வாட்ஸ் அப்-பில் குறை சொன்ன எல்லைப் பாதுகாப்பு வீரரைக் காணோம்!
எல்லையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் எல்லைப்பாதுகாப்பு படை வீரருக்கு தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக, ராணுவ வீரர் டி.பி.யாதவ், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில் வேறு சிலவீரர்களும், ராணுவ வீரர்களும் தங்கள் குறைகளை சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர். நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை அலட்சியம் செய்வதாக அரசு மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் தங்கள் குறைகளை சமூகவலைதளங்களில் வெளியிடக்கூடாது என இந்திய ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே, டிபி யாதவ் விருப்ப ஓய்வு அளிக்குமாறு கூறினார். ஆனால், அவரது விருப்ப ஓய்வு முடிவு அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், டிபி யாதவ் எங்கு உள்ளார் என்று தங்களுக்கு தெரியவில்லை என அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த மனுவில் எல்லை பாதுகாப்பு படை இயக்குநருக்கு டிபி யாதவ் குறித்து இரு கடிதம் எழுதியதாகவும், ஆனால், எந்த பதிலும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு பிறகு மனைவியிடமும் பேசவில்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


