தமிழ் குரல் / AI Voice
கோலிவுட்டில் ஒரு சாபம் உண்டு. பல சமயங்களில் ஒரே டைப்பிலான படங்கள் வெளியாகி ரசிகர் களைக் கொல்லும்.. அம்மன் படம், பேய் படம், அம்மா செண்டிமெண்ட் படம், போலீஸ் ஆபிசர் படம் என்ற டைப்பில் அடுத்தடுத்து வருவது வாடிக்கை. ஆனால் க்ரைம் த்ரில்லரான சீரியல் கில்லர் டைப்பிலான படம் மட்டும் அரிதாக வரும். காரணம் இந்த சைக்கோ அல்லது சீரியல் கில்லர் வகை யான படமெடுக்க ரொம்ப யோசிக்க வேண்டும்.. கடுமையாக உழைத்து அதே சமயம் ஒவ்வொரு சீனையும் வித்தியாசமாக காட்டி பிரமிக்க வைக்க வேண்டும்..அதற்கெல்லாம் நம்மூர் டைரக்டர்கள் சரிப்பட்டு வர மாட்டார்கள். ஆனால் இன்று ரிலீஸான் ‘இமைக்கா நொடிகள்’ என்னும் தலைப்பிலான படம் மேற்படி சீரியல் கில்லர் கதையுடன் மேலும் சில பல திரைக்கதைக் கதை களையும் பட்டுக்கோட்டை பிரபாகர் துணையோடு பின்னி, பிணைந்து சுவை பட கொடுக்க முயன்றிருக்கிறார் டிமாண்டி காலனி இயக்குநர் அஜய் ஞானமுத்து.
கேமியோ ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார் கொஞ்சம் அதிக செலவில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். படத்தின் நாயகியாக கோடம்பாக்க லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் அதர்வா, ராஷி கண்ணா, தேவன், ஆர்.ஜே.ரமேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இவர்களுடன் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் முக்கியமான கேரக்டரான சைக்கோ கில்லராக நடித்துள்ளார். கூடவே நடிகர் விஜய் சேதுபதி நயன் கணவராக கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் கதை என்னவென்று சொல்வதற்கு முன் ஒரு தகவல் ; இந்த இமைக்கா நொடிகள் கதையை அஜய் ஞானமுத்துவிடம் கேட்டு, அக்கதையும் ரொம்ப பிடித்துப் போய் அவரே தயாரிப்பா ளரை பிக்ஸ் செய்து கொடுத்து படத்தின் உருவாக்கத்திற்கும முழுமுதற் காரணமாகவும் இருந்திருக்கிறார் நயன்தாரா
அப்படி லேடி சூப்பர் ஸ்டரையே கவர்ந்த கதை இதுதான் : ஐ. டி. நகரமான பெங்களூருவில் ஒரு பெண்ணை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார் அனுராக் காஷ்யப். இந்த விஷயம் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாராவிற்கு தெரிய, அதை கண்டு பிடிக்க முயற்சிக் கிறார். ஆனால், வில்லன் அனுராக் தான் கேட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு கடத்தி வந்த பெண்ணை கொடூரமாக கொலையும் செய்து விடுகிறார்.அத்துடன் இதுபோன்று கொலைகள் அடிக்கடி நடக்கும் என்று நயன்தாராவிற்கு போனில் மிரட்டல் விடுகிறார்.
இடையில் ஒரு பிளாஷ் பேக் : பெங்களூரில் 5 ஆண்டுகளுக்கு முன்பாக 3 இளைஞர்கள் வரிசையாக படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கை பெங்களூர் போலீஸார் விசாரித்தனர். ஆனால் குற்றவாளியை நெருங்கிய சமயம் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அப்போது இந்த வழக்கை நயன்தாராதான் விசாரித்து விசாரணையின் முடிவில் ருத்ரா என்னும் அந்த சீரியல் கொலைகாரன் இவன்தான் என்று ஒருவனை சுட்டுக் கொலை செய்து கேஸை முடித்து வைத்தார் ஆனால் தர்போது அந்த ருத்ரா பெயரைச் சொல்லியே தொடர்ந்து கொலைகள் நடக்கிறது. அதிலும் ஒரு அமைச்சர் ஒருவர் மகனையும் கடத்துகிறார் அனுராக். கூடவே தந்திரமாக பணத்தை நயன் தாராவிடம் கொடுத்தனுப்பும்படி சொல்லிவிட்டு அவரிடத்தில் இருந்தே பணத்தையும் வாங்கிக் கொண்டு அமைச்சரின் மகனையும் படுகொலை செய்து விடுகிறார் அனுராக்.
இப்படி கொலை கொலையா முந்திரிக்கா சொல்லும் வில்லன் – ஐந்தாண்டுகளுக்கு முன்னால் சீரியல் கொலைகளை செய்த ருத்ராவாகிய நான்தான் என்று டிவிக்களுக்கெல்லாம் போன் போட்டு சொல்கிறார் அனுராக். ஆனால் சிபி ஆபிசர் நயனோ அதை நம்பத் தயாராக இல்லை. இதில் யாரோ சூழ்ச்சி செய்து விளையாடுவதாகவே நினைக்கிறார். ஆனாலும், நயன்தாரா அனுராக்கை கண்டுபிடிக்கவே முடியாமல் தவிக்கிறார்.
இது ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் சென்னையில் நயன்தாராவின் தம்பியான அதர்வா டாக்டராக இருக்கிறார். அதே பகுதியில் இருக்கும் மாடலிங் பெண்ணான ராஷி கன்னாவிற்கும் இவருக்கும் நட்பு ஏற்படுகிறது. இவர்களின் நட்பு காதலாக மாறுகிறது. இதை இருவருமே சொல்லிக் கொள்ளாத நிலையில், சிறு பிரச்சனையில் பிரிகிறார்கள்.
இவர்கள் இருவரும் பெங்களூருவில் சந்திக்கிறார்கள். அப்போது ராஷி கன்னாவை அனுராக் கடத்தி விட்டு இந்த கடத்தலில் அதர்வாவை சிபிஐயிடம் சிக்க வைத்து விடுகிறார். தம்பி சிபிஐயிடம் மாட்டிக் கொண்டதால் நயன்தாராவிற்கு வேலையில் பிரச்சனை ஏற்படுகிறது.
இறுதியில் அனுராக் காஷ்யப்பை நயன்தாரா எப்படி பிடித்தார்? சிபிஐ பிடியில் இருந்து அதர்வா தப்பித்தாரா? அனுராக் ஏன் சீரியல் கில்லர் ஆனார் என்பதே படத்தின் மீதிக்கதை.
சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கு நயன்தாராவை ஒரு ஆபீசர் என்ற கேரக்டரையும் மீறி ரசிக்க வைத்திருக்கிறார்கள். அதீத நடிப்பையெல்லாம் காட்டாமால தன்னுடைய கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ, அதற்கு ஏற்றார் போல் நடிப்பை அளவாக வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லத் தனத்தில் மிரட்டி இருக்கிறார் அனுராக் காஷ்யப். படத்தின் டைட்டிலை புரிந்து ரசிகர்களை கண் இமைக்க விடாத அளவில் ஆக்டிங் கொடுத்து அசத்தி இருக்கிறார். இனி தமிழ் சினிமாவில் அனு ராக் இன்னும் பல படங்களில் வில்லனாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம். வில்லனுக்கு குரல் கொடுத்து தனிக் கவனம் பெற்றுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.. இவரின் குரலாலும் வில்லன் ரோல் ரொம்ப கெத்தாக் இருக்கிறது
நயன்தாராவின் தம்பியாக வரும் அதர்வா, இளமை துள்ளலுடன் சுறுசுறுப்பாக நடித்திருக்கிறார். ராஷி கன்னாவுடனான காதல் காட்சிகளின் போது இப்போதைய ட்ரெண்டிங்கான ஹக் சமாச் சாரத்தால் பிரேக்கிங், ஃபாலோ அப் என்று ரசிக்க வைக்கிறார்.
சிறப்பு தோற்றத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் விஜய் சேதுபதி. இவரின் கதா பாத்திரம் படத்தின் ஓட்டத்திற்கு துணை நிற்கிறது. அதுபோல் நயன்தாராவிற்கு குழந்தையாக நடித்திருப்பவரும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் அவ்வளவாக எடுபடவில்லை என்றாலும் பின்னணி இசை ஓகே. ஆனாலும் விஜய்சேதுபதி, நயன்தாரா பாடல் முணுமுணுக்க வைத்தி ருக்கிறது. கொடுத்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பளிச் சிடுகிறது.
ஆரம்பத்தில் சொன்னது போல் க்ரைம் திரில்லர் கதையை தன்னால் முடிந்த அளவுக்கு வித்தி யாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. முந்தைய பேய் படமான டிமான்ட்டி காலனி சிறந்த வரவேற்பை பெற்றதுபோல், இப்படத்தையும் ரசிகர்களுக்கு பிடிக்கு வகையில்தான் கொடுத்து இருக்கிறார். ஆனால் ஆங்காங்கே கொஞ்சம் லாஜிக் மீறல்கள், கதையோட்டத்திற்கு தேவையில்லாத காட்சிகளின் இடைச் செருகல் என படத்தை பலவீனமாக்கும் வேலையையும் செய்து இருக்கிறார்.
மொத்ததில் இந்த இமைக்கா நொடிகள் இன்றையை யூத்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்!
மார்க் 5 / 3. 5


