சென்னை காமராஜர் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

சென்னை காமராஜர் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

ந்தியாவின் மிக முக்கியமான துறைமுகங்களில் ஒன்றான சென்னை காமராஜர் துறைமுகத்தில் (Kamarajar Port), தற்போது காலியாக உள்ள இளநிலை உதவியாளர் (Junior Assistant) மற்றும் இளநிலை கணக்காளர் (Junior Accountant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வரும் மார்ச் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரங்கள் மற்றும் தகுதிகள்

இந்த வேலைவாய்ப்பு நேரடி நியமனம் (Direct Recruitment) அடிப்படையில் நடைபெறுகிறது. அதன் விவரங்கள் இதோ:

பணியின் பெயர் காலியிடங்கள் கல்வித் தகுதி வயது வரம்பு (27.02.2026 அன்று)
இளநிலை உதவியாளர் 11 ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு 30 வயதுக்குள்
இளநிலை கணக்காளர் 11 B.Com (இளநிலை வணிகவியல்) 30 வயதுக்குள்

வயது வரம்பு தளர்வு

மத்திய அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன:

  • OBC பிரிவினர்: 3 ஆண்டுகள்

  • SC / ST பிரிவினர்: 5 ஆண்டுகள்

தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு (Computer Based Test) அடிப்படையில் தகுதியானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொதுப் பிரிவு (General): ரூ. 200

  • OBC மற்றும் EWS பிரிவினர்: ரூ. 150

  • SC, ST மற்றும் பெண்கள்: ரூ. 100

  • முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்: கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் வழிமுறை: ஆர்வமுள்ளவர்கள் காமராஜர் துறைமுக இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

முக்கியத் தேதி: ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 28.03.2026

Related Posts