June 7, 2023

மூன்றாம் உலகப்போருக்கு அழைப்பு விடுத்து சீனா சிதைக்க போகிறதா? சிதைந்து போகிறதா?

சீனாவின் வரலாறு கிட்டத்தட்ட கிமு 2070 வருடங்களை கொண்டது என்றால் கிட்டத்தட்ட 4090 ஆண்டுகள் உள்ளது. அந்த நாடு 1916 வரை எடுப்பார் கைப்பிள்ளை என்ற நிலையில் பல ஆண்டுகளாக இருந்தது. அதற்கு காரணம் அந்த நாடு பின்னாளில் புத்த மதத்தை தழுவியதால், அஹிம்சா வழி என்பதால் பலமான மன்னரோ, ராணுவமோ அல்லது வீரர்களை கொண்டிருக்கவில்லை. அதனால் ஜப்பானியர்கள், மங்கோலியர்கள், வியட்னாமியர்கள் என்று பலரும் ஆண்டனர். அதனால் அவர்கள் படையை பெருக்குவதற்கு பதிலாக சீனப்பெருஞ்சுவரை கட்டி எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொண்டார்கள்.

அதன் பின் முதல் உலகப்போருக்கு பின்பு ஜப்பானியர்களும், ஜெர்மானியர்களும் அடிமைப்படுத்த, சோவியது ரஷ்யாவின் ஆதரவோடு கம்யூனிச புரட்சி நடந்து 1949 ஆண்டு அது சுதந்திர நாடாக கம்யூனிசத்தின் அடைமையாக மாறியது. அதன் முதல் அதிபராக ஆனவர் மாவோ சேதுங் என்ற சோவியத் ஆதரவு அதிபர். அதில் சீனாவும் (PRC-People Republic of China), ஹாங்காங் (பிரிடிஷ்), மெகாவு(Portuguese) கீழே இருந்தது. தைவான் (ROC- Republic of China) என்று இருந்த சீனாவின் பாகமாக பார்க்கப்பட்டது. மாவோ 27 ஆண்டுகள் சீனாவை ஆண்டார், அவர் புத்த துறவிகள், மடாலயங்கள் எல்லாம் அஹிம்சையை போதிப்பதால் அவர்களை கொடூரமாக கொலை செய்தார். மறுபுறம் நிலன்களை சொந்தமாக வைத்திருந்த சீனர்களின் சொத்துக்களை வலுக்கட்டாயமாக பிடுங்கி, அவர்களை கொன்றார். 20 மில்லியன் மக்களுக்கு மேல் அவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதால் அது ஒரு கொடூரனின் கொடுங்கோல் ஆட்சியாகவே 27 வருடங்கள் இருந்தது.
அடுத்த ஆண்டே உலக நாடுகள் சபையில் உறுப்பினர் ஆகியது. அப்போது இந்தியாவிற்கு கொடுத்த நிரந்தர உறுப்பினர் பதவியை, மாமா நேரு சீனாவிற்கு தாரை வார்த்து கொடுத்தார். அப்போது முதல் தைவானை உள்ளடக்கிய சீனா என்பது ஒரே நாடு என்று ஒத்துக்கொண்டாலும், அதை தனித்தனியே மேற்குலகம் பார்த்தது. 1972 ல் சோவியத் நாடுகள் சீனாவை தன்னுள் இணைத்துக்கொள்ளும் என பயம் வந்து, சீனா தன்னை பாதுகாத்துக்கொள்ள, அமெரிக்காவின் ஆதரவை நாடியது. அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டது.

அதன்பின், அமெரிக்காவின் கடைக்கண் பார்வை பட்டு, அமெரிக்காவின் தேவைகள் அனைத்தையும் சீனா தனது அடிமை மக்களை வைத்து செய்து கொடுத்ததால், அங்கே அமெரிக்கர்களின் முதலீடு பல்கிப்பெருகியது. ஒருபக்கம் அமெரிக்காவின் முதலீடு, மறுபக்கம் ஜப்பானின் தொழில் நுட்பம் என்று இரண்டும் சேர்ந்தது. அங்குள்ள தொழிலாளர்கள் சுதந்திர அடிமைகளாகவே மேற்குலக நாடுகளின் தேவையை பூர்த்தி செய்தது. அப்படிப்பட்ட தொழிற்சாலைகள் மூலம் விலை குறைவான அன்றாட தேவைகளை ஒரு புறமும், தங்கள் நாடுகளின் சுற்று சூழல் மாசுபடாமல் பார்த்துக்கொள்ளவும் மேலை நாடுகளுக்கு சீனா பெரிதும் உதவியது.

அதன் மூலம் பெரும் பணம் அன்னிய செலாவணியாக கிடைக்க, அதை ஒரு புறம் மேலை நாடுகளின் தொழில் நவீன மயமாக்கல் மூலம் உதவியுடன் மேம்பாட்டினை ஒரு பக்கம் செய்யவும், மறுபக்கம் அதே பணத்தை அமெரிக்க ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ததால், சீனாவிற்கு பல தொழில்நுட்பமும், தொழில்களும் அதனிடம் பெயர்ந்தது. அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இப்போது எப்படி Information Technology வேலை வாய்ப்புகள் வந்ததோ, அது போல சீனர்களை Production Industries ஆக பயன்படுத்தியது.

ஒரு நிலையில் அதன் அளவுக்கதிகமான பணப்பெருக்கம் உயர, தன்னை சோவியத் நாடுகளிடம் இருந்து காத்துக்கொள்ள அமெரிக்காவின் ஆயுதங்களை கொள்முதல் செய்தது. அதனால் ஒரு புறம் அன்றாட தேவைகளை எளிய விலையில் கொடுத்த சீனாவிற்கு, உயர் தொழில் நுட்பங்களை அளித்துது. சீனா என்பது சோவியத் யூனியன் போல அறிவாளிகளை கொண்டதாக இல்லாவிட்டாலும், ஒரு பொருளின் நுட்பத்தை காப்பி அடிப்பதில் வல்லவர்கள். அதன் மூலம் அது தன் ஆயுத உற்பத்தியையும் பெரியளவில் அதிகரிக்க, அதுவரை உதவிய அமெரிக்கா, அதன் வளர்ச்சி எல்லை மீறிப்போவதை உணர்ந்து, அதை கட்டுப்படுத்த முயன்றது. அதனால் சீனா, மாற்றாக ரஷ்யாவின் உதவியை மீண்டும் நாடி, அதன் மூலம் ஆயுதங்களை வாங்கி, அதையும் காப்பி அடித்து ஆயுத உற்பத்தியை பெருக்கியது.

அதன் ராணுவ பலம் அதிகரிக்க, அண்டை நாடுகள் அனைத்தையும் ஆக்கிரமிக்க தொடங்கியது. அதனால் புத்த மதம் தழுவிய திபெத், தன்னை தற்காத்துக்கொள்ள இந்தியாவுடம் இணைய விருப்பம் தெரிவித்தது. ஆனால் மாமா நேரு வழக்கம்போல அதை மறுத்தார்ன் அதனால் சுதந்திர நாடான திபெத்தை சீனா தன்னுள் கொண்டுவந்தது. அதுவரை இந்தியவிற்கு இடையே ஒரு சிறு எல்லையை கொண்டிருந்த சீனா, திபெத் இணைப்பின் மூலம் நீண்ட எல்லைகளைக்கொண்ட அண்டை நாடாகியது. இந்தியா, வியட்நாம், கொரியா, ரஷ்யா என்று எல்லா நாடுகளுடன் உரசியது. இந்தியாவின் மாமா நேரு சீனர்கள் மோசமானவர்கள் என்று இந்திய ராணுவ மந்திரிகள், அமைச்சர்கள் பல முறை எச்சரித்தும் அதை காதில் வாங்காததால் 1962 ல் லடாக்கின் கிழக்கு பகுதியை போர் புரியாமலே இழந்தோம்.

அடுத்து பாகிஸ்தானின் பக்கம் இருந்த காஷ்மீரின் ஒரு பங்கை தான் வைத்திருக்க முடியாது என்பதால் அதை சீனாவிற்கு.கொடுத்து உறவாகியது. அப்போது அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஒரு அணியில் இருந்த நாடுகள். அதன் பின்னர் சீனாவின் ஆயுதம் பெருமளவில் உயர, அது தன்னை அடுத்த வல்லரசாக்க உயர்த்திக்கொள்ள முயல, அதற்குள் அதன் வலிமை தடுக்க முடியாத அளவிற்கு பெருகிவிட்டது. ஆனால் தைவான் அமெரிக்காவின் உதவியோடு வளர, அதை உரிமை கொண்டாட, அதற்கு மேற்குலக நாடுகள் எதிர்த்தது.

சீனா தனது One China Policy யில் பல்வேறு சமயங்களில் சீனாவின் ஆட்சிக்கு உற்பட்டு இருந்த எல்லா இடமும் தன் நாடு என்கிறது. அதாவது இந்தியாவின் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் இந்தோனேஷியா வரை நாம் ஆண்டோம் என்பதற்காக, அது ஒருமைப்பட்ட இந்தியா என்றால் ஏற்றுக்கொள்வார்களா? ஆனால் சீனா சொல்வது அதைத்தான். அதுமட்டுமல்ல, தென் சீனகடலில் உள்ள தீவுகள் பலவற்றை தன்னுடையது என்று ஆக்கிரமிக்க துவங்கியது. அதன் மூலம் தென் சீனக்கடல் முழுவதும் தன்னுடையது என உரிமை கொண்டாட வேண்டும் என்பதால். அதனால் வியட்நாமை அதன் எல்லைக்கு உற்பட்ட கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க விடாமல் தடுத்து சொந்தம் கொண்டாடியது. அது எதிரிக்கு எதிரியான இந்தியாவுடன் காங்கிரஸ் ஆட்சியில் எண்ணெய் துறப்பணி செய்ய ஒப்பந்தம் போட்டது. அதற்கு உதவ இந்திய துறப்பணிக்குழு தென் சீனக்கடல் செல்ல, அதை தடுத்து விட்டது.

மோடி ஆட்சிக்கு வந்தபின், சீனா பாகிஸ்தான், நேபாள், பங்களாதேஷ், இலங்கையில் உள்ளே நுழைந்து இந்தியாவை சுற்றி வளைக்க முயல, இந்தியா வியட்நாம் எண்ணெய் துறப்பன பணியை மீண்டும் துவங்குவதாக அறிவித்தது. இந்தியா அங்கு வந்தால் அவர்களை தாக்குவோம் என்று எச்சரிக்க, இந்தியா தன் துறப்பணி குழுவுடன் கப்பற்படையை தென் சீனக்கடலுக்கு அனுப்பியது. தாக்கினால் திருப்பி தாக்குவோம் என்று அதன் பாணிய்லேயே பதில்சொல்ல, சீனா செய்த தகிடுதத்த மிரட்டல்கள் எல்லாம் வீணகிப்போனது. இந்தியாவின் இந்த போர்க்குணம் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளை வெகுவாக கவர்ந்தது. அதாவது சீனாவை எதிர்கொள்ள ஒரு பலமான எதிரி என்ற வகையில் அதன் பின்னர் இந்திய-அமெரிக்க உறவுகள் புதிய உயரம் தொட்டது. அதனால் குவாட் நாடுகள் கூட்டமைப்பு ஏற்படுத்தி, தென் சீன கடலில் தங்களது போர் ஒத்திகை பார்த்து, இது உலகத்தின் பொதுப்பகுதி என்று பறை சாற்றியது. அந்த சூழலில் கொரானா வந்தது.

கொரானாவிற்கு முன்புவரை சீனாவின் மீது பல நாடுகள் அதன் கட்டுப்பாடற்ற பொருளாதார ஆதிக்கத்தை எதிர்த்தாலும், சீனா இல்லாமல் தங்களுடைய பொருளாதாரம் பிரச்சினைக்கு உள்ளாகியது. அதற்கு இன்னொரு காரணம், அது தன்னிடம் இருப்பதாக சொல்லும் மிக பயங்கரமான ஆயுதங்கள், பெரிய ராணுவம், விமானப்படை, கப்பற்படை என்பதும் ஒரு காரணம். ஆனால் கொரானவிற்கு பிறகு பல நாடுகள் அதை தனிமைபடுத்த முன்வந்தது. ஆனாலும் பூனைக்கு மணிகட்ட யாரும் முன்வரவில்லை என்பதால் status quo தொடர்ந்தது. அந்த நிலையில், இந்தியா கொரானாவின் தாக்கத்தில் இருந்த போது, பூடானை கபளீகரம் செய்ய சீனா நினைத்தது. அதன் மூலம் கிழக்கிந்திய பகுதி துண்டிக்கப்பட்டு, தன் பகுதி என்று சொன்ன அருணாச்சல பிரதேசத்தை எளிதாக கைப்பற்றலாம் என்பது ஒரு காரணம். ஆனால் இந்திய படைகள் தடுத்ததால் அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது சீன மக்களிடம் அதன் ராணுவத்தை சந்தேகமாக பார்க்க வைத்தது.

அடிபட்ட சீனா சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தது, இந்தியா கொரானா தாக்குதல் அதிகரித்த வேளையில், லடாக்கில் LAC யை தாண்டி நுழைந்தது. அதில் 340+ PLA ராணுவ வீரர்கள், இந்தியாவின் 80+ ராணுவ வீரர்களை மிரட்டி பணிய வைக்க முயல, இந்திய ராணுவம் அவர்களை துவைத்து துவம்சம் செய்து விட்டது. அதில் சீன ராணுவம் என்பது ராணுவ உடையில் இருக்கும் கம்யூனிச ரவுடிகள், பலமற்றவர்கள் என்று உலகத்திற்கு புரிந்தது. அதை மறைக்க சீனாவோ பல மிரட்டல்களை முன்வைக்க, இந்தியா எளிதாக சமாளிக்க சீனாவின் ராணுவ பலம் எனபது ஒரு எண்ணிக்கையால் ஆன வெத்து வேட்டு என்பதை உலகம் அறிந்து நகைத்தது.

இந்த சூழலில், ஜீபிங்கின் பதவிக்காலம் 2023 ல் முடிவடைகிறது. அங்கே நேரடி தேர்தல் இல்லாததால், கம்யூனிஸ்ட் கட்சியின் போர்டு உறுப்பினர்கள் மூலம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒரு அதிபர் இரண்டு முறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட முடியாது. ஆனால் ஜிபிங் நிரந்தர அதிபர் என சொல்கிறார். ஆனால் இந்தியாவிடம் வாங்கிய அடி, மோசமாக கையாண்ட கொரானா, 40 ஆண்டுகளுக்கு பின்னர் வீழ்ந்த பொருளாதாரம், சீனாவை சுற்றி வளைக்கும் குவாட் நாடுகள், சுற்றியுள்ள நாடுகள் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் எதிர்ப்பு, சீனாவின் சில்க் ரோடுகளில் செய்த முடிக்க முடியாத முதலீடுகள், கடன் கொடுத்த நாடுகள் திவால் என்று பலவும் சீனாவை ஒரு அரக்கன் என்ற வெத்து வேட்டு என்ற பிம்பத்தை கொடுத்துவிட்டது. அதனால் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் எதிர்ப்பு வலுக்கிறது.

அவர் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் இப்போது அது தன்னை உலகின் மிக பலமான நாடு என்று காட்டிக்கொள்ள வேண்டும். அதனால் தைவானை சீனா கபளீகரம் செய்ய முயல்கிறது. ஏனெனில் அதன் தொழில் வளர்ச்சியும், அதன் இருப்பிடமும் முக்கியம் என்பதால். அதை தடுக்க அமெரிக்கா செய்யும் முயற்சிகள் உலகம் அறியும். சீனாவின் மோசமான உறவுகளால், நேட்டோ மற்றும் பல நாடுகள் கடும் கோபத்தில் உள்ளது. இப்போது சீனாவால் தைவானை தாக்க நேரடியாக தாக்க முடியாது. அதை செய்தால் அமெரிக்கா போரில் இறங்கலாம் அல்லது பல நாடுகள் அதை பொருளாதர ரீதியில் தனிமை படுத்தலாம். ஏற்கனவே தனிமை படுத்தப்பட்ட ரஷ்யா, சீனாவை ஆதரித்தால், அது இந்தியாவின் ஆதரவை இழக்கக்கூடும் என்பதால் அது நேரடியாக போரில் குதிக்காது என்று நேட்டோ நம்புகிறது.

இப்படிப்பட்ட சூழலில், சீனா படம் காட்டுவதை மட்டுமே தேர்தல் முடியும்வரை தொடரும் என்பதை அமெரிக்கா, இந்தியா அறியும். அதனால் அது இலங்கைக்கு தன் யுவான் சாங் கப்பலை அனுப்பி தன் வீரதீரத்தை காட்டிக்கொண்டது. அது மட்டுமல்ல, சீன மக்களுக்கு உண்மையான வெள்யுலக செய்திகள் தெரியாத நிலை. இந்த நிலையில் உக்ரைன் போரால், அமெரிக்காவின் வல்லரசு என்ற அதிகாரம் சந்தேகத்திற்கு உள்ளாகிவிட்டது. இந்த கையறு நிலையில் அது தைவானையும் சீனா கபளீகரம் செய்துவிட்டால், அது தன் வல்லரசு என்ற பட்டம் நகைப்புக்கு உள்ளாகிவிடுவது மட்டுமல்ல, மறுபுறம் சீனா தன்னை வல்லரசாக காட்டிக்கொள்ள தயங்காது.

அதை தவிர்க்க வேண்டுமெனில் சீனாவை நேரடியாக எதிர்க்க இந்தியாவின் உதவி மிக அவசியம். அதனால்தான் இந்தியா அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் எச்சரிக்கையை மீறி கச்சா எண்ணெய், ஆயுதங்கள் ரஷ்யாவிடம் வாங்க அனுமதிக்கிறது. அதில் சீனாவுடன் போருக்கான சாத்தியங்களை கொண்டே S-400 பாதுகாப்பு கவசத்தை இந்தியா வாங்குவதை தடுக்க முடியாத சூழலில் அமெரிக்கா உள்ளது.

ஒரு வேளை சீனா தைவானை தாக்கினால், ரஷ்யா அந்த போரில் குதிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதில் இந்திய-ரஷ்யாவின் உறவு மூலம் ரஷ்யா சீனாவிற்கு ஆதரவு கொடுக்காமல் இருக்க உதவும். அதே வேளையில், இந்தியா சீன எல்லையில் படைகளை குவிப்பதன் மூலம் அது தன் முழு படைகளை தைவானுக்கு எதிராக கொண்டு செல்ல முடியாத சிக்கல் ஏற்படும். எனவே தைவானை காக்க இந்தியாவின் தயவு மிக அவசியம்.

ஆனால் சீனா தன் மிரட்டலை தைவானிடம் தொடர்ந்து காட்டும். அதன் மூலம் அதன் பொருளாதாரத்தை சீரழிக்கலாம் என்பது அதன் நோக்கம். அதனால் தைவான் தனது முக்கிய தொழிலான சிப் உற்பத்தியை அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செய்ய பெருமளவில் முதலீடு செய்கிறது. அது தொழில் பரவலாக்கம் மூலம் சீனாவை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற உதவும். அதே சமயம் அமெரிக்காவிடம் மேலும் பல ஆய்தங்களை வாங்க உள்ளது. சீனாவின் HQ-9 பிரம்மோஸை பாகிஸ்தானில் தடுக்க தவறியதால் இந்தியாவிடம் அந்த ஏவுகணையை வாங்க உத்தேசிக்கிறது. இதனால் சீனாவின் கோபம் மேலும் இந்தியாவின் மீது அதிகரிக்கும் என்பதால் இந்தியாவிற்கு எதிரான காய் நகர்த்தல்களை நவம்பர் வரை அதிகரிக்கும். அத்ற்கு பதிலாக இந்திய-அமெரிக்கா படைகள சீனாவின் எல்லைக்கு அருகில் ஒரு போர் ஒத்திகையை அடுத்த சில நட்களில் தொடங்குகிறது.

இதை ஜிபிங் எப்படி சமாளிக்க போகிறார்? அதற்கு குவாட் நாடுகள் என்னேன்ன நகர்த்தல்களை கொடுக்க போகிறது என்பது மிக திர்லிங்கான ஒரு சூழ்நிலை. சீனா தைவானை தாக்கினால், மூன்றாம் உலகப்போராக மாற வாப்புகள் உண்டு. அது நடந்தாலும், நடக்காவிட்டாலும் சீனா தனிமைப் படுத்தப்படுகிறது!

மரு. தெய்வசிகாமணி