32°C

திரௌபதி 2: விமர்சனம் – மண்ணையும் பெண்ணையும் காக்க வந்த வீர வரலாறு!

admin Published: January 24, 2026 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து:

ரு சினிமாவை கதையே இல்லாமல் கூட எடுத்துவிடலாம். ஆனால், வரலாற்றுப் பின்னணி கொண்ட, நம்மை ஆண்ட சிற்றரசர்கள் குறித்த படத்தைச் செய்ய பெரும் உழைப்பு தேவை. பொருத்தமான நடிகர்கள், கலை இயக்கம், இசை என அனைத்தும் சரியாக அமைந்தால் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில், ஒரு ‘பெர்பெக்ட்’ டீமை உருவாக்கி ‘திரௌபதி 2’ படத்தை வழங்க முயன்றிருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி.

2020-ல் நாடகக் காதலை மையமாக வைத்து வெளியாகித் தாக்கத்தை ஏற்படுத்திய ‘திரௌபதி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே பெயரில் ஒரு வரலாற்றுப் புனைவை இதில் கையாண்டுள்ளார் இயக்குனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வரலாற்றுப் பின்னணி & கதைக்களம்

சேர, சோழ, பாண்டியர்களைத் தாண்டி, பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தை அந்நியப் படையெடுப்புகளிலிருந்து காத்து நின்ற வல்லாளர், காடவராயர், சம்புவராயர், கச்சிராயர், உடையார்பாளையம் அரசர்களின் பெருமைகளைத் திரையில் கொண்டுவர முயன்றுள்ளது இப்படம்.

கதைச் சுருக்கம்:  விழுப்புரம் அருகே உள்ள சேந்தமங்கலம் என்னும் ஊரில், அந்த கிராமத்துக்கு சொந்தமானவரின் நிலம் திடீரென வக்ஃப் வாரியத்துக்கு சொந்தம் என அறிவிக்கப்படுகிறது. அதை எதிர்த்து நாயகன் ரிச்சர்டு ரிஷியும் அந்த ஊர்க்கார்களும் ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுக்கின்றனர். அதை வெளிநாட்டில் இருக்கும் அந்த ஊரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பார்க்கிறார். உடனே அவர் ஊரில் உள்ள பாழடைந்த இந்து கோயிலை புனரமைக்க உதவுவதாக கூறி, தனது மகள் ரக்ஷனா இந்துசூடனை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார். நாயகன் – நாயகி இருவரும் அந்த பாழடைந்த கோயிலுக்கு செல்ல, கதையும் 13ஆம் நூற்றாண்டுக்கு செல்கிறது. அந்நாளில், முகமது பின் துக்ளக் (சிராக் ஜானி) மதமாற்ற முயற்சிகளிலும், எதிர்ப்பவர்களைக் கொல்லும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக இருக்கிறார். அவரை எதிர்த்து நிற்கும் வல்லாள மகாராஜா (நட்டி நடராஜ்) மற்றும் அவரது விசுவாசமிக்க தளபதி வீரசிம்ம காடவராயன் ஆகியோரின் வீரப்போராட்டமே இந்த திரௌபதி 2  படத்தின் கதை.

நடிப்பு மற்றும் தொழில்நுட்பம்

  • ரிச்சர்ட் ரிஷி: காடவராயனாகத் திரையில் மிரட்டியிருக்கிறார். போர்க்களக் காட்சிகள் மற்றும் வசன உச்சரிப்பில் தன்னை ஒரு  நடிகராக நிரூபிக்க இன்னும் நிறைய பயிற்சி .

  • பிற நடிகர்கள்: நட்டி நடராஜ், வேல ராமமூர்த்தி என அனுபவ நடிகர்கள் இருந்தும், பல கதாபாத்திரங்களுக்கு வலுவான காட்சிகள் இல்லாதது சற்றே ஏமாற்றம். நாயகி தீயில் தோன்றிய திரௌபதியாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

  • தொழில்நுட்பம்: குறைந்த செலவில் AI, CG, VFX மற்றும் லைவ் லொகேஷன் எனப் பல நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பிரம்மாண்டத்தைக் காட்டியுள்ளனர். ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்குப் பெரும் பலம்.

நிறைகளும் குறைகளும்

நிறைகள்:

  • தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றையும், சிற்றரசர்களின் வீரத்தையும் பதிவு செய்திருக்கும் .

  • 14-ஆம் நூற்றாண்டின் கோட்டைகள், படைகள் மற்றும் அரண்மனைகளைத் திரையில் கொண்டு வர AI மற்றும் நவீன கேமரா தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  • ஆட்சியாளர்களின் கொடூரங்கள், குறிப்பாகக் கட்டாய மதமாற்றம் மற்றும் அதற்கு அவர்கள் கையாண்ட மிரட்டல் முறைகள் பகீரென்கிறது.  குறிப்பாக மதமாறினால் வரி கட்டத் தேவையில்லை என்ற ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டதையும், அதற்கு மறுத்தவர்கள் அனுபவித்த சித்திரவதைகளையும் நெஞ்சை உலுக்கும் வகையில் இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார்.

  • “மண்ணையும் பெண்ணையும் தொட்டவனுக்குத் தண்டனை” என்ற கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்திருப்பது.

  • திருவண்ணாமலை, சேந்தமங்கலம் போன்ற இடங்களின் அழகான காட்சிப்பதிவு.

குறைகள்:

  • திரைக்கதை இன்னும் இறுக்கமாக இருந்திருக்கலாம்; சில காட்சிகள் பாதியில் முடிந்தது போன்ற உணர்வு தருகிறது.

  • பெரிய பட்ஜெட் வரலாற்றுப் படங்களோடு ஒப்பிடும்போது VFX காட்சிகள் இன்னும் மேம்பட்டிருக்கலாம்.

  • வரலாற்றுத் தரவுகளில் நிலவும் குழப்பங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மோசமாகச் சித்திரிக்க முயன்ற விதம் விமர்சனத்திற்குரியது.

இது ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்றும், துல்லியமான வரலாறு இல்லை என்றும் படக்குழுவே கூறிவிட்டது.  ஆனாலும் சில வரலாற்றுப் பிழைகள், வசன பிழைகள் மற்றும் கருத்து ரீதியான விமர்சனங்கள் இருந்தாலும், தமிழர்கள் தங்கள் அடையாளத்தையும், வீர வரலாற்றையும் தெரிந்து கொள்ள உதவும் ஒரு துணிச்சலான முயற்சி இந்த ‘திரௌபதி 2’.

மதிப்பீடு: 3.25 / 5