உதயநிதியின் கலகத் தலைவன் இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

உதயநிதியின் கலகத் தலைவன் இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரில்லர் டிராமா திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் நடிகர் கலையரசன் பேசியது…,

“நான் சின்ன பாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறேன். ஆனால் அது முக்கியமான பாத்திரமாக இருக்கும். இயக்குனர் மகிழ் சொல்லி தரும் விதம் புது அனுபவமாக இருந்தது. உதயநிதி சார் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. அவர் இதில் புது பரிணாமத்தில் இருப்பார். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை.”

நடிகை நிதி அகர்வால் பேசியது..,

“இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கும், என்னுடன் திரையை பகிர்ந்து கொண்ட நடிகர் உதயநிதி சார் அவர்களுக்கும் நன்றி. அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் பங்கேற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகள்.”

நடிகர் ஆரவ் பேசியது..,

“ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு இந்த படத்திற்காக நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த படத்தின் இசை ஈர்க்கும் படி அமைந்துள்ளது. இயக்குனர் மகிழ் உடைய ரசிகனாக இருந்த எனக்கு வாய்ப்பளித்த மகிழ் சாருக்கு நன்றி. அவரிடம் நிறைய கற்று கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்னை இந்தப் படத்தில் முழுவதுமாய் அவர் தான் மெருகேற்றியுள்ளார். அடுத்தாக இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த உதயநிதி சாருக்கு நன்றி.”

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசியது…,

“இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த உதயநிதிக்கு நன்றி. இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பான பணியை கொடுத்துள்ளனர். இயக்குனர் மகிழ் உடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது, நிறைய கற்றுகொண்டேன். படம் வெற்றியடைய உங்கள் ஆதரவு தேவை. நன்றி”

பாடலாசிரியர் கார்க்கி பேசியது…

“இயக்குனர் மகிழ் எனது மிகச்சிறந்த நண்பர். அவர் படங்களில் பாடல் எழுதுவது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும். அவர் பாடலுக்கு தரும் தருணங்கள் வித்தியாசமாக இருக்கும். இந்த படத்தில் பாடல் எழுதிய அதே நாளில் தமிழக அரசுக்காக முதல்வர் ஸ்டாலின் பங்கு பெறும் பாடல் ஒன்றையும் எழுதினேன். அப்பாவிற்கும் மகனுக்கும் ஒரே நாளில் பாடல் எழுதிய பெருமை கிடைத்தது. உதய் இப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவருக்கு இது திருப்புமுனை படமாக இருக்கும். படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்”

இயக்குனர் மகிழ்திருமேனி பேசியது..,

” படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த விழாவிற்கு வந்த முக்கிய பிரபலங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். கலையரசன், ஆரவ் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். உதயநிதி சார் எப்பொழுதும் பணிவாக இருக்க கூடிய நபர், அதனால் தான் அவர் இந்த உயரத்தில் இருக்கிறார். இந்த 10 வருடத்தில் அவர் தொடர்ந்து பல படங்களில் வித்தியாசமான பல கதாபத்திரங்களை ஏற்று அதை நம்பும் படி உருவாக்கியுள்ளார். இந்த படமும் அப்படி தான் இருக்கும், இந்த படம் உங்களை ஏமாற்றாது. எனக்கு இந்த வாய்ப்பளித்த உதயநிதிக்கு நன்றி. ”

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியது..,

“கலகத் தலைவன் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த படத்தில் பங்காற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் எனது நன்றிகள். மகிழ் இந்த திரைப்படத்தை செதுக்கி இருக்கிறார். அவர் நிறைய நேரம் செலவழித்து, சிறப்பான காட்சிகளை தொகுத்து உருவாக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு பெரிய உழைப்பும், அர்பணிப்பும் கொடுத்துள்ளோம். இயக்குனர் மகிழ் சிறப்பான படத்தை உருவாக்கி கொடுத்துள்ளார். இந்த படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ”

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவன் திரைப்படம் நவம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

Related Posts

error: Content is protected !!