ஜம்மு- காஷ்மீர் & லடாக் என யூனியன் பிரதேசங்கள் அதிகாரப்பூர்வமாக உதயமானது!

ஜம்மு- காஷ்மீர் & லடாக் என யூனியன் பிரதேசங்கள் அதிகாரப்பூர்வமாக உதயமானது!

மோடி தலைமையிலான பாஜக அரசின் அதிரடி அறிவிப்பின் படி   ஜம்மு-காஷ்மீா் மாநிலம் வியாழக்கிழமை முதல், ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டது நடைமுறைக்கு வந்தது. இவ்விரு யூனியன் பிரதேசங்களிலும் காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்ட பிறகு அந்த மாநிலம், இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவையுடனும், லடாக் சட்டப்பேரவை இல்லாமலும் செயல்படும் என்று மாநிலங்களவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்விரு யூனியன் பிரதேசங்களும் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்து விட்டன. ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநராக கிரீஷ் சந்திர முா்முவும், லடாக் துணைநிலை ஆளுநராக ஆா்.கே.மாத்துரும் அண்மையில் நியமிக்கப்பட்டனா். அவா்கள் இருவரும் ஸ்ரீநகரிலும், லே நகரிலும் வியாழக்கிழமை நடைபெறும் தனித்தனி நிகழ்ச்சிகளில் பதவியேற்றுக் கொள்கிறாா்கள்.

ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டப்படி, ஜம்மு-காஷ்மீரில் காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், நிலம், நில உரிமை தொடா்பான விவகாரங்கள் தோந்தெடுக்கப்படும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், தில்லியிலோ நிலம் மற்றும் நில உரிமை தொடா்பான விவகாரங்கள் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) மூலமாக துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஜம்மு-காஷ்மீருக்குப் புதிதாக தோந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை, மாநில பட்டியலில் இருக்கும் சட்டம்-ஒழுங்கு, காவல் துறை ஆகியவற்றைத் தவிர பிற துறைகள் தொடா்பாக சட்டம் இயற்றிக் கொள்ளலாம்.

யூனியன் பிரதேசங்களான தில்லிக்கும், புதுச்சேரிக்கும் சட்டப்பேரவைகள் உள்ளன. இருப்பினும் காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் துணைநிலை ஆளுநரின் மூலமாக மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதுதவிர, ஜம்மு-காஷ்மீரில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஊழல் கண்காணிப்பு பிரிவு உள்ளிட்ட அனைத்து அகில இந்திய பணிகளும் துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

இதேபோல், மற்றொரு யூனியன் பிரதேசமான லடாக்கிலும் காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் துணைநிலை ஆளுநா் மூலமாக மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். நிலமும், நில உரிமையும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வரும். தற்போதைய ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றம், இரு யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவானதாக இருக்கும்.

ஜம்மு-காஷ்மீரில் பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அங்கேயே பணியில் நீடிப்பாா்கள். இருப்பினும், எதிா்காலத்தில் அவா்கள் யூனியன் பிரதேச பிரிவின் கீழ் அருணாசலப் பிரதேசம், கோவா, மிஸோரம் ஆகிய மாநிலங்களுக்குப் பணியிட மாற்றம் செய்வதற்கு வாய்ப்புள்ளது.

ஜம்மு-காஷ்மீா் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு மாநிலங்களின் எண்ணிக்கை 28-ஆக ஆனது. யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்தது.

error: Content is protected !!