சவுத் இந்தியன் வங்கியில் ஜூனியர் ஆபிசர் வேலை வாய்ப்பு!

சவுத் இந்தியன் வங்கியில் ஜூனியர் ஆபிசர் வேலை வாய்ப்பு!

வுத் இந்தியன் வங்கி லிமிடெட் (SIB) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள திருச்சூரில் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பெரிய தனியார் துறை வங்கியாகும் . டிசம்பர் 31, 2024 நிலவரப்படி, இந்த வங்கி 955 வங்கி விற்பனை நிலையங்கள் (954 கிளைகள் மற்றும் 1 சேவை கிளை) மற்றும் 26 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 1290 ATMகள்/CRMகள் (1159 ATMகள் மற்றும் 131 CRMகள்) வலையமைப்பைக் கொண்டுள்ளது. இந்த முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியில் (South Indian Bank) இளநிலை அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

காலியிடங்களின் எண்ணிக்கை:

தற்போதைய அறிவிப்பில் காலியிடங்களின் எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை.இது 3 வருட ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

30.04.2025 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ₹7.44 லட்சம் தொகுப்பூதியம் வழங்கப்படும். இதில் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) பங்களிப்பு, காப்பீட்டு பிரீமியம் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊதியம் ஆகியவை அடங்கும். மேலும், வங்கியின் விதிமுறைகளின்படி பயணப்படி, தங்குமிடம் மற்றும் இதர படிகள் வழங்கப்படும். குழு மருத்துவக் காப்பீடு, குழு விபத்துக் காப்பீடு மற்றும் குழு ஆயுள் காப்பீடு போன்ற காப்பீட்டு வசதிகளும் உண்டு (ஆயுள் காப்பீட்டு பிரீமியம் ஊழியரால் செலுத்தப்பட வேண்டும்).

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://recruit.southindianbank.com/RDC/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு மே 19 ஆம் தேதி தொடங்குகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

26.05.2025

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினர் ரூ.500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.200

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய   இந்த ஆந்தை ரிப்போர்ட்டர் வழிகாட்டி/வேலைவாய்ப்பு என்ற லிங்க்கை க்ளிக் செய்து பார்வையிடவும்

error: Content is protected !!