ஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது!

ஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை திங்களன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை ஒரு வருடத்திற்கு 30 சதவீதமாக குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தொகை கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைக்கு நிதியாகப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்த அதிகமான அளவு நிதி தேவைப் படுவதால் இரண்டு ஆண்களுக்கு எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரை மையமாகக் கொண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வசதி மூலம் உரையாடி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலம் இன்று நடந்தது. அவருடன் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷ உள்ளிட்டோரும் பங்கேற்றனர். வேறு சில அமைச்சர்கள் ஆங்காங்கே காணொலியில் இணைந்தனர். கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது இதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் மாநில அரசுகளுடன் இணைந்து கொரோனா ஒழிப்பு பணியை மேற்கொள்வது பற்றியும் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ”ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மற்றும் மாநில ஆளுநர்களும் 30 சதவீத ஊதியத்தை குறைக்க முன்வந்துள்ளனர்.இதை அடுத்து இன்று பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த நீண்ட போரில் அரசும், அதன் மக்களும் சோர்வடையவோ ஓய்வெடுக்கவோ முடியாது இந்த பணம் இந்திய ஒருங்கிணைந்த நிதிக்கு செல்லும். சம்பள குறைப்பு நடைமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஓராண்டுக்கு இந்த திட்டம் அமலில் இருக்கும்.”என்று ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!