Y குரோமோசோம்கள் ரொம்பக் குறைச்சல்!- ஆண் பாலினமே அழியும் சூழ்நிலை?!

Y குரோமோசோம்கள் ரொம்பக்  குறைச்சல்!- ஆண் பாலினமே அழியும் சூழ்நிலை?!

ஆண்களின் ரத்த செல்களில் Y குரோமோசோமின் அளவு நாளுக்கு நாள் குறைவதனாலேயே ஆணின் ஆயுள் குறைவதாகவும், அவர்களை கான்சர் உள்ளிட்ட நோய் தாக்குவதாகவும் முன்னரே ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு இருந்தது.மேலும் ஆண்களுக்கு ‘Y குரோமோசோம்’ செக்ஸ் உறவுக்கு மட்டுமல்ல, அவர்களின் ஆயுளுக்கும் முக்கிய காரணியாக உள்ளது என்றும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே இன்னும் சில பல மில்லியன் ஆண்டுகளில் y குரோமோச்சொம்கள் மறைந்து ஆணினமே அழிந்து விடும் வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பெண்களை விட ஆண்களுக்கு ஆயுள் குறைவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது ஆண்களில் ஆயுள் எதனால் குறைகிறது என்பதை சில ஆண்டுகளுக்கு முன்னரேபிரிட்டனில் உப்சலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருந்தார்கள்.

அதாவது உயிரினங்கள் அனைத்தும் செல் எனப்படும் நுண்ணிய பகுதியால் ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செல்லினுள்ளும் 46 குரோமோசம்கள் உள்ளன. இந்த குரோமோசோமிற்குள் மனித வம்ச பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கிய வளை போன்ற நுண்ணிய துணுக்குகளான நியூக்ளிக் அமிலங்கள் அதாவது டி.என்.ஏ (D.N.A.) உள்ளன. இதனிடையே உலக அளவிலான ஆராய்ச்சியார்கள் குழு ஒன்று வயது முதிர்ந்த ஆண்கள் 1600 பேரின் ரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்தனர். Y குரோமோசோம் ஆய்வில் பங்கேற்ற அனைவருக்கும் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களில் ஒய் குரோமோசோம் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. இதனாலேயே ஆணின் ஆயுள் குறைகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது, உள்ள அளவின் படி இந்த Y குரோமோசோம்கள் தொடர்ந்து மறைந்து வந்தால், இன்னும் 4.6 மில்லியன் ஆண்டுகளில் Y குரோமோசோம்கள் மறைந்துவிடும் என்று யூகித்துள்ளார்கள். இந்த ஆண்டுகள் மிக அதிகமாகத் தெரியலாம். ஆனால், பூமியில் உயிர்கள் தோன்றி 3.5 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனோடு ஒப்பிடும் போது Y குரோமோசோம்கள் மறைவதற்கான காலம் என்பது மிகக்குறைவுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதனால், ஆண் பாலினமே அழியும் சூழ்நிலை உருவாகுமோ என்று சில சந்தேகங்கள் ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால், உடலில் இருக்கும் மற்ற குரோமோசோம்கள் அந்த இடத்தை பூர்த்திசெய்யக்கூடும் என்றும் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். இன்னொருபுறம், செயற்கை கருத்தரிப்பு மூலம் மட்டுமே இனப்பெருக்கம் நடைபெறும் சூழல் உருவாகும் என்றும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண் பாலின உயிர்களை மட்டுமே வைத்து கருவுறச்செய்யும் பணி நடைபெறக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள் என்பதுதான் அடிசினல் தகவல்.

error: Content is protected !!