தாமரை நகரான மதுரையில் தாமரை மலர்வது உறுதியாகி விட்டது…!

தாமரை நகரான மதுரையில் தாமரை மலர்வது உறுதியாகி விட்டது…!

தமிழ்நாட்டில் பிஜேபி அதிமுககூட்டணி உறுதியா ன நிலையில் பிஜேபி போட்டியிட உள்ள தொகுதிகளை பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன. இதில் தமிழகத்தில் இருந்து மோடி போட்டியிட இருக்கிறார் என்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை தொகுதியில் போட்டி யிட இருக்கிறார் என்றும் செய்திகள் பரவிக் கொண்டு வருகின்றது..

இதில் மோடி கோவை அல்லது திருப்பூரில் நிற்க வாய்ப்புகள் உள்ளன என்று சில ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இது நடைபெறலா ம் இல்லை நடைபெறாமல் போகலாம் அது மோடி யின் மனநிலையை பொறுத்தது. ஆனால் மோடி தமிழகத்தில் போட்டியிட இருக்கிறார் என்று செய்திகள் வெளி வந்ததே தமிழகத்திற்கு கிடைத்த வர பிரசாதம் என்றே கூறலாம்..

மோடியோட குணாதிசயம் என்னவென்றால் தனக்கு எங்கே எதிர்ப்பு அதிகமாக இருக்குறதோ அங்கே நுழைந்து தன்னுடைய ஆளுமையை நிலை நாட்ட நினைக்கும் குணம் படைத்தவர். அந்த வகையில் தமிழ் நாட்டில் இருந்து தான் இப்பொழுது அவருக்கு கோ பேக் மோடி என்று எதிர்ப்பு வத்துள்ளதால் அங்கேயே போட்டியிட்டு வீ வான்ட் மோடி என்று தமிழக மக்களின் குரல் ஒலிக்கவேண்டும் என்றும் மோடி நினைக்கலாம்.
..
அடுத்து மதுரையில் இந்தியா வின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்  நிர்மலா சீதாராமன் போட்டி யிட இருக்கிறார் என்றும் செய்திகள வருகிறது. இதை உண்மையாக வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் நேற்று எங்கள் பகுதி அதிமுகவின் தலைவரை சந்தித்து கூட்டணி நிலவரங்கள் எப்படி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினேன்..

அதற்கு கூட்டணி உறுதியாகிவிட்டது.அதோடு மதுரையில் நிர்மலா சீதாராமன் போட்டி யிட இருக்கிறார் என்று எங்களின் தலைமை கழக த்தில் இருந்து செய்திகள் வருகின்றது என்றும் கூறினார். ஆக அரசல் புரசலாக பத்திரிக்கை களில் நான் பார்த்த இந்த செய்தியை எங்கள் ஏரியாவின் அதிமுக தலைவரும் உறுதி செய்துள்ளதால் இதை நம்பவே தோன்றுகிறது…

தமிழகத்தில் வேறு எந்த நகருக்கும் இல்லாத பெருமை மதுரை மாநகருக்கு மட்டுமே இருக்கிற து..எப்படி வடக்கில் வாரணாசி இந்திய பண்பாட்டின் தலைநகராக இருக்கிறதோ அதே
மாதிரி தெற்கில் மதுரை இந்திய பண்பாட்டின் தலைநகரமாகவும் இருக்கிறது.

எப்படி காசி இந்து மரபின் படி தொன்மையான நகரமாக போற்றப் படுகிறதோ அதேமாதிரி மதுரையும் இந்து புராணங்கள் போற்றும் ஒரு புண்ணிய பூமியாகவே இருந்து வருகிறது. ராமாயணம் மகாபாரதம் என்று இதிகாசங்கள் மதுரையை முன் வைத்து சில சம்பவங்களை கூறியுள்ளதால் தென்னிந்தியாவில் மதுரை காசிக்கு இணையான இந்து தொன்மவியல் நகரம் என்று பெருமை கொண்டுள்ளது.

மதுரைக்கு கோயில் நகரம் தூங்கா நகரம் கூடல் மாநகரம் என்றுஎத்தனையோ பெயர்கள் இப்பொ ழுதும் இருந்தாலும் ஆலவாய்,கடம்பவனம், கூட ல், நான் மாடக் கூடல், கன்னிபுரிசம், சிவராஜதா னிசிவநகரம்., சமஷ்டி விச்சாபுரம், சீவன் முத்திபுர ம், சிவலோகம்., துவாத சாந்தபுரம் என்று பல பெயர்கள் மதுரைக்கு இருந்தாலும் மதுரைக்கு உள்ள மிக முக்கிய மான பெயர் ஒன்றும் உள்ளது அது தாமரை நகரம் என்பதே..

இந்த தாமரை நகரம் என்கிற பெயர் எப்படி மதுரைக்கு வந்தது என்றால் மதுரை மாநகரை உருவாக்கிய குலசேகர பாண்டியன் பாண்டிய மன்னர்களில் தொன்மவியல் பாண்டியர்கள் என்று போற்றப் படும் இதிகாச புராண காலத்தில் மதுரையை ஆண்ட மன்னர்கள் லிஸ்டில் இருக்கிறார். இந்த குலசேகர பாண்டியன்தான் மீனாட்சி அம்ம ன் கோயிலை உருவாக்கி அதனை மையமாக வைத்து மதுரை மாநகரை உருவாக்கி யவர் என்று பாண்டிய மன்னர்களின் வரலாறு கூறுகிற து. மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வை த்து உருவான வீதிகள் நேர்கோட்டில் அமையாது சதுர வடிவில் அடுக்கடுக்காக அமைந்து தாமரை மலரின் இதழ்கள் போன்று இருந்தால் மதுரை யை தாமரை நகரம் என்று சங்க கால இலக்கிய ங்கள் கூறுகின்றன.

இதை முன் வைத்து தான் கிமு மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த மெகஸ்தனீஸ் மதுரையை பார்த்து விட்டு கிரேக்க தலைநகரமான ஏதேன்ஸ் நகரின் அமைப்பு போன்று மதுரையும் இருக்கிறது என்று தன்னுடைய பயணக் குறிப்பான இண்டிகாவில் எழுதியுள்ளார்.

அதனால் தான் மதுரையை கிழக்கு ்நாடுகளின் ஏதேன்ஸ் நகரம் என்று உலகமே அழைத்து வருகிறது.இப்படி உலகமே மதுரையை அறிந்து கொள்ள காரணமாக இருந்தது அதன் அமைப்பா ன தாமரை வடிவம்.அதே. மாதிரி இன்றைய மதுரையை உலகம் அறிந்து கொள்ள துணை நிற்கப் போவது தாமரை சின்னம்.

மதுரையில் பிஜேபி போட்டியிடுவது உறுதியாகி விட்ட நிலையில் மதுரையில் பி ஜேபி வெற்றி பெறுமா? என்கிற சிந்தனைகளும் வருகிறது. அதற்கு விடை தேடி செல்வோம்..

மதுரைக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பு என்னவெனில் மதுரை லோக்சபா தொகுதிக்கு இதுவரை நடைபெற்று ள்ள 16 லோக்சபா தேர்தலில் 13 முறை தேசிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் காங்கிரஸ் 8 முறையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் 4 முறையும் ஜனதா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தமிழகத்தில் 50 வருடங்களாக ஆட்சி பொறுப்பில் இருக்கும் திமுக அதிமுக இரு கட்சிகளும் ஒரே ஒரு தடவை மட்டுமே ஜெயித்துள்ளதால் மதுரை திராவிட த்தின் அடையாளமாக இல்லாமல் தேசியத்தின் உறைவிடமாக உள்ளது.

டாக்டர் சுப்ரமண்ய சுவாமி கூட 1998 பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி அதிமுக கூட்டணியில் ஏர்உழவன் சின்னத்தில் நின்று சுமார் 2லட்சத்து ,66 ஆயிரம் ஓட்டுக்களை பெற்று திமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளரை சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ள்ளார் என்பதில் இருந்து மதுரை தேசியத்தின் அடையாளமாகவே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மதுரையில் அதிமுகவுக்கு திமுகவை விட அதிக செல்வாக்கு இருக்கிறது கடந்த 2014 லோக்சபா தேர்தலில் 4,54,167 ஓட்டுக்களை அதிமுக பெற்று சுமார் 2 லட்சம் ஓட்டுக்கள் வித்தியா சத்தில் திமுகவை தோற்கடித்து உள்ளது. அதே நேரத்தில் பிஜேபி கூட்டணி யில் போட்டியிட்ட தேமுதிக 1,47,300 ஓட்டுக்களை பெற்றது.

இது முழுமையாக தேமுதிக வுக்கு கிடைத்த ஓட்டுக்கள் கிடையாது. மாறாக பாதிக்கும் மேலாக பிஜேபி மூலமாக தேமுதிகவுக்கு கிடைத்த ஓட்டுக்களாகும் இதனால் மதுரையில் அதிமுக திமுகவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் பிஜேபி தான் இருக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் 30 ஆயிரம் ஓட்டுக்களை பெறவே முக்கி் போட்டதை பார்க்கும்
பொழுது தேசிய கட்சி களில் பிஜேபி க்கு தான் மதுரையில் செல்வாக்கு இருக்கிறது.

அதனால் தான் பிஜேபி மதுரையை முன் வைத்து எய்ம்ஸ் ஹாஸ்பிடல் சென்னை மதுரை இடையே தேஜாஸ் ரயில் மதுரையை சுற்றி கட்டப்பட்டு வரும் நீண்ட பாலங்கள் என்று மதுரை பிஜேபி ஆட்சியினால் நவீன நகரமாகி கொண்டு வருகிறது.

இது மேலும் விரிவடைய வேண்டும் என்றால் மதுரையில் பிஜேபி வெற்றி பெற்றாலே சாத்திய மாகும்.இதற்கு வலு சேர்ப்பது போல ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மதுரையில் போட்டியிட லாம் என்று செய்திகள் வருகின்றன

மதுரை மண்ணில் பிறந்து அன்னை மீனாட்சியின் அருள் பெற்று வளர்ந்து திருச்சியில் கல்வி கற்று ஆந்திராவில் திருமணம் செய்து டெல்லிவாசியாகி விட்ட நிர்மலா சீதாராமனை பிறந்த இடம் நோக்கி மோடி அனுப்பி வைக்க நினைப்ப தன் முக்கிய காரணம் என்னவெனில் இவரை வைத்து தான் பிஜேபி தமிழக அரசியலை கைப்பற்ற நினைக்கிறது.

அதாவது வருங்கால ங்களில் பிஜேபி யின் முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமனை தமிழகத்தில் முன் நிறுத்தவே அவரை மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட வைத்து தமிழக அரசியலில் வலம் வர வைக்கிறார்கள் என்றே நினைக்க தோன்றுகிறது..

ஒரு வேளை நிர்மலா மதுரையில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் போட்டி யிட வா ய்ப்பு கள் உள்ளதால் நிர்மலா அமோக வெற்றி பெறுவார் என்பது உறுதி. அது மட்டுமல்ல நிர்மலா இன்றி மகாலட்சுமி என்று பிஜேபி யில் யார் போட்டியயிட்டாலும் இந்த முறை மதுரையில் பிஜேபி வெற்றி பெறுவது உறுதி..

அதாவது தாமரை நகரில் தாமரை மலர்வது உறுதியாகி விட்டது…

விஜயகுமார் அருணகிரி

Related Posts

error: Content is protected !!