ஜோரா கைத் தட்டுங்க – விமர்சனம்!

2009ல் ராணுவ வீரர் ஆகும் கனவுடன் இருந்தவரை கோலிவுட் கபளீகரம் செய்தது. அவர் வெள்ளித்திரையில் எண்ட்ரி ஆன காலக் கட்டம் காமெடிக்கான நடிகர்கள் காணாமல் போய் கொண்டிருந்தார்கள். இதை அடுத்து இங்குள்ள டைரக்டர்கள் தங்கள் கதை, திரைக்கதைக்குள் சிரிப்புகென உருவாக்கிய இடங்களில் எல்லாம் இவரை நிறுத்தி, வாயசைத்து எடுத்து சமாளித்து வந்தார்கள்.அந்த வகையில் சில ஸ்கிரிப்ட்டால் இவருக்கும் பேர் கிடைத்தது. அப்பேர்ப்பட்ட – யோகிபாபு என்ற நாமகரணம் கொண்டவர் கமிட் ஆகி வந்து போகும் படமே ஜோரா கைத் தட்டுங்க. ஆனால் யோகி பாபு வந்தாலே ரசிகர்கள் கொஞ்சூண்டாவது காமெடி டயலாக்கை எதிர்பார்ப்பார்கள். ஆனால் இதில் அடக்கி வாசித்திருக்கிறார். அதிலும் போலீஸ் ஸ்டேசனில் அடி வாங்குகிறார், ரவுடிகளிடம் அடி வாங்குகிறார், மாஜிக் செய்து தோல்வி காண்கிறார்… இப்படி சோக மயமாக அவர் ரோல் சித்தரிக்கப்பட்டிருப்பதால் கைத்தட்ட முடியவில்லை.’
மிகப்பெரிய மேஜிக் நிபுணரான தன் அப்பாவிடம் மெயின் ரோலில் வரும் யோகிபாபு சின்னச்சின்ன மேஜிக் கற்றுக்கொண்டு வரும் நிலையில், ஒரு பெரிய ரிஸ்கான மேஜிக் செய்யும் போது அப்பா இறந்து விடுகிறார்.அதனால் அதிர்ச்சி அடையும் யோகிபாபு, அப்பாவின் ஆன்மாவின் உதவியால் மேஜிக் கற்றுக் கொண்டு அதை செய்து வருகிறார்.ஆனால், அவரது மேஜிக் பிடிக்காமல் மக்கள் விமர்சிக்கிறார்கள். இதனால், அப்பா அளாவுக்கு அவரால் அந்த துறையில் பிரகாசிக்க முடியாமல் போவதோடு, ரவுடி கும்பலால் தனது ஒரு கையை இழந்து மேஜிசியன் ஜாப்பையும் செய்ய முடியாமல் போகிறது. இதற்கிடையே யோகி பாபின் கையை வெட்டிய ரவுடி கும்பல், அவருக்கு மிகவும் பிடித்த ஒரு சிறுமியை கொலை செய்து விடுகிறது. இதனால் தனது மேஜிக் திறமையை வைத்து ரவுடி கும்பலை பழிவாங்க திட்டமிடும் யோகி பாபு, அவர்களை எப்படி பழி தீர்க்கிறார், அதன் மூலம் அவருக்கு எப்படிப்பட்ட சிக்கல்கள் வருகிறது, அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார், என்பதை பரபரப்பில்லாமல் சொல்வதே ‘ஜோரா கைய தட்டுங்க’ படக் கதை.
மெயின் ரோலில் வரும் யோகிபாபு வழக்கம் போல் செட் பிராப்பர்ட்டி போல் வருகிறார்., நடக்கிறார். வசன்ம் என்ற பெயரில் ஒப்பிக்கிறார்.தன்னைச் சுற்றி நடக்கும் கதை என்பதை அவரே அறியாமல் போயிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. நோ காமெடி. ஹீரோயினாக நடித்திருக்கும் சாந்தி ராவுக்கு பெரிய வேலை ஒன்றுமில்லை.போலீஸாக வரும் ஹரிஷ் பெராடி, கல்கி, வசந்தி, மணிமாறன், சாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜகாஷன், நைரா நிஹர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை முடிந்த அளவு சரியாக செய்திருக்கிறார்கள்.
கேமராமேன் மது அம்பாட்டாம். டைட்டிலில் மட்டும் பேர் வருகிறது. இதில் அவர் பங்களிப்பை தனியாக காண முடியவில்லை.
மியூசிக் டைரக்டர் எஸ்.என்.அருணகிரியின் பாடல்களும், ஜித்தின் கே.ரோஷனின் பின்னணி இசையும் ரொம்ப ஆர்டினரி.
டைரக்டர்கள் வினீஷ் மில்லினியம் மற்றும் பிரகாஷ்.கே, மேஜிசியன், பழிவாங்கும் கதையை காமெடியாகவும், கமர்ஷியலாகவும் சொல்ல யோசித்திருக்கிறார்கள். ஆனால் படம் எடுக்கும் அதை மறந்து எந்த ஒரு பரபரப்பு இல்லாமல் சொல்லியிருப்பது பெரிய மைனஸ் விட்டது.
மொத்தத்தில் ஜோரா கைத்தட்டுங்க – சவுண்டே இல்லை.
மார்க் 2.5