சமையல் சிலிண்டருக்கான மானியம் ரத்தாகப் போகுது!

சமையல் சிலிண்டருக்கான மானியம் ரத்தாகப் போகுது!

மானியமில்லா சிலிண்டர் விலை சென்னையில் 574 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மானிய விலை சிலிண்டர் விலை 465 ரூபாய் 56 காசுகளாக உள்ளது. தற்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானிய விலையில் 12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் தேவைப்பட்டால் சந்தை விலையில் பெற்றுக்கொள்ள வேண்டும் எண்ணெய் நிறுவனங்கள் எல்.பி.ஜி. சிலிண்டர்கள் விலையை மாதந்தோறும் 2 ரூபாய் உயர்த்திக் கொள்ள மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் மக்களவையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் எழுத்து மூலம் அளித்த பதிலில் மானிய சிலிண்டர்கள் விலையை கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மாதந்தோறும் 4 ரூபாய் உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து இவ்வாறு மாதம் தோறும் 4 ருபாய் விலை உயர்த்தப்பட்டால் மானியம் படிப்படியாகக் குறைந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மானியம் முற்றிலுமாக குறைக்கப்பட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தை விலைக்கு ஈடாகிவிடும் என்றும் அவர் கூறினார்.

தர்போதைய நிலையில் நாடு முழுவதும் சுமார் 18 கோடியே 11 லட்சம் பேர் மானிய விலையில் சிலிண்டர் பெற்று வருகின்றனர். கடந்த 2015-ல் சிலண்டருக்கு ரூ.366-ஆக இருந்த மானியம் தற்போது ரூ.125-ஆக சரிந்து விட்டது. என்பதும்கடந்த 5 மாதங்களில் மையல் சிலிண்டரின் விலை இதுவரை ரூ.32 வரை உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!