இந்தி மூன்றாவது நீதிமன்ற அலுவல் மொழியாக ஏற்பு!- ஐக்கிய அரபு எமிரேட் அறிவிப்பு!

இந்தி மூன்றாவது நீதிமன்ற அலுவல் மொழியாக ஏற்பு!- ஐக்கிய அரபு எமிரேட் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இந்தி மொழி கற்றுக் கொடுப்பதை வெறுத்து அதை எதிர்த்து போராட்டமெல்லாம் பண்ணும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்டு களில் மூன்றாவது நீதிமன்ற அலுவல் மொழியாக இந்தி மொழி அங்கீகரிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே அபுதாபியில் அரபிமொழி, ஆங்கிலம் ஆகியவை நீதிமன்ற அலுவல் மொழிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசின் அரசு மொழியான இந்தியை ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் நீதித்துறை மூன்றாவது அலுவல் மொழியாக ஏற்கப் பட்டிருப்பதை சனிக்கிழமையன்று அறிவித்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மொத்த மக்கள் தொகை 50 லட்சம் ஆகும் இதில் மூன்றில் இரண்டு பகுதி யினர் வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள். இங்கு உள்ள இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை மட்டும் 26 லட்சம் ஆகும். இந்தியர் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 30% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ள வெளிநாட்டவராக இந்தியர் உள்ளனர். இதையடுத்து இந்திய நீதிமன்றத்தின் மூன்றாவது அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கின. இன்று ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் நீதித்துறை அறிவிப்பு நடைமுறையில் இதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

Related Posts

error: Content is protected !!