வங்கிகளில் இருந்து இஷ்டத்துக்கு பணம் எடுக்கத் தடை!
அதிகரித்துக் கொண்டே போகும் கோரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கைக் குறைக்க வும், தொற்றாளிகள் குணம் பெறவும் அரசும் ஏதேதோ ஏற்பாடுகள் செய்து வருகின்றன . அதன் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கிக் கிளைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் நாள்தோறும் 2 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், ஏடிஎம் மையங்களில் ஒரு நபர் பயன்படுத்திய பின்னர் உடனடியாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் பணிக்கு வரும் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிதல், அலுவலகங்களில் சமூக இடைவெளி கடைப் பிடித்தல் மற்றும் அவ்வப்பொழுது கிருமி நாசினி அல்லது சோப்பு கொண்டு கைகளை சுத்தமாக கழுவுதல் ஆகியவற்றை அந்தந்த நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும்.
கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளுக்காக தனியாக பணியாளர்களை அந்தந்த நிறுவனங்களே நியமிக்க வேண்டும். தங்களின் அலுவலகங்கள் குறித்த விவரம், கிருமி நாசினி இயந்திரங்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த விவரங்களை பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலருக்கு arohqprop@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 9445190742 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் மே 1–ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அனைத்து அலுவலகங்களும் அவ்வபோது சுகாதரத்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்படும். தவறும் நிறுவனங்கள் மீது தொற்று நோய் சட்டம் 1897 பிரிவு 2 ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என்றெல்லாம் மாநகராட்சி சார்பில் அர்டிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கிகளின் ஏ டி எம் மற்றும் கவுண்டர் மூலம் பணம் எடுப்பதற்காக புதிய விதிமுறைகளை வங்கிகளின் சங்கம் அறிவித்துள்ளது.
ஆம் இந்த ஊரடங்கு மூன்றாம் முறையாக் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் பணத்தை எடுக்க வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கும் ஏடிஎம் மையங்களுக்கும் திரள்வதைத் தவிர்க்க ஏடிஎம் உள்ளிட்ட மின்னணுப் பரிமாற்றங்கள் வழியாக பணப்பரிமாற்றம் செய்யும்படி வாடிக்கை யாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பணம் எடுப்பதற்கான நாட்களை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து வருகின்றன.
அதன்படி வங்கிக் கணக்கில் பூஜ்யம் மற்றும் 1 ஆகிய எண்களை கடைசி எண்ணாக வைத்து உள்ள வாடிக்கையாளர்கள் மே 4ஆம் தேதி பணம் எடுக்கலாம். இதேபோல் கடைசி எண் 2 அல்லது 3 வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மே 5ஆம் தேதியும் 4 மற்றும் 5 எண் கடைசி எண்ணாக கொண்ட வாடிக்கையாளர்கள் மே 6ஆம் தேதியும் பணம் எடுக்கலாம் . இதே போன்று கடைசி எண் 6, அல்லது 7 கொண்டோர் 8ஆம் தேதியும் 8 அல்லது 9 கொண்டவர்கள் 11ஆம் தேதியும் பணம் பெறமுடியும்.
இந்த கட்டுப்பாடுகள் மே 11 வரை அமலில் இருக்கும். மே 11க்குப் பின்னர் எந்த வாடிக்கை யாளரும் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம் என்று வங்கிகளின் சங்கம் தெரிவித்துள்ளது



