மின்சாரத்திற்கு முன்பை விட அதிக விலை கொடுக்க வேண்டி வரும்!

மின்சாரத்திற்கு முன்பை விட அதிக விலை கொடுக்க வேண்டி வரும்!

நாட்டில் உள்ள 135 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் நாட்டின் மின் தேவையில் சுமார் 70% வரை மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. கரோனா ஊரடங்குக்கு பிறகு நாட்டில் தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் மின் தேவை ஜெட் வேகத்தில் உயர்ந்தததால் இருப்பில் இருந்த நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு அதிகஅளவு சென்று விட்டது.இது தவிர சீனாவிலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெளிநாட்டு நிலக்கரி நிறுவனங்களுக்கு கிராக்கி அதிகமானதால் விலையை தாறுமாறாக உயர்த்தின. இதனால் வெளிநாட்டில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாமலும், உள்நாட்டிலும் நிலக்கரி இல்லாமலும் இந்தியா சிக்கி தவிக்கிறது. கடந்த சில வாரங்களாக நிலக்கரிக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தி குறித்து நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட 6 மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன.

இச்சூழலில் Automatic Pass-through Model கீழ், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது, ​​டிஸ்காம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்களின் மின்சார கட்டணத்தை மின் விநியோக நிறுவனங்கள் உயர்த்தும். ஏற்கனவே பெட்ரோல், டீசல் முதல் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு மீண்டும் ஒரு பெரிய பின்னடைவு ஏற்படலாம் என்பது கவலை தருகிறது. ஆனால், சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை உயரும் போது, ​​மின் உற்பத்தி நிறுவனங்களின் விலையும் கூடுவது இயல்புதான். நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களும், மின் விநியோக நிறுவனங்களும் (Discom) பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. நிலக்கரியே நமது நாட்டின் முக்கிய ஆற்றல் ஆதாரமாக உள்ளது. இந்தியா நிலக்கரியை பெரிய அளவில் இறக்குமதி செய்துவரும் சூழ்நிலையில், நிலக்கரி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் Automatic Pass-through Model வழிமுறையை மத்திய மின் துறை வெளியிட்டுள்ளது.

இந்த மாடலின் கீழ், எதிர்கால ஒப்பந்தத்திற்குப் பிறகு எரிபொருள் விலை அதிகரித்தால், அரசாங்க டிஸ்காம்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். ஒப்பந்தத்தை விட மின் உற்பத்தி நிலையங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இந்த நடவடிக்கையால்,மின் விநியோக நிறுவனங்களின் அதாவது டிஸ்காம்களின் நிதி நிலையும் மோசமடையலாம்.மின்சாரத்தை பொதுமக்களுக்கு விநியோகிப்பதும், அதற்குப் பதில் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதும் டிஸ்காமின் வேலை. இதுபோன்ற சூழ்நிலையில், எரிபொருள் விலை அதிகரிக்கும் போது, ​​டிஸ்காம்கள் மின் உற்பத்தியாளர்களுக்கு அதிக கட்டணம் செலுத்தி மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும், ஆனால் அரசியல் அழுத்தம் மற்றும் மக்களின் எதிர்ப்பால், மின் கட்டணத்தை அதிகரிப்பது கடினம்.

இருந்தாலும், தற்போது வேறுவழியில்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை டிஸ்காம் எடுக்கும், அதன் தாக்கம் பொதுமக்களின் பாக்கெட்டில் எதிரொலிக்கும். இனிமேல், மின்சாரத்திற்கு முன்பை விட அதிக விலை கொடுக்க வேண்டி வரும் என்பதே நிஜம்

error: Content is protected !!