ஏவிஎம்-மின் ‘அந்த நாள்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! – ரஜினி வெளியிட்டார்!

ஏவிஎம்-மின் ‘அந்த நாள்’  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! – ரஜினி வெளியிட்டார்!

ஏவிஎம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் “அந்த நாள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், “அந்த நாள்” படம் வெற்றி பெறவும் வாழ்த்து கூறினார். அந்த நிகழ்ச்சியில் ஏவி.எம்.சரவணன், இயக்குநர் S.P. முத்துராமன், கதாநாயகன் ஆர்யன் ஷாம், அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குநர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் R. ரகுநந்தன் தயாரிக்கிறார்.

இந்நிகழ்வு குறித்த செய்தியை அனுப்பிய பி ஆர் ஓ பெருந்துளசி பழனி வேல் நம்மிடம்,”தமிழ் திரைப்படங்களில் பத்து, இருபது பாடல்கள் நிரம்பி வழிந்த 1950-களில் பாடல்கள் மட்டுமல்லாது, சண்டைக்காட்சிகளும் இல்லாமல் வந்த திரைப்படம் `அந்த நாள்.’ சுந்தரம் பாலசந்தர் இயக்கிய இப்படத்தில், பாடல்களே இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில்கூட `பின்னணி இசை : ஏவி.எம் இசைக்குழு’ என்று மட்டும்தான் காட்டப்படும். மேலும், `அந்த நாள்’தான் நோயிர் (noir) என்று அழைக்கப்படும் இருண்டவகைப் படங்களில் வந்த முதல் தமிழ்த் திரைப்படமாகும்.

அதாவது சிவாஜி சார் Anti Hero வாக நடித்த படம். மர்மான முறையில் சிவாஜி சுடப்பட்டு இறந்து இருப்பார். கொலைகாரன் யார் என்று கண்டுபிடிக்க போலீஸ் செய்யும் முயற்சிகள் / களவிசாரணை தான் கதை. பண்டரிபாய் சிவாஜியின் மனைவி. எதிர்பாராத விதமான கிளைமாக்ஸ். இன்றைய சினிமாவிற்கு சற்றும் சளைக்காத திரைப்படம். இப்பொழுது பார்த்தாலும் பாராட்ட தோன்றும். நாட்டுப்பற்று மிக்க ஆக சிறந்த ஒரு கிரைம் த்ரில்லர் வகை படைப்பு என்றால் மிகை அல்ல. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் கட்டாயம் பார்க்க விரும்பும் ஒரு படம்” என்று சொல்லி அப்படி யாப்பட்ட டைட்டிலில் மறுபடியும் ஒரு படம் வருவதும் , அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினி ரிலீஸ் செய்ததாலும் சகல தரப்பிலும் எதிர்ப்பார்ப்பு எகிறி இருக்கிறது” என்றார்

error: Content is protected !!