32°C
விளம்பரம்
Advertisement

கத்திரி வெயில் வந்துடுச்சு? இது ஒரு ஹெல்த் அலெர்ட் ரிப்போர்ட்!

admin Published: May 3, 2025 2 நிமிட வாசிப்பு Updated: August 14, 2026 ஹெல்த்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


சித்திரை மாதம் வந்து விட்டால் வெயில் வாட்டி எடுக்கும் என்று நம்மில் பலர் ஏற்கனவே கவலைப்பட ஆரம்பித்து விடுவது வாடிக்கை ஆகி விட்டது. இயற்கை மாற்றங்களின் காரணமாக, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நாம் அதிக வெப்பத்தை உணர முடிகிறது. விஞ்ஞான ரீதியாகவும், உலகளவில் வெப்பநிலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டிருக்கிறது என்பதும் நமக்குத் தெரிந்த விஷயமே.

இந்த காலத்தில் செய்யக் கூடிய செயல்கள் என்ன? தவிர்க்க வேண்டிய செயல்கள் என்ன? அதை தெரிந்து கொண்டு பின்பற்றுவோம்.

அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடியவை:

– தினமும் அதிக அளவில் தண்ணீர், இளநீர், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உணவில் சேர்க்கவும்.

– காரம், புளிப்பு, மசாலா அதிகமான உணவுகளைத் தவிர்த்து, எளிமையான உணவுகளை உட்கொள்ளவும்.

– விரதம் இருப்பவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

– திருமணம், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற சுப காரியங்களை நடத்தலாம்.

– தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வாடகை வீட்டிற்கு குடியேறலாம்.

– வீட்டு அருகிலுள்ள விநாயகர் அல்லது சிவன் கோவிலில் பால், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற குளிர்ச்சி தரும் பொருட்களை அபிஷேகத்திற்காக வழங்கலாம்.

– தண்ணீர், நீர்மோர், விசிறி போன்றவற்றை தானமாக வழங்குவது மிகுந்த நன்மை தரும்.

– வீடுகள் அருகிலும், பொதுவாகவும் மற்ற உயிரினங்களுக்காக தண்ணீர் வைக்க வேண்டும்.

– மலர்களால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

அக்னி நட்சத்திரத்தில் செய்யக் கூடாதவை

1. மொட்டை அடிக்கவும், காது குத்தவும் கூடாது.

2. மரங்களை வெட்டுவதும், புதிய மரங்களை நடுவதும் தவிர்க்க வேண்டும்.

3. சொந்த வீடு, நிலம் வாங்குதல் அல்லது சொந்த வீடு குடியேறுதல் போல் பெரிய சொத்துச் சம்பந்தமான காரியங்களை ஒத்தி வைக்கவும்.

4. வெளிநாட்டு பயணங்களை திட்டமிடுவது தவிர்க்கவும்.

அக்னி நட்சத்திர காலம் என்பது வெப்பத்தையும், உடல் நலனையும் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான காலமாகும். இயற்கையின் கடுமையான வெப்பத்தை சமாளிக்க நாம் இந்த எளிமையான பழக்கங்களை மேற்கொள்வது அவசியம்.

அதேசமயம், இறைவனுக்கான சிறிய அர்ப்பணிப்புகளும், மற்ற உயிர்களுக்காக செய்யும் சிறு தானங்களும் நம்மை நலம் பெறச் செய்யும்.

தனுஜா

உடனடி செய்திகள்