நீதியைவிட, நிதி வேகமாக வந்து சேர்ந்திருக்கிறது!
இதைத்தான் சொல்லத் தோணுது.. தூத்துக்குடி மாவட்டத்தில் பட்ட பகலில் ஒரு கும்பல் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்தில் புகுந்து அவரை வெட்டி சாய்க்கிறது.!மணல் கொள்ளை பற்றி மேலிடத்துக்கு அவர் புகார் தெரிவித்ததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது கொலையாளிகளை பிடிக்க நான்கு தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

படுகொலை விஷயத்தில் அவசர அவசரமாக நடந்தது என்னவென்றால், கொல்லப்பட்ட அரசு ஊழியரின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் அவரது குடும்பத்தில் அரசு வேலை வாய்ப்பு.
நீதியைவிட, நிதி வேகமாக வந்து சேர்ந்திருக்கிறது.
எதேச்சையாக நடைபெறும் கொலைக்கும் திட்டமிட்டு நடத்தப்படுகிற கொலைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதிலும் திட்டமிட்ட கொலை எனும் போது, இடம் காலம் உள்பட எதையுமே பொருட்படுத்தாமல் செய்கிறார்கள் என்றால், அங்கு எதிர்வினையைப் பற்றி எந்த கவலையும் இல்லை என கொலையாளிகளுக்குள் ஊறுகிற மமதைதான் முக்கியமான விஷயம்.
இதை ஒழிக்க வேண்டியது தான் அரசின் முதற்கடமை. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் தலை தூக்காத அளவிற்கு நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும்.
இன்னொரு முக்கியமான விஷயம், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அரசு தரப்பில் இருந்து உடனே அள்ளி வீசப்படும் நிவாரணங்கள்..
பனிக்கால பலன்கள், ஒரு கோடி இழப்பீடு, அரசு வேலை வாய்ப்பு..
எதிர்கால பேராசைகளுக்கு அரசே வித்திட்டு விடக்கூடாது..
தனி மனிதன் உணர்ச்சி வசப்படலாம் அரசு உணர்ச்சிவசப்படக் கூடாது..!


