துல்கர் சல்மான் நடிக்கும் சோலோ-வில் நாலு நாயகிகள்!

துல்கர் சல்மான் நடிக்கும் சோலோ-வில் நாலு நாயகிகள்!

வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி படங்களில் நடித்த துல்கர் சல்மான் தமிழில் நடிக்கும் மூன்றாவது படம்தான் ‘சோலோ’ . விக்ரம், ஜீவா இருவரையும் இணைத்து தமிழில் ‘டேவிட்’ என்கிற படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இது உருவாகிறது. இந்தப்படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்…இது நான்கு குறும்படங்களை இணைத்து உருவாகும் ஆந்தாலாஜி வகை படமாக இருந்தாலும், அந்த நான்கிலும் துல்கர் சல்மானே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாவதால் கிட்டத்தட்ட எட்டு படங்களில் நடித்தது போன்ற களைப்பு ஏற்பட்டதாக கூறியிருந்தார் துல்கர் சல்மான்.

மேலும் ‘சோலோ’ படத்தில் 11 இசையமைப்பாளர்கள், 15 பாடல்கள் மற்றும் மூன்று ஒளிப்பதிவாளர்கள் என்ற அறிவிப்பு எல்லோரின் கவனத்தையும் சட்டென்று ஈர்த்தது.பெஜாய் நம்பியார் இயக்கத்தில், துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் கதாநாயகிகள் பற்றிய அறிவிப்பு தற்பொழுது வெளிவந்து ரசிகர்களிடையே உள்ள ஆர்வத்தை மேலும் கூடியுள்ளது. நான்கு கதாபாத்திரங்களில் துல்கர் தோன்றவுள்ள ‘சோலோ’ படத்தில் நேஹா சர்மா, சாய் தன்ஷிகா, சுருதி ஹரிஹரன் மற்றும் ஆர்த்தி வெங்கடேஷ் ஆகியோர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர் என்ற செய்தியை துல்கரே அவரது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

கதாநாயகிகளுடனான காதல் காட்சிகளில் ஜொலிப்பதில் பெயர் போன துல்கர் சல்மானுக்கு இப்படத்தில் நான்கு கதாநாயகிகள் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. ‘The Refex Group’ சார்பில் ‘Refex Entertainment’ இப்படத்தை ‘Getaway Films’ உடன் சேர்ந்து தயாரித்துள்ளது. ‘சோலோ’ படத்தின் post production பணிகள் மிக வேகமாக நடந்துக்கொண்டிருக்கின்றது.

error: Content is protected !!