32°C

காயல் – விமர்சனம்!

admin Published: September 11, 2025 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து:

ந்தோஷமாகத் துள்ளித் திரிய வேண்டிய வயதில், சாதியமைப்பின் காரணமாக இளைஞர்களின் இறகுகள் வெட்டி எறியப்படுகின்றன. ஆசைகளைச் சுமந்த காதலர்களை ஆளாளுக்குப் பந்தாடுகிறார்கள். அதிலும் சாதிரீதியில் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையோ குரூர முகம் காட்டுகிறது. சமூகம் பேசாமல் வேடிக்கை பார்ப்பதுபோலத்தான் எல்லாம் நடக்கிறது.அந்த வகையில் சாதியைக் காரணம் காட்டி தன் மகளின் காதலுக்குத் தடைபோடும் ஓர் அம்மாவின் வறட்டு குணத்தால் நடந்தேறும் துயரச் சம்பவங்களே இந்த காயல் படம்.

மரைன் ரிசர்ச் செய்யும் ஹீரோ லிங்கேஷ், ஒரு சமூகப் போராளி. ஆனால் பிறப்பால் தாழ்த்தப்பட்ட பிரிவினராக இருக்கிறார். அவருக்கும் நாயகி காயத்ரிக்கும் லவ் உருவாக, அசிஸ்டன்ட் கமிஷனர் காயத்ரியின் அப்பா ஐசக், அந்தக் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விடுகிறார். ஆனால் சாதிபற்று என்பதை விட ஜாதிவெறியுள்ளவராக இருக்கும் அம்மா அனுமோள், அந்தக் காதலை எதிர்ப்பதுடன் தங்கள் இனத்திலேயே காயத்ரிக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்க, எதிர்பாராத விபரீதம் நடக்கிறது. அதில் உருக்குலைந்து போகும் ஐசக்குக்கும் அனுமோளுக்கும் கணவன் மனைவி உறவே சிக்கலாகிப்போக, இருவருக்குள்ளும் இணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு அவர்களின் குடும்ப நண்பரான மனவியல் மருத்துவர் ரமேஷ் திலக், அவர்களுடன் லாங் ட்ரிப் ஒன்றை ஏற்பாடு செய்கிறார்.. அதன் விளைவு என்ன என்பதை சொல்வதே காயல் படக் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஹீரோ லிங்கேஷ், கேரக்டரின் வெயிட்டை உணர்ந்து கச்சிதமாக நடித்துள்ளார். காதல் தோல்வியை மறைக்க சிடுசிடுவென இருக்கும் காட்சிகளாகட்டும், இரண்டாவது காதலை ஏற்றுக் கொள்ள தயங்கும் காட்சிகளாகட்டும் தனக்கு கொடுக்கப்பட்ட ரோலுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். அனுமோல் மகளாக வரும் காயத்ரியின நடிப்புக்கும் அழகுக்கும் எந்தக் குறையும் சொல்ல முடியாது. காதலனின் பரிவும் அப்பாவின் அன்பும் ஒருங்கே அமையப்பெற்றும் அவர் எடுக்கும் முடிவால் மனதில் நின்று விடுகிறார். ஜெனிலியாவை நினைவுபடுத்துகிறார் ஸ்வாகதா. எனர்ஜியான ஆக்டிங் அவருடையது.

அநேகமாக துணைப் பாத்திரங்கள் அல்லது வில்லன் வேடத்தில் வந்த போய் கொண்டிருந்த ஐசக்குக்கு ஒரு பாசம் மிகுந்த அப்பாவாக உணர்ச்சிபூர்வமான வேடம். ரகுவரனை இமிடேட் செய்திருந்தாலும் மிகையில்லாமல் நடித்து கவனம் ஈர்கிறார். யமுனா என்ற ரோலில் அனுமோல் சாதிய பற்றுடன் கச்சிதமாக நடித்துள்ளார். இளையராஜாவின் பாடலில் உருகும் காட்சியிலும் மகளின் இறப்பில் அழுது புலம்பும் காட்சிகளும் கவனம் ஈர்க்கிறார்.

சைக்கியாரிஸ்டாக வரும் ரமேஷ் திலக் கேரக்டர் பலே சொல்ல வைத்து விடுகிறது.

படத்தின் பெரிய பலமே ஒளிப்பதிவும், இசையும்தான். கேமராமேன் கார்த்தி ட்ரோன் காட்சிகளை படம் முழுவதும் நிரப்பியிருக்கிறார். படத்தின் தலைப்புக்கு ஏற்ப பெரும்பான்மைக் காட்சிகள் நீரும் நீரைச் சார்ந்தும் படமாக்கப்பட்டிருக்கின்றன. முழுக்க அழகான காட்சிகள்.

மியூசிக் டைரக்டர் ஜஸ்டினின் பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும், மனசில் ஒட்டவில்லை.

பொதுவாக சாதி பற்று என்று சொல்லப்படும் ஜாதி வெறிய அசலாகச் சித்திரிக்கும் சினிமாக்கள் ‘கலைப் படம்’ என்னும் வடிவத்தில்தான் உருவாகி உள்ளன. அவை வெகுசன மக்களுக்குச் சென்று சேர்வது குறைவு. இன்னொரு பக்கம் பார்த்தால், வெகுசன சினிமாக்கள் சாதியத்தின் பெருமிதத்தைத்தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் உரையாடிக் கொண்டிருக்கின்றன் அல்லது சாதிய எதிர்ப்பு என்கிற பெயரில் அதை ரொமான்டிசைஸ் செய்து கொண்டிருந்தன. இந்த மாதிரியான சூழலில் காதல், சாதி, பயணம் போன்ற அம்சங்கள் அடங்கிய ஒரு கதையை எவ்வித கமர்ஷியல் மசாலாவும் சேர்க்காமல் கொடுத்திருக்கும் டைரக்டரும், எழுத்தாளருமான தமயந்தி பாராட்டுக்குரியவர்தான்.. னால் ஒரு சினிமாவையும் நாவல் போல் படமாக்கி விட்டது குறைதான்

மொத்தத்தில் காயல் – கடல் நீர்

மார் 2.5/5