காலேஜ் ரோடு -விமர்சனம்

காலேஜ் ரோடு -விமர்சனம்

சும்மா நேரம் இருக்கும் போது இந்தியாவின் கல்வி தந்தைகள் குறித்து சர்ச் செய்து பாருங்களேன்.. அதிர்ந்து போய் விடுவீர்கள்.. அதே சமயம் கல்லூரிகளில் சேர வங்கிக் கடன் கேட்டு நொந்து போனோர் பட்டியல் ஒரு பக்கமும்,அப்படி வாங்கிய கல்விக் கடனைக் கட்ட முடியாமல் விழி பிதுங்கி போனோர் பட்டியலும் கூட கூகுளில் கிடைக்கும்.. கிடைக்கவில்லையா? நோ பிராபளம். டைரக்டர் ஜெய் அமர் சிங் இயக்கத்தில் லிங்கேஷ், ஆனந்த் நாக், மோனிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான காலேஜ் ரோடு போய் பாருங்கள். அது கல்லூரி வாழ்க்கையில் நாம் எல்லோரும் கடந்து வந்த நட்பு, காதல் போன்றவற்றை பிரதிபலிக்கும் படமாக காலேஜ் ரோடு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதையும் தாண்டி இப்படம் தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு விஷயத்தை பேசுகிறது. கூடவே பள்ளிப் படிப்பை முடித்த ஏழை, எளிய மாணவர்கள் தங்களின் கல்லூரிப் படிப்புக்காக முதலில் நாடுவது கல்விக் கடன் தான். ஆனால் அனைத்து ஏழை மாணவர்களுக்கும் கல்விக் கடன் கிடைத்து விடுவது இல்லை. ஏழை மாணவர்களுக்கு கிடைக்காத கல்விக் கடன் பற்றியும் கல்விக் கடன் கொடுக்க வேண்டிய வங்கிகள் கடன் வாங்கிய மாணவர்களை எப்படி நடத்துகிறது என்பதை பற்றியும் விரிவாக இந்த காலேஜ் ரோடு திரைப்படம் பேசுகிறது. .!

கதை என்னவென்றால் நாயகன் லிங்கேஷ் ஒரு பெரிய கல்லூரியில் படிக்கிறார் , அப்போது அங்கே ஒரு ப்ராஜெக்ட் செய்கிறார் , ரிவர்ஸ் ஹாக்கிங் என்பதுதான் அந்த ப்ராஜெக்ட் . இது ஒருபுறம் இருக்க நகரின் பல்வேறு வங்கிகளில் தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறது , இப்படி நடக்கும் ஒரு வங்கி கொள்ளையை கதையின் நாயகன் லிங்கேஷ் பார்த்துவிடுகிறார். அதை அடுத்து இவரை சாட்சியாக வைத்து போலீஸ் கொள்ளையர்களை தேடுகின்றனர். அந்த தொடர் துப்பரிதலின் போது வங்கிக் கொள்ளைக்கான காரணம் என்ன என்பதையும், கல்வி எப்படியானவர்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் பல புதிய திடுக்கிடும் தகவல்களோடு விரிவாக பேசுகிறது காலேஜ் ரோடு திரைக்கதை

ஹீரோ லிங்கேஷ் இதில் நல்ல முதிர்ச்சியான நடிப்பை கொடுத்துள்ளார். உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவரது இயல்பான மேலும் அழுத்தம் படத்துக்கு வலு கொடுக்கிறது. நாயகியின் பாத்திரம் சிறியது என்றாலும் கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார். லிங்கேஷின் கிராம நண்பர்களாக வரும் நால்வரும் நல்ல தேர்வு. கல்லூரி நண்பராக வருபவரின் கேரக்டரும் அவரின் நடிப்பும் அருமையாக அமைந்துள்ளது. காமெடிக்கென தனி ட்ராக் இல்லாமல் கதையோடே இணைத்துள்ளார் இயக்குநர். காமெடியில் ஒருவர் மட்டும் கவனம் ஈர்க்கிறார்

யூத்புஃல்லாக ஆரம்பிக்கும் முன்பாதியில் ஒளிப்பதிவாளர் வண்ணங்களை அழகாக இணைத்து விஷுவலாக படத்திற்கு எனர்ஜி ஏற்றியுள்ளார். இசை அமைப்பாளர் ஆப்ரோ தன் வேலை செவ்வனே செய்துள்ளார். படத்தில் வரும் மிக முக்கியமான ப்ளாஸ்பேக் சீக்வென்ஸில் பின்னணி இசை அருமையாக அமைந்துள்ளது

மொத்தத்தில் எளியவர்களுக்கு கல்வி எட்டாக்கனி ஆகிவிடக்கூடாது என்ற கருத்தை தன் முதல் படத்திலே அக்கறையோடு பதிவு செய்த இயக்குநர் ஜெய் அமர் சிங் பாராட்டுக்குரியவர். சிறிய பட்ஜெட்டிலும் இவ்வளவு பிரம்மாண்டத்தையும் நம்பகத்தன்மையையும் மேக்கிங்கில் கொண்டு வந்தது நிச்சயமாக ஆச்சர்யம். ஒரு நல்ல கருத்தை தாங்கி வந்துள்ள காலேஜ்ரோடு நிச்சயமாக பார்க்க வேண்டிய படம்

இசை – ஆப்ரோ
ஒளிப்பதிவு- கார்த்திக் சுப்ரமணியம்.
எடிட்டர்- அசோக்

மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அறுவிபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

MP எண்டர்டெயின்மெண்ட் பிரவீன் மற்றும் சரத். இவர்களுடன் ஜனா துரைராஜ் மனோகர் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

error: Content is protected !!