உலக சிறு குறு தொழில்முனைவோர் நாள் – ஒரு சிறப்புப் பார்வை!
வேளாண்மைக்கு அடுத்தபடியாக, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் மிக முக்கியப் பங்காற்றுபவை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs). குறிப்பாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்து, லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரமாக இவை திகழ்கின்றன.நம் நாட்டின் மொத்த தொழில்களின் பொருளாதார வளர்ச்சியிலும், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய மொத்த உற்பத்தியில் 8 சதவீதமும், உற்பத்தி திறனில் 45 சதவீதமும் மற்றும் ஏற்றுமதியில் 40 சதவீதமும் இந்நிறுவனங்கள் பங்களிக்கின்றன. 2.6 கோடி நிறுவனங்கள் வாயிலாக, 6 கோடி நபர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்கின்றன.சமீப காலங்களில் மொத்த தொழில் பிரிவில் இந்நிறுவனங்கள் உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளன. இப்பிரிவானது காலத்திற்கு ஏற்றவாறு விரைவில் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மையின் மூலமும், முன்னோடித் திறன் மூலமும் சமீபத்தில் பொருளாதார நெருக்கடியில் சமாளித்து நிலைநிறுத்தி கொள்ள முடிந்தது. தேசிய நோக்கமான ஒருங்கிணைந்த சம வளர்ச்சியடைவதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு முக்கியமானதாகும்.நம் நாட்டிலேயே குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி எண்ணிக்கை அதிக அளவில் 15.07 சதவிதம் அதாவது 6.89 இலட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இவை ரூ.32,008 கோடிக்கும் மேலாக மொத்த முதலீட்டில் 8,000 வகையான பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்கின்றன. இப்படி அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதிலும் புத்தாக்கங்கள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டு தோறும் ஜூன் 27ஆம் தேதி பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் MSME-களின் முக்கியத்துவம்
தமிழகத்தைப் பொறுத்தவரை, சுமார் 15 லட்சம் சிறு, குறுந் தொழில்நிறுவனங்கள் 1 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் 80,000 சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் சுமார் 8 லட்சம் பேரின் வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன. இது தமிழகத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கி, சமூக நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கிறது.வாகன உதிரிபாகங்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் தோல் பொருட்களின் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது. சிறப்பு உற்பத்தி தொழில் பிரிவுகளை ஊக்குவிப்பதன் பொருட்டு கீழ்க்கண்ட 13 தொழில்கள் கண்டறியப்பட்டுள்ளன” என்று சிறு தொழில் பற்றி தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையம் அறிவிக்கின்றது.இதனால் தான் நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் வளர்ச்சியை கண்டுள்ளது. தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகம்..பலரும் நினைப்பது போல் குஜராத்திலோ , மஹாராஷ்டிராவிலோ அல்ல.. இங்கு கிட்டத்தட்ட 38,000 தொழிற்சாலைகள் உள்ளன..அடுத்த இடத்தில் இருக்கிற மஹாராஷ்டிரத்தில் 28,000..(பத்தாயிரம் குறைவு.) தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள் சிறிய தொழிற்சாலைகளுமல்ல; 23 லட்சம் பேர் அவற்றில் பணியாற்றுகின்றனர்
கோவை: ஒரு MSME மையம்
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்குக் கோவை நகரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.ஜவுளி, பொறியியல், ஆட்டோமொபைல்ஸ், காற்றாலை, மோட்டார் பம்ப்செட், வெட்கிரைண்டர்கள் எனப் பல்வேறு தொழில்களுக்கும் தேவையான உதிரிபாகங்கள் முதல், ராணுவத் தளவாடங்களுக்கான உதிரிபாகங்கள் வரை கோவையில் தயாராகி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இது கோவையின் உற்பத்தித் திறனையும், MSME-களின் பல்துறை பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

MSME-கள் எதிர்கொண்ட சவால்கள்
சிறு, குறுந் தொழில்முனைவோர் பல காலகட்டங்களில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். 1998-ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு, 2008 முதல் 2012 வரை ஏற்பட்ட மின்வெட்டுப் பிரச்சினை போன்ற சவால்களால் பெரும் இழப்பைச் சந்தித்தனர். இவற்றிலிருந்து மீண்டு வருவதற்குள், பணமதிப்பு நீக்கம் (Demonetization) பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்தும் மீள முயற்சிக்கும்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பு (GST) மற்றும் அண்மையில் உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்று ஆகியவை சிறு, குறுந் தொழில்முனைவோரை மேலும் அவதிக்குள்ளாக்கியது. இந்தத் தொடர் சவால்கள், MSME துறையின் தாங்குதிறனையும், மீண்டெழும் சக்தியையும் சோதித்தன.
அரசின் பங்களிப்பும் எதிர்காலமும்
சிறு, குறுந் தொழில் துறையின் வளர்ச்சியில் மத்திய அரசுக்கும் கணிசமான பங்கு உண்டு. பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் மூலம் இந்தத் துறையை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் முயன்று வருகின்றன.
ஜூன் 27 அன்று சிறு குறு தொழில்முனைவோர் நாள் கொண்டாடப்படுவது, இந்தத் துறையின் முக்கியத்துவத்தையும், நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றிவரும் அளப்பரிய பங்களிப்பையும் உலகிற்கு எடுத்துரைக்கிறது. எதிர்காலத்தில் இந்தத் துறையின் சவால்களைக் களைந்து, அதற்குத் தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் அளிப்பதன் மூலம், மேலும் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.


