நாட்டில் 66 ஐ பி எஸ் ஆபீசர்கள் மீது கிரிமினல் வழக்கு!
நம் இந்தியா முழுமைக்கும் முழுமைக்கும் 4,802 ஐ.பி.எஸ் பணியிடங்களில் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3,894 ஐ.பி.எஸ் பணியிடங்களில் மட்டுமே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீதமுள்ள 908 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் அதிகபட்சமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் 114 ஐ.பி.எஸ் பணியிடங்களும், மேற்கு வங்கத் மாநிலதில் 99 ஐ.பி.எஸ் , ஒடிசா மாநிலத்தில் 79 ஐ.பி.எஸ் , கர்நாடக மாநிலத்தில் 72 ஐ.பி.எஸ் , பீகார் மாநிலத்தில் 42 ஐ.பி.எஸ் பணியிடங்களும் காலியாக உள்ளதாக கடந்த பார்லிமெண்ட் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இதே இந்தியா முழுதும் 66 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் அதிகம்தகவல் அறியும் சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் நுதன் தாக்கூர் என்பவர் கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பதில்: இந்தியா முழுதும் 66 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 13 பேர் மீதும், தமிழகத்தில் 8 பேர் மீதும், குஜராத்தில் 7 பேர் மீதும், மணிப்பூர் மற்றும் திரிபுராவில் 4 பேர் மீதும், யூனியன் பிரதேச கேடரை சேர்ந்த 4 பேர், ஆந்திரா, பீஹார், காஷ்மீர், கர்நாடகா, சிக்கிம் மற்றும் உ.பி.,யில் தலா ஒருவர் மீதும் கிரிமினல் வழக்கு உள்ளது.
வழக்கு இல்லை
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு ஏதுமில்லை. என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது



