறார் என்று தேசியவாத காங்கிரஸ் பேச்சாளர் நவாப் மாலிக் கூறியுள்ளார்.

1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் பேசுகிற பேச்சு இது.

1857ம் ஆண்டிலும் 1947ம் ஆண்டிலும் போராடிய தியாகிகளை நடிகை கங்கனா அவமதித்து உள்ளார் .அவர் மீது மத்திய அரசு வழக்குத் தொடர வேண்டும். அவரை சிறையில் தள்ள வேண்டும் என்று நவாப் மாலிக் கோரியுள்ளார்.

error: Content is protected !!