கல்லூரிகளில் NCC யை விருப்ப பாடமாக சேர்க்க அனுமதி!

கல்லூரிகளில் NCC யை விருப்ப பாடமாக சேர்க்க அனுமதி!

தேசிய மாணவர் படை குறித்து, கல்லுாரிகளில் விருப்பப் பாடமாக சேர்த்துக் கொள்ள, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க உதவுவது தேசிய மாணவர் படை (National Cadet Corps). சாதாரண மாணவர்களுக்கு அர்ப்பணிப்பு, ஒழுக்கம், ஈடுபாடு, கட்டுப்பாடு, தேசப்பற்று போன்றவற்றைக் கற்பித்து சிறந்த குடிமகன்களையும் குடிமகள்களையும் உருவாக்குவதில் என்.சி.சி. முக்கியப் பங்காற்றுகிறது.என்.சி.சி. தானே! மைதானத்தில் 10 முறை ஓடச்செய்வார்களே அது தானே என்று நினைப்போம். அது மட்டுமேயல்ல என்.சி.சி. வாழ்வில் எப்படிப்பட்ட சூழ்நிலையயும் எதிர்த்துப் போராடும் உடல் வலுவையும் மன வலுவையும் அளிக்க முயல்கிறது என்.சி.சி.

ஆரம்பத்தில் மாணவர்களைச் சோதிக்க மைதானத்தில் ஓடுதல், குப்பைகளை அகற்றுதல், கனமான பொருட்களைத் தூக்குதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளச் செய்வார்கள். பலர் துவண்டு விழுந்துவிடுவார்கள். சிலர் மட்டுமே எந்தச் சவாலையும் சந்திக்கத் தயாராவார்கள். ஆக பல நல்ல அனுபவங்களை அளிக்கும் என்.சி.சி. மூலம் ராவணுவத்திலோ கப்பல் படையிலோ விமானப்படையிலோ சேர முடியும். அதற்கு என்.சி.சி. ‘சி’ சான்றிதழ் மட்டும் இருந்தால் போதும்.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின்படி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களின் இளநிலை பட்டப் படிப்பில், முதன்மை பாடங்கள் மட்டுமின்றி, பாடத்தொகுப்பு சாராத பிற பாடங்களையும் விருப்பப் பாடமாக எடுக்க வேண்டும். இதற்கு, ‘கிரெடிட்’ என்ற கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். இந்த மதிப்பெண், மாணவர்களின் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல், கிரேடு மற்றும் தரவரிசையில் கணக்கில் எடுக்கப்படும். இந்த வகையில், என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படை குறித்து, கல்லுாரி மாணவர்கள் விருப்பப் பாடமாக எடுத்துக் கொள்ளலாம் என, பல்கலை மானியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

‘கல்லுாரிகளில் தேசிய மாணவர் படையில் அங்கம் வகிக்கும் மாணவர்கள் மட்டும், இந்த விருப்பப் பாடத்தை தேர்வு செய்யலாம். பிரதான மதிப்பெண் பட்டியலில், விருப்பப் பாட கிரெடிட் மதிப்பெண்ணையும் சேர்க்கலாம்’ என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

error: Content is protected !!